ஆயிரம் பதிவு கண்ட தளிர்! சுய விளம்பரம்!

ஆயிரம் பதிவு கண்ட தளிர்!

இது தளிரின் 1000மாவது பதிவு!  இந்த 1000மும் எனது சொந்த பதிவு இல்லையெனினும் இதில் சில நூறுகள் என்னுடைய பதிவாக அமைந்து பலநூறு வாசகர்களை சென்றடைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் ஒரு பத்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் சுஜாதா கற்றதும் பெற்றதும் எழுதும் போது வலைப்பூவை பற்றி(பிளாக்) சிலாகித்து எழுதி இருந்தார். அப்போது நான் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அதிலும் இப்படித்தான் ஜனரஞ்சகமான செய்திகள் வெளியாகும்.
      தேன் சிட்டு என்ற அந்த இதழில் எனது கவிதை கதைகளோடு நிறைய பொது அறிவு செய்திகளும் பத்திரிக்கைகளில் வந்த சினிமா செய்திகளும் வெட்டி ஒட்டப்படும் அத்துடன் கேள்வி பதில் குறுக்கெழுத்துப் போட்டி போன்றவையும் அதில் வெளியாகின. காலப்போக்கில் அந்த இதழ் நின்று போனது, ஆனாலும் அப்போதிருந்தே ஒரு பிளாக் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் இருந்தது.
     ஆனால்  அப்போது என்னிடம் கணிணி வாங்கும் வசதியில்லை! வெளியே சென்று ஆரம்பிக்கவும் தெரியவில்லை! எங்கள் பக்கம் இண்டர் நெட் செண்டர்கள் குறைவு. பின்னர் ஒரு வழியாக கணினி 2007ல் வாங்கினாலும் பிராட்பேண்ட் இணைப்பை 2009ல் தான் பெற முடிந்தது. அப்போதும் இணையத்தில் வலைப்பூ துவங்க என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை!  ஆமாங்க நம்புங்க!
     இறுதியில் 2010 ஜனவரியில் உதயமானது தளிர்! முதலில் எனது படைப்புக்கள் மட்டும் வெளிவந்தது. யாரும் படிக்கவில்லை! பின்னர் பிளாக்கர் நண்பன் அப்துல் பசித் உதவியோடு வலைப்பூவை திரட்டிகளில் இணைத்தேன். பார்வையாளர்கள் வருகை அதிகரித்தது. ஆனாலும் திருப்தி இல்லை! ஒருநாளைக்கு 20முதல் 30பார்வையாளர்கள் வருகை என்று இருந்தது.
    எனக்கு காமெடி வரவில்லை! கதை கவிதைகளை சிலர்தான் படித்தனர். சினிமா விமரிசனம் செய்யலாம் என்றால்  நான் படம் பார்ப்பது குறைவு. என்ன செய்யலாம் என்று நினைத்தேன். அப்போது தான் வெட்டி ஒட்ட ஆரம்பித்தேன்! இதனால் தமிழ் மணம் திரட்டி என்னை நிராகரித்தது. போகட்டும் ஒரு திரட்டி என்னை புறக்கணித்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை! என் வலைப்பூவை பலர் படிக்க வேண்டும் பல்சுவை செய்திகள் அதில் வர வேண்டும் இது ஒரு வலைப் பத்திரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை ! எனவே இடையில் வெட்டி ஒட்டுவதை நிறுத்துவதாக அறிவித்தாலும் நிறுத்த வில்லை!
        என்னுடைய படைப்புகள் சிலருக்குதான் பிடிக்கிறது. கதை கவிதையை விட சினிமா செய்திகளையும் ஜோக்குகளையும் நிறைய பேர் விரும்புகின்றனர். அதை நான் தேடிக் கொடுத்தேன். அதனுடே அவ்வப்போது பொது அறிவு செய்திகளையும் தகவல்களையும் தேடிக் கொடுத்தேன். சில நகைச்சுவை பதிவுகளை சொந்தமாகவும் சிலவற்றை ரசித்த புத்தகங்களில் இருந்து தொகுத்தும் கொடுத்தேன்.
     இன்று என் வலைப்பூவை ஒரு நாளைக்கு 200லிருந்து 250 பேர் வரை படிக்கிறார்கள். இது மேலும் வளர வேண்டுமென்பதே என் ஆசை. வாசகர்களின் வரவேற்பை பொறுத்து எனது பதிவுகளை  அவ்வப்போது மாற்றி அமைத்து விரைவில் ஒரு முன்னனி பதிவராக திகழ விரும்புகிறேன்.வெட்டி ஒட்டுவது எனக்கும் பிடிக்க வில்லைதான்! இருந்தாலும்  திருக்குறளை சென்ரியு வடிவத்தில் எழுதி பதிவிட்டால் நாலு முதல் எட்டு பேர்தான் படிக்கிறார்கள். ஆனால் பிற தளத்தில் வந்த கிசு கிசுக்களை வெட்டி போட்டால் பேஜ் வியு எகுறுகிறது. அது மட்டுமில்லாமல் கதை கவிதை மட்டுமின்றி பல்சுவையாக என் வலைப்பூ இருக்க வேண்டும் என்பதால் தான் பல்வேறு வகையான செய்திகளை கலந்து கொடுக்கிறேன். சிறுவர் இலக்கியமும் எனது வலைப்பூவில் தொடர்ந்து இடம்பெறுகிறது சினிமாவும் இடம் பெறுகிறது . அரசியல்;விளையாட்டு என அனைத்து கலந்த நந்த வனமாக வலைப்பூ அமைக்கிறேன். இதிலும் பல மாற்றங்கள் விரைவில் செய்யலாம் என்று இருக்கிறேன். 
       என்னுடைய முன்னோடி பதிவர்கள்  எனக்கு ஆலோசனைகள் வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். வாசகர்களின் ஆலோசனைகளும் வரவேற்கிறேன்.
      உங்களின் ஆதரவு கிட்டும் பட்சத்தில் விரைவில் எனது சொந்த பதிவுகளான கவிதை கதை, ஹைக்கூக்கள் அதிகம்  இடம் பெறவைப்பேன்!
  ஆயிரம் பதிவுகளை கடக்க வைத்த அன்பு  உள்ளங்களுக்கு நன்றி!
மேலும் பல பதிவு காண வாழ்த்துங்கள் அன்பர்களே! கீழே  எனது முதல் பதிவை காணலாம்!

