காகா ராதாகிருஷ்ணரை மறந்து போன தமிழ் சினிமா... !
தமிழ்,தெலுங்கு,ஹந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில்
நடித்தவர் காகா ராதாகிருஷ்ணன். சிவாஜியையே நாடகத்திற்கும் சினிமாவிற்கும்
அழைத்து வந்தவர் இவர் தான். தன்னுடைய 6 வயதில் நவாப் ராஜமாணிக்கம் நாடக
குழுவில் சேர்ந்த ராதா கிருஷ்ணன், பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் நாடக குழுவில்
சேர்ந்தார். பிறகு மங்கையர்கரசி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர்
தொடர்ந்து நல்லதம்பி, வண்ணசுந்தரி, மனோகரா, , தேவர் மகன், இருவர்,
காதலுக்கு மறியாதை, உதவிக்கு வரலாமா, உனக்காக எல்லாம் உனக்காக,
உனகனைத்தேடி, ஹலோ, ரோஜாவனம், விண்ணுக்கும் மண்ணுக்கும், மனதை
திருடிவிட்டாய், மானஸ்தன், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், இதய திருடன்,
உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரவு இறந்த இவருக்கு இன்று மதியம் 1மணி வரை, வெறும் 4 நான்கு திரையுலகினர் மட்டுமே வந்து மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பாக ஒருவரும், தென்னிந்திய நடிகர்சங்கம் சார்பாக ஒருவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.ஒரு பத்திரிக்கையாளர், ஒரு பிஆர்ஒ, இரண்டு புகைப்பட கலைஞர்கள், ஒரு சில மீடியா என்று மிகவும் குறைந்த அளவிலேயே திரையுலகினர் கலந்து கொண்டனர். இன்றைய இளைய நடிகர்களாவது மரியாதை செலுத்தி இருந்தால் அவருக்கு மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் என்னவோ 1மணி வரை யாரையும் காணோம். பலருக்கு கிடைத்த கலைமாமணி விருது கூட இவருக்கு கிடைக்கவிலை என்ற ஏக்கமும் இவருக்கு இருந்திருக்கிறதாம். எதிர்காலத்திலாவது இது போன்ற மூத்த நடிகர்களுக்கு மறியாதை செய்ய நாம் கடமைப்படுவோமாக.

டிஸ்கி} மிகவும் திறமைவாய்ந்த நடிகருக்கு நேர்ந்த அவலம் இது! வேறு யாருக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது!. உலக நாயகன் கமல் இவரின் திறமை அறிந்து தன் படங்களில் வாய்ப்பளித்து வந்தார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்ஸில் இவரது நடிப்பை மறக்க முடியாது. அற்புதமான கலைஞருக்கு இந்த பதிவின் மூலம் அஞ்சலி செலுத்திக் கொள்கிறது தளிர்!
தகவல் உதவி} தினமலர்.
தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்துக்களை பகிரலாமே!
Comments
Post a Comment