இரண்டு கழிவறைகளை புதுப்பிக்க ரூ.35 லட்சம்: மத்திய திட்டக்கமிஷன் “தாராளம்“

நாறப்பசங்க நாம அவசரத்துக்கு பொதுசுவரை நாறடிச்சிட்டுத் திரியறோம்!பொது இடத்தில இருட்டுல டூ போயிட்டு கண்டுக்காம கிளம்பிடறாங்க நிறைய பேரு! இன்னும் சில பேரு கடற்கரையை  கழிப்பிடமா மாத்திடறாங்க!.
      சென்னை  சி.எம்.பி டி பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை நாத்தம் குடலை புரட்டுது! இருந்தாலும் சகிப்பு தன்மை மிக்க தமிழன் அதையும் சகிச்சிகிட்டு உள்ளே போய் சுகமா பிஸ் அடிச்சிட்டு வந்துடறான்.
   சிங்கார சென்னை மட்டுமல்ல! தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்னும் மக்களுக்கு கழிப்பிட வசதிகள் போதுமானதா இல்ல. பொது இடம் தான் பல இடங்களில் கழிப்பிடமா இருக்கு. சென்னை ரெட்டை ஏரி பஸ் ஸ்டாப் பக்கம் நிக்க முடியாத அளவு அசிங்கமா இருக்கு.
   எதுக்கு இதெல்லாம் சொல்றேன்னு கேக்குறீங்களா? இருங்க விசயத்துக்கு வந்துடறேன்! நம்ம திட்ட கமிஷன் இருக்கு இல்லே! அம்மா கூட ரெண்டு நாள் முன்னாடி கலந்துகிட்டு சும்மா வறுத்தெடுத்தாங்களே  அந்த திட்ட கமிஷன் தான். இதன் தலைவர் பலே கில்லாடி அலுவாலியா!
   இவர் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு நபர் 28 ரூபாய் ஒருநாளுக்கு சம்பாதிச்சா ஏழை இல்லேன்னு ஒரு அற்புதமான தத்துவத்தை எடுத்துவுட்டு மாட்டிகிட்டாரு. இப்ப ஒரு வம்புல மீண்டும் மாட்டிகிட்டாரு. டெல்லியில திட்ட கமிஷன் அலுவலகத்துல ரெண்டு கழிப்பறையை அதாங்க கக்கூஸ  ரிப்பேர் பண்ண 35 லட்சம் செலவு செஞ்சி மாட்டிகிட்டாரு அதன் விபரம் இதுதான்.
        மத்திய திட்டக்கமிஷன், டில்லியில் இரண்டு கழிவறைகளை புதுப்பிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இதில் கழிவறைகளை புதுப்பிக்க 30 லட்ச ரூபாயும், கழிவறைகளில் நவீன முறையிலான கதவு அமைக்க ரூ.5.19 லட்ச ரூபாயும் செலவழித்துள்ளது. இந்த கதவு பொருத்தப்பட்ட கழிவறைகளை ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி தான் பயன்படுத்த முடியும்.

சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலுக்கு, ஆணையம் அளித்த பதிலில் இரண்டு கழிவறைகளுக்கு நவீன கதவு பொருத்த ரூ.5,19,426 ரூபாயும், அந்த கழிவறைகளை புதுப்பிக்க ரூ. 30,00,305 செலவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த கழிவறைகளை பயன்படுத்த திட்டக்குழுவில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு 60 ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அந்த கழிவறை பகுதிகளில் சிறுசிறு திருட்டுக்களை தடுக்க, அங்கு செல்லும் வழியில் கண்காணிப்பு கேமராவை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கழிவறைகளுக்கான செலவீனங்களுக்கு மத்திய பொதுப்பணித்துறை அலுவலகம் அனுமதி கோரியதாகவும் திட்டக்குழு அதிகாரி ஒருவர் கூறினார்.

     ரெண்டு நிமிசம் உடல் கழிவை அகற்ற அதிகாரிகளுக்கு ஸ்மார்ட் கார்டு என்னா? கேமரா இன்னா? ஏசி இன்னா?   ஆனா பாவம் பொது ஜனம் இன்னும் நடு ரோட்டுலதான் பிஸ் அடிச்சிகிட்டு திரியறான்!
     நாடு இப்படி போனா? 2020ல மட்டுமல்ல 2220ல கூட விளங்க முடியாது!
இந்த கொடுமைய எங்க போயி சொல்ல! ஏதோ நம்மாளனது உங்க கூட பகிர்ந்துகிட்டேன்! பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணி உற்சாகப்படுத்துங்க! உங்க நண்பர்களோட ஷேர் பண்ணிக்கிங்க! வரட்டுங்களா?

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2