கலைஞரின் பிள்ளைப்பாசம்!

கலைஞரின் பிள்ளைப்பாசம்!

தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொன்னாலும் அந்த தமிழை விட தமிழகத்தை விட கலைஞருக்கு பிள்ளைப்பாசம் அதிகம். அதை பலமுறை வெளிப்படுத்தியும் இருக்கிறார். இப்போது அவர் கவலையெல்லாம் திகார் சிறையிலிருக்கும் கனிமொழியை காப்பாற்றுவது எப்படி என்பதிலேதான்.
  சி.ஐ.டி காலணி வீட்டினர்,காயை கனியாக்கி எம்.பியாக்கி டெல்லிவிவகாரங்களை கவனிக்க அனுப்பியபோது எவ்வளவு மகிழ்ந்தனரோ அவ்வளவு துன்பப்படுகின்றனர் இப்போது.தள்ளாத வயதில் டெல்லிக்கும் சென்னைக்கும் பறந்து கொண்டிருக்க வேண்டிய நிலையில் கருணாநிதி தள்ளப்பட்டிருக்கிறார். இது அவரே எதிர்பாராதது. எப்போதும் மற்றவர்களுக்கே டாட்டா காட்டும் கலைஞருக்கே காங்கிரஸ் டாட்டா காட்டிவிட்டது இப்போது.
  கட்சியின் அமைச்சர் கைதான போது கூடாத திமுக உயர்நிலைக்குழு இப்போதோ மூன்று முறை கூடிவிட்டது. ராஜா கைதானபோது தலித் என்பதால் பழிவாங்கபடுகிறார் என்றார். தோற்றபோது பார்ப்பனர்களின் சதி என்றுகூறினார். காங்கிரஸை கூடாநட்பு என்று வசைபாடினார்.
   அந்த கூடாநட்பு தான் இன்று கனிமொழியை இந்த கதிக்கு ஆளாக்கியுள்ளது. அதாவது கலைஞரின் வாய் வாக்கு பலித்துவிட்டது. ராஜாவை சிறையிலிருந்தபோது ஒருமுறை கூட சந்திக்காதவர் இன்று கனிமொழியைக் காண ஓடிவருகிறார் திகாருக்கு. தயாநிதி பற்றி கேட்டபோது கூட அதை அவர் பார்த்துக் கொள்வார் என்று சொன்னவர். கனிமொழி கலைஞர் டிவியின் பங்குகளை வைத்திருந்ததை தவிர ஒரு தவறும் செய்யவில்லை! என்று கண்ணீர் விடுகிறார்.
  அன்று ஸ்டாலினுக்கு போட்டியாகி விடுவார் என்று வைகோவை துரோகியாக்கினார். குடும்பத்தில் குழப்பம் விளைவித்ததால் பேரனே என்றாலும் தயாநிதியின் மந்திரி பதவியை பறித்தார்.இப்படியெல்லாம் பிள்ளைக்கு நல்லது செய்த பெரியவருக்குப் பாவம் மகளை விடுவிக்க வழி தெரியவில்லை.
   தசரதனின் பிள்ளைப்பாசமே அவனைக் கொன்றது  இங்கே கலைஞரின் பிள்ளைப் பாசம் என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!