நான் ரசித்த சிரிப்புக்கள் 12
நான் ரசித்த
சிரிப்புக்கள் 12
1. என்னது அந்த செல்போன் கடைக்காரன் உன்கிட்ட ஓவரா ஜொள் விடறானா?
ஆமா ஈஸீ
ரீசார்ஜ் இருக்கான்னு கேட்டா, நம்பரை மட்டும் சொல்லுங்க நான் ஓசி ரீசார்ஜே பண்ணி
விடறேன்னு சொல்றான்!
-ஜெயாப்ரியன்.
2. நாம ஊரை
விட்டு ஓட முடியாதா? ஏன்?
எங்கப்பா ஸ்டேஷன் மாஸ்டர், எங்கண்ணன்
கண்டக்டர்!
அ.ரியாஸ் அகமது.
3.சென்ற
ஞாயிறன்று நள்ளிரவில் வந்த ஒரு கயவன் என்னை கெடுக்க முயற்சித்தான் மன்னா?
நீதான் அவனை துடைப்பத்தால் அடித்து
துரத்திவிட்டாயே கண்மணி!
சீர்காழி வி. ரேவதி
1. நம்ம மன்னரை வீரத்துல சிங்கம்னு சொன்னதுக்கு ஏன் இப்படி ஓடுறார்?
அவர் காதில ‘தூரத்துல சிங்கம்’ னு
விழுந்திருக்கும்!
எஸ். விஜயராணி
5.ஏண்டா
இண்டர்வியூக்கு போக மாட்டேன்னு அடம்பிடிக்கிறே?
நீங்கதானப்பா நாலு பேரு கேள்வி கேட்கிற மாதிரி
வச்சிக்காதன்னு சொன்னீங்க!
எப்.ஷர்புதின்.
6.உன்
தவத்தால் மகிழ்ந்தேன்! என்ன வரம் வேண்டும் என்று கேள்?
தமிழ்
நாட்டில் இனி பவர்கட்டே இருக்க கூடாது
முட்டாள்
பக்தனே! என் பவருக்கு உட்பட்ட வரமாய்
கேளு! முட்டாள் முட்டாள்!
எஸ் மோஹன்குமார்.
7. என்
குழந்தை பவர்கட்னாலே இருட்டுல இருந்து பழகிடுச்சு!
இப்ப அதுக்கு
என்ன?
குழந்தை இப்ப
வெளிச்சத்தை பார்த்தா பயப்படறான்!
வி.பார்த்தசாரதி.
8.உங்களை கல்யாணம்
செய்துகிட்டதுக்கு பதிலா ஒரு நாயை கல்யாணம் செய்து இருந்தா கூட நான் சந்தோஷமா
இருந்திருப்பேன்!
நான்கூட நாயைத்தான் கல்யாணம் செய்துகிட்டேன்.
நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன்?
எஸ். மோஹன்குமார்.
9.நம்ம கட்சி
பத்திரிக்கையிலே தினசரி மின்வெட்டு சம்பந்தபட்ட மேட்டர்களையே தலைவர் அதிகம்
பிரசுரிக்கிறாரே.. ஏன்?
கரண்ட் மேட்டர் இல்லைன்னு யாரும் சொல்லக்
கூடாதாம்!
கோபி ஜிகேஎஸ் மூர்த்தி
10ஒரு
காம்பவுண்ட் செண்டன்ஸ் சொல்லு பார்க்கலாம்?
இங்கு நோட்டீஸ் ஒட்டக்கூடாது சார்!
வி.சி கிருஷ்ண ரத்தினம்.
11
யுத்தத்துக்கு தேவையான அளவு ஈட்டி கேடயம் கத்தி நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை
வெளியிட்டது யார்?
பேரிச்சம் பழ வியாபாரிதான் அரசே!
எஸ்.மோகன்.
12.தலைவர்
எப்பவும் கைல ஒரு ஸ்கேல் வச்சினு இருக்காரே ஏன்?
எல்லாத்துலேயும் ஒரு அளவு கோலோடு
செயல்படுங்கன்னு கட்சி மேலிடம் சொல்லியிருக்காம்!
இரா வசந்தராசன்.
13. எங்க
பொண்ணு டீவி சீரியல்ல வில்லியா நடிக்கிறா?
ரொம்ப சந்தோஷம்! காபி கொண்டு வரும்போது விஷம்
கிஷம் கலக்காம கொண்டுவரச்சொல்லுங்க!
க.கலைவாணன்
14. டார்லிங்!
நீங்க என்கிட்ட எதை பார்த்து லவ் பண்றீங்க!
இன்னும் எதையும் பார்க்கலை!
பார்க்கலாம்னுதான் லவ் பண்றேன் செல்லம்!
சி.ஆர் ஹரிஹரன்.
15.டியர் நாம
ரெண்டு பேரும் மோதிரம் மாத்திக்கலாமா?
வேண்டாம் டியர் உங்க மோதிரம் கவரிங்னு
எனக்குத் தெரியும்!
பி.கவிதா
நன்றி குமுதம் வார இதழ்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கமெண்ட்களை பதியலாமே!
Comments
Post a Comment