துணிந்து வா இளைஞா! கவிதைகள்!

துணிந்து வா இளைஞா!

ஒவ்வொரு இரவின்
பின்னும் ஒர் விடியல்
உண்டு!
ஒவ்வொரு இன்பத்தின்
பின்பும் ஒரு
துன்பம் உண்டு!
ஒவ்வொரு தோல்விக்கு
பின்னாலும் ஒரு
வெற்றி கண்டிப்பாய்
உண்டு!
எடிசன் காணாத்
தோல்வியாய் நீ
கண்டு விட்டாய்!
தோல்விகளெல்லாம்
உன் வாழ்க்கையின்
படிப்பினைகள்!
படித்து தெளிந்தால்
பாதை புலப்படும்!
அகிலத்தை வெல்ல
துணிந்து வா இளைஞா!


  நினைவுகள்!

நினைக்க நினைக்க
இனிமையானது
இனி எப்பொழுது
அந்நாள் வரும்
என்று ஏங்க வைப்பது!
கடந்து போன
பாதையை காட்டும்
பளிங்கு கண்ணாடி!
சோம்பிக் கிடக்கும்
மனதை தெம்பாக்கும்
தேன்!
உயிருள்ளவரை
உற்சாகமூட்டும்
பாணம்!
நெஞ்சைவிட்டு நீங்காது
நீண்ட தூக்கம் வரை
உடன் வரும்
உன்னத நண்பன்!

வலி!
 அப்பா அடித்தபோதும்
 வலிக்கவில்லை!
 ஆசிரியர் அடித்தபோதும்
 வலிக்கவில்லை!
 கிரிக்கெட் ஆடி மண்டை
 உடைந்தபோதும் வலிக்க வில்லை!

 உனக்காக உன் அண்ணனிடம்
உதைபட்டும் வலிக்கவில்லை!
ஆனால் வலித்தது!
நீ என்னை
மறந்துவிடு என்று சொன்னபோது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2