பொங்கல் வாழ்த்து
‚ ¸¡¡¢Â º¢ò¾¢ ¸½À¾¢ Ш½.
¦À¡í¸ø Å¡úòÐ Á¼ø 2011.
ãÅ¢Õ Á¡¾¦Á¡Õ «ÂÉò¾¢ø À½¢ìÌõ
ã×ĸ ¿¡Â¸ý ÓýÀÉ¢ô§À¡¾¢ø
Á¸Ãò¾¢ø ¯¾¢ìÌõ Áí¸Ä §Å¨Ç!
Å¢Â÷¨Å¾¨É ¯ÃÁ¡ì¸¢ «Â÷Å¢øÄ¡Ð
¯¨Æò¾¢ð¼ ¯ÆÅ÷¸û¢ý ¾¢Õ¿¡û
¯Ä¸¦ÁíÌõ Å¡Øõ ¯ýɾ ¾Á¢Æ÷¸û¢ý
¦À¡ýÉ¡û! ¨¾ Á¡¾ Ó¾ø ¿¡û!
¾Á¢ú ¦À¡í¸ø ¾¢Õ¿¡û!

¾Ç¢÷ ¿¢Äò¾¢ø À¢Öõ ¾Õ츧Ç!
¾Ç¢Ãñ½ý Å¡úò¾¢Ð§Å!
§¾í¸¢ ¸¢¼ìÌõ ¿£¡¢É¢§Ä ¾í¸¢Â¢ÕìÌõ
À¡º¢§À¡Ä µí¸¢ÔûÇÉ ¯ýÛû§Ç
µÃ¡Â¢Ãõ Á¡Í¸û!
ÐûǢŢ¨Ç¡Îõ ž¢É¢§Ä
ÀûÇ¢ìÌ ¦ºøÄ¡Áø ¿¡ð¸¨Ç
¾ûÇ¢¼Ä¡Á¡?

Ţʸ¡¨Ä¢ø ÀÊòÐ ¦ÅüÈ¢ ¦ÀÈ¡§ ¾¡÷
±ÅÕÁ¢Ä÷!¦ÅʨÅòÐ ±ØôÀ¢ÊÛõ
ÁÊ Ð¢ø ¯ý¨É ŢΞ¢ø¨Ä!
¦¾Õ§Å¡Ã Àñðí¸Ç¢ø ¦Á¡öìÌõ ® §À¡Ä
¾ÃÁ¢øÄ¡ ¿ðÀ¢¨É ¿¡¼Ä¡Á¡?
ܼ¡ ¿ðÒ ¯ý ÌÄÁÆ¢ìÌõ ¿£ §Â¡º¢!
¬Ïõ ¦ÀñÏõ ÀƸ¢Êø ¾ÅÈ¢ø¨Ä!
«Ð§Å «Ç¨Å Á£È¢Êø ¯ý Å¡ú쨸 ¯É¾¢ø¨Ä!

