உயிரோடு விளையாடும் மருத்துவர்கள்! அதிர்ச்சி தகவல்கள்!

உயிரோடு விளையாடும் மருத்துவர்கள் ! அதிர்ச்சி தகவல்கள்!

விளையாட்டு இது நம்மோடு ஊறிப் போன விசயம்! ஆனால் எது விளையாடுவது? கிரிக்கெட் விளையாடலாம்! புட்பால் விளையாடலாம்! ஹாக்கி! ஏன்? கில்லி கோலி என்று எது வேண்டுமானாலும் விளையாடுங்கள் ஆனால் உயிரோடு விளையாடுவார்களா? ஆனால் இந்த ஆபத்தான விளையாட்டு தமிழ் நாட்டில்தான் நடக்கிறது!
     ஆம் தமிழ்நாட்டில்தான் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் சித்த மருத்துவர்கள்! தமிழ்நாட்டில் சுமார் 2000 சித்த மருத்துவர்கள் இருப்பதாக இன்றைய காலை செய்தி தாள் பகிர் தகவல் தந்துள்ளது.
    தமிழ் நாட்டில் எது இருக்கிறதோ இல்லையோ நோய்களுக்கு பஞ்சம் இல்லை! தினமும் புதிது புதிதாக நோய்கள் தோன்றி மக்களை அச்சுறுத்தும் அதே வேளையில் இந்த போலி டாக்டர்கள் வேறு புதிதாக கிளம்பி தொலைத்து விட்டார்கள் இவர்கள் விளையாடுவது அப்பாவிகளின் உயிரோடு  என்பதை தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்! எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நினைப்பில் இருக்கும் தமிழன் தன்னுடைய வியாதி குணமாக மருந்து கடைகள் முதல் இந்த மாதிரி சாமியார்கள் வரை மொய்க்கிறான்.
     இப்படி விழிப்புணர்வு இல்லாமல் வரும் மக்களை வசியப்படுத்தி இழுப்பதே இந்த மருத்துவர்களின் வேலை!. தமிழகத்தின் பெரும் பண முதலைகள் எல்லாம் எதில் சம்பாதிக்கலாம் என்று கோடிகளை மருத்துவத்துறையில் கொட்டி மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவ மனைகளையும் கட்டி கோடிகளை குவித்து வரும் வேளையில் இவர்கள் சில இலைகளையும் தழைகளையும் தைலங்களையும் வைத்துக் கொண்டு வீதிக்கு வீதி கல்லாக் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
    இவர்களை அணுகுவது எளிது! அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை! கட்டணமும் குறைவு இருபது முதல் 50 ரூபாய்தான் கட்டணம் என்பதெல்லாம் மக்களை இவர்கள் முன் இழுத்து வருகின்றன. எல்லாம் ஓக்கேதான்! ஆனால் இவர்கள் தரும் மருந்து சரியானதா? இவர்கள் முறையாக படித்து சித்த மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்றவர்களா? என்று பார்த்தால் அங்கேதான் முளைக்கிறது பிரச்சனை!
     தமிழ் நாட்டில் மருத்துவம் பார்க்கும் சித்த மருத்துவர்களின் சான்றிதழ்கள் பெரும்பாலும் போலியானவை என்று இம்ப் காப்ஸ் மற்றும் மாநில சித்தமருத்துவ கவுன்சில் கூறுகிறது. இது குறித்து தினமலர் வெளியிட்ட செய்தி லிங்க்:
இப்படியே போனால் தமிழகத்தில் நோயாளிகள் அதிகரிப்பார்களே தவிர குறைய மாட்டார்கள்முன்பு போலி டாக்டர்களை களையெடுத்த மாதிரி இப்போது போலி சித்த மருத்துவர்களை களையெடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது. தூங்கி கொண்டிருக்கும் தமிழர்களும் தமிழக அரசும் விழிக்க வேண்டிய தருணம் இதுவே!

தங்கள்வருகைக்கு நன்றி ! பதிவு குறித்த கமெண்ட்களை அள்ளி வீசுங்கள்!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2