குழப்பமின்றி மின் கட்டணம் கணக்கிடுவது எப்படி?
புதிய மின் கட்டண முறையில், வீட்டு இணைப்பு நுகர்வோர் குழப்பமின்றி கட்டணம் செலுத்துவதற்கான விவரங்களை, தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. குழப்பம்: புதிய மின் கட்டண முறைகளை, தமிழக அரசு, ஏப்ரல் முதல் அமல்படுத்தியுள்ளது. இதில் வீடுகளுக்கான கட்டணம், பலவித அடுக்கு முறைகளை கொண்டுள்ளதால், எத்தனை யூனிட்டுகளுக்கு, எவ்வளவு கட்டணம் என, நுகர்வோர் குழப்பமடைகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சென்னை மண்டல அமைப்பாளர் சுதர்சனம் மற்றும் காஞ்சி மாவட்டச் செயலர் வரதராஜன் ஆகியோர், புதிய மின் கட்டண விவரங்களை, கையடக்க அட்டைகளாக அச்சடித்து, மின் நுகர்வோருக்கு இலவசமாக வழங்குகின்றனர். கட்டண முறை: வீடுகளுக்கான மின் கட்டண கணக்கீட்டு முறை குறித்து, அதில் கூறியிருப்பதாவது :நூறு யூனிட்கள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம், மின் கட்டணம் செலுத்த வேண்டும். 101 யூனிட்டுகளுக்கு மேல், 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துவோர், 20 ரூபாய் நிலைக் கட்டணத்துடன், யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 பைசா வீதம், மின் கட