இன்னிக்கு என்னோட பிறந்த நாளுங்க!

இன்னிக்கு என்னோட பிறந்த நாளுங்க!

  இன்னிக்கு சரியா 36 வருஷம் முன்னாடி அதாவது 1975ம் வருஷம் ஜுலை மாசம் 3ம் தேதி நள்ளிரவில் என் அம்மாவை வலிக்க வைத்து நான் பிறந்தேன். எம் ஜி ஆர் பாடுன மாதிர் நான் ஏண் பிறந்தேன்? இந்த நாட்டுக்கு என்ன செய்தேன் ? என்றெல்லாம் கேள்வி கேட்டுக்க ஆசைதான். ஆனா அப்படி என்னத்த பெரிசா சாதிச்சிபுட்டேன் ஒன்னும் இல்லையே அதனால அடக்கி வாசிக்கிறேன்.
  ஆமா ஜூலை 3ம் தேதின்னுட்டு இன்னிக்கு பிறந்தநாளுன்னு சொல்லிக்கிறயே அது எப்படி லூசாப்பா நீ ன்னு சரோஜா தேவி கணக்கா கேக்கறவங்களுக்கு தேதி பிறகாரம் ஜூலை 3தான் நான் பிறந்தேன் ஆனா எங்க குடும்பத்தில நட்சத்திர பிறகாரம் தான் பிறந்தநால் கொண்டாடுவாங்க அதன்படி ஆனி மாசம் ரேவதி நட்சத்திரத்துல பிறந்த நான் இன்னிக்கு அந்த நட்சத்திரத்துல பிறந்தநாள் கொண்டாடுறேன்.
  நான் பிறக்கும்போதே என் அம்மாவுக்கு ரொம்ப கஷ்டம் கொடுத்துதான் பிறந்தேனாம்! இன்னிக்கும் உங்கள இந்த பிளாக் படிக்க வச்சு கஷ்டப் படுத்திகிட்டுதான்  இருக்கேன் என்கிட்ட இருக்கற ஒரு குணம் மத்ததவங்கள கஷ்டபடுத்திகிட்டு இருக்கு சரி எல்லார போல ஒரு பொறந்தநாளு உறுதி மொழி எடுத்திடலாமுன்னு இருக்கேன்.
   என்ன குணம் என்ன கஷ்டம்னு கேக்கறீங்களா? அது ஒண்ணுமில்லீங்க நமக்கு சட்டுபுட்டுன்னு கோவமா வந்திருங்க அப்புறம் யோசிச்சா அட இதுக்கு போயி கோவப்பட்டமேனு ஃபீல் ஆயிருவேங்க சின்ன வயசுல இருந்ததுக்கு இப்ப எவ்வளவோ குறைஞ்சி போச்சுன்னாலும் இப்பவும் அடிக்கடி அந்த கோவம் தலைதூக்கிடுதுங்க!
  அதனால இந்த பிறந்த நாள்ல இருந்து இந்த சட்புட்டுன்னு கோபபடறத விட்டுடலாம்னு ஒரு உறுதி மொழி எடுத்துகிடலாமுன்னு தோணிச்சு அத எப்படி நிறைவேத்தப் போறேன்னுதான் தெறியலீங்க!  அட அரசியல் வாதி மாதிரி உறுதி மொழி நிறைவேத்தறதுன்னு பேசறானேன்னு பாக்காதீங்க! உண்மையாவே இந்த கோபத்த குறைச்சிக்கலாம்னு இருக்கேங்க ஏதோ என்னால முடிஞ்ச ஒரு நன்மையா இருக்கட்டுமே!





   இதுக்கு முன்னாடி வருசமெல்லாம் டியுசன் எடுப்பேன்! மாணவர்களுக்கெல்லாம் பரிசா பேனா பென்சில்னு கொடுத்துகிட்டிருந்தேன். ஒரு ரெண்டு வருஷமா அதை செய்ய முடியலை. இந்த வருஷம் டியுசன் எடுக்கிறதயும் நிறுத்திபுட்டேன். அதனால செலவில்லாம நல்ல காரியமா இந்த கோபத்த உட்டு புட்டேன்.
  என்னோட சின்ன வயசு படங்கள் இங்க போட்டிருக்கேன். பாத்து பயந்துடாதீங்க

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பதிந்து செல்லலாமே! நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பரே
    June 24, 2011 4:50 PM
    நன்றி நண்பரே ! பிறந்தநாள் வாழ்த்துக்கும்! வலைப்பூ வருகைக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!