நீங்க விமானத்துல பறக்கறவரா? அப்ப இதை கட்டாயம் படிங்க!
க்ரீட்: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த விமானியை காக்பிட் அறையில் பூட்டி விட்டு வெளியே வந்த துணை விமானி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெதர்லாந்தின் கிரீட் நகருக்கு "டிரான்ஸ்சேவியா" நிறுவன விமானம் பறந்து கொண்டிருந்தது. அதில் இருந்த விமானி ஒருவர் குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்தார். இவருடன் இருந்த மற்றொரு துணை விமானி, அறையை பூட்டி கொண்டு கழிப்பறைக்கு சென்று விட்டார். நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் விமானி அறைக்கு வந்த போது அந்த விமானி எழுந்திருக்காமல் தொடர்ந்து தூங்கி கொண்டிருந்தார். ஆனால், துணை விமானியால் கதவைத் திறக்க முடியவில்லை. இதையடுத்து "இன்டர்காம்" வழியாக கதவைத் திறக்குமாறு விமானியிடம் சொல்லியிருக்கிறார் பூட்டிவிட்டு சென்ற துணை விமானி. "இன்டர்காம்" ஒலித்ததை கேட்டு தூங்கிக்கொண்டிருந்த விமானி அரக்க பரக்க எழுந்து கதவை திறந்தார். அவர் தூங்கிக் கொண்டிருந்த முழு நேரமும் விமானம் தானாகவே பறந்து கொண்டிருந்தது. இந்த சம்பவம் தற்போது அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. பொறுப்பில்லாமல் தூங்கிய விமானி மற்றும் காக்பிட் அறையை பூட்டிவிட்டுச் சென்ற சக விமானி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10ல் நான்குபேர் தூங்குறாங்க விமானிகளில் 10 பேரில் நான்கு பேர் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது தூங்கத்தான் செய்கிறார்கள். என்று விமானிகள் சங்க நிர்வாகத்தினர் அசால்டாக குறிப்பிட்டுள்ளனர். நீண்ட நேர பணியின் காரணமாக தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்கின்றனர். பயணிகள் கதியை யாரும் நினைச்சு பார்க்க மாட்டேங்கிறாங்களே? நன்றி : தட்ஸ் தமிழ்
சொர்க்கத்திற்கு நேரடி பயணம் போல .... அடக் கடவுளே !
ReplyDeleteபுது செய்தியா இருக்கே!
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/03/blog-post_3.html
ReplyDeleteநண்பரை அங்கு கண்டு மகிழ்ந்து நிறைவாக வாழ்த்து சொல்லி வந்தேன்
விமானிகளை நம்பி விமானத்தில் பறக்கிறோம். இறைவன் அருளால் தப்பி ஊர் வந்து சேர்கிறோம்.
ReplyDeleteதொலைகாட்சியில் பார்த்தேன் இந்த செய்தியை.