¦¾¡¨Ä측ðº¢ìÌ ¿£ Å¢¨¼ ¦¸¡Îò¾¡ø
¯ý ¦ÅüÈ¢ìÌ ÅÆ¢ À¢ÈìÌõ!
¯È×ìÌ ¿£ ¨¸ ¦¸¡Îò¾¡ø ¯ý
§¾÷×ìÌ ¨¸ ¦¸¡ÎôÀ¡÷ ¡÷?
"¦ºöÉ¡ §¿ÅÖõ" "¦ÃöÉ¡ ŢǡºÖõ"
"¨ÁÉ¡"À¡¼Öõ Á¡÷쨸 ¾ó¾¢ÎÁ¡?¨¿É¡!

Á½Ä¢ø À¢Êò¾¢ð¼ º¢üÀõ
Á½¢òÐǢ¢ø ¸¨ÃóÐ §À¡Ìõ
¸Ç¢Áñ½¢ø À¢Êò¾¢ð¼ º¢üÀõ
Á¨ÈóÐ §À¡¸ Á¡¾Á¡Ìõ
¸øÄ¢ø ÅÊò¾¢ð¼ º¢üÀò¾¢üÌ
¸¡Äò¾¡ø «Æ¢× ²Ð?¸¡Äò¾¢ø «Æ¢Â¡¾
¸¡Å¢ÂÁ¡ö ¯ÕÁ¡Ú!

°üÚ ¦ÀÕ즸Îò¾¡ø °§Ã ¦¸¡ñ¼¡Îõ
¬üÚô ¦ÀÕ즸Îò¾¡ø «Å¾¢¾¡§É!
¬Æ¢ô¦ÀÕ즸Îò¾¡ல் அÆ¢Ôõ «ÅÉ¢¾¡§É!
°üÈ¡¸ ¯ý Å¡ú× Á¡ÈðÎõ!

ÁĢšÌõ ºã¸ º£÷§¸ð¨¼
н¢Å¡¸ ¿£ º£÷¾¢ÕòÐ!
¯ýţΠ¯ý ÍüÈõ ±ýÈ¢øÄ¡Áø
¿ý§È ¿£ ¿¡ð¨¼ ¯ÕÅ¡ìÌ!
¸üÈÄ¢ý ¿ý¦ÈÐ?
ºü§È ¦ºÅ¢ÁÎ!§º¡÷×¾¨ÉÅ¢ÃðÊ
§¾÷×ìÌ ¿£ ¾Â¡Ã¡Ì!
"«ôÒÈõ" '«ôÒȦÁýÈ¡ø'
¯ýÅÌôÒ ¯¨É «ôÒÈôÀÎòÐõ!

Å¢¨Ç¸¢ýÈ ¦¿ü¸Ç¢§Ä ¦À¡Ä¢¸¢ýÈ
¦¿øÖ째 ¦À¡ý «¾¢¸õ!
ÀÊ츢ýÈ ¸¡Äò¾¢ø ±Î츢ýÈ
Á¡÷츢ü§¸ Á¾¢ôÒ «¾¢¸õ!
þ¨¾ ¿£ ¯½Ã¡§Â¡?
µöÅ¢øÄ¡ «Ã𨼠¯¨É ²öì¸ Å¢¼¡§¾!
§¾¡öÅ¢øÄ¡ ÀÊô§À ¯¨É ¯Â÷òÐõ!
À¡ö󧾡Îõ ÁÉì̾¢¨ÃìÌ ¦ºÅ¢ º¡öò¾¢¼¡§¾
¬÷À¡¢ìÌம் ±ñ½ «¨Ä¸ÙìÌ
«¼í¸¢Å¢¼¡§¾!
±¾¢÷ ¿£îºø ÀƸ¢ð¼¡ø ±¾¢÷¸¡Äõ ¯É¾¡Ìõ!
Ò¾÷Ê¡ö Ò¨¾Â¡Áø
ÒРŢÕðºÁ¡ö ¯ÕÅ¡Ì!
±ýÉ¡Ùõ ¦À¡ýÉ¡Ç¡ö Á¡È¢¼
¯ýÉ¡ø ÓÊÔõ ¯½÷ó¾¢Î!
¯ýɾ À¡Ã¾õ ¯ÕÅ¡¸ ¯¨Æò¾¢Î!
¦À¡í¸ø ÒÐ ¿¡Ç¢ø ¾í¸¦ÁÉ
¦ƒ¡Ä¢ì¸ ¾Ç¢Ãñ½ý Å¡úòиû!
                                  «ýÒ¼ý
"¾Ç¢÷ «ñ½¡"          º¡.ͧÉÀ¡Ò.
 என்னுடைய பழைய பதிவுகளை திரும்பி பார்க்கும் போது மீண்டும் சொந்த பதிவுகள் நிறைய எழுத ஆவல் தூண்டுகிறது! உங்கள் விருப்பமும் கடவுள் விருப்பமும் அதுவானால் தளிர் மீண்டும் சிறப்பாக படைக்கும்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2