நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! கலக்கல் கதம்பம்!
நெல்லையில் நித்தி நடத்திய யாகம்! தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து விடுபடவும் போலீஸ் நெருக்கடியில் இருந்து தப்பிக்கவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நித்தியானந்தா தனது சீடர்கள் மூலம் ரகசிய யாகம், வழிபாடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிதம்பரம் கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவில் இந்த ரகசிய யாகத்தை உச்சிகால பூஜைக்கு முன்பாக சிவாச்சார்யார்களை கொண்டு நித்தியின் சீடர்கள் செய்ததாக வதந்தி பரவி வருகிறது. இதற்காக பட்டு வஸ்திரங்களும் நிறைய பூக்களும் தருவிக்கப்பட்டதாகவும் பூஜைக்கான நைவேத்தியங்கள் வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நிர்வாக அதிகாரியோ பட்டு வஸ்திரங்கள் சார்த்த மும்பை பெரிய தொழில் அதிபர் பெயரில் அனுமதி வாங்கப்பட்டது. நித்தியானந்தாவுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது என்கிறார். இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இங்கே என் கேள்வி} நித்தியானந்தா ஒரு திருட்டு ஆசாமி என்று எல்லோரும் சொல்லி வரும் வேளையில் இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோ...