டாரெல் ஹார்பர் இந்தியாவின் வில்லன்!

 டாரெல் ஹார்பர் இந்தியாவின் வில்லன்!


இந்திய - மே.இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கடமையாற்றிய ஆஸ்திரேலிய நடுவர் டரெல் ஹார்பெர் மீது இந்திய கிரிக்கெட் அணியினர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இப்போட்டியில் இந்தியா 63 ரன்களால் வெற்றி பெற்ற போதும், பல சந்தர்ப்பங்களில் மே.இந்தியாவுக்கு சாதகமாக தவறான தீர்ப்பை வழங்கினார் டரெல் ஹார்பெர்.

போட்டி முடிவடைந்ததும் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த கேப்டன் மகேந்திர சிங், இப்போட்டியின் களநிலைமைகளில், சில சரியான முடிவுகள் கொடுக்கப்பட்டிருக்குமாயின் இப்போட்டி எப்போதோ முடிந்திருக்கும். இந்நேரம் நாம் ஹோட்டலுக்கு சென்றிருப்போம் என்றார். எனினும் அவர் நடுவரின் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை.

இதேவேளை அடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு டாரெல் ஹார்பெர் நடுவராக கடமையாற்றுவதில் விருப்பமில்லை என இந்திய வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 6 ஆட்டமிழப்புக்களை அவர் கொடுக்கவில்லை. அவற்றில் மூன்று, தவறான தீர்ப்பு என உறுதியாக கூறமுடியும் என இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக உறுப்பினர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் ரைனா ஆட்டமிழந்த போது அவருடைய துடுப்பாட்ட மட்டையிலோ, கிளௌவ்ஸிலோ பந்து படவில்லை. எனினும் அது 'கேச்' என அறிவிக்கப்பட்டு அவர் ஆட்டமிழந்தார்.

ஹர்பஜன் சிங்கினது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த போது, ஆக்ஷன் ரிப்ளையில் பந்து விக்கெட்டுக்கு மேலாக போவது உறுதியாக தெரிகிறது. தோனி ஆட்டமிழந்த பந்து, நோ போலாக அறிவிக்கப்பட வேண்டியது. இம்மூன்று சந்தர்ப்பத்திலுமே டரெல் ஹார்பெர் தவறான தீர்ப்பையே வழங்கினார். மேலும் துடுப்பெடுத்தாடும் களப்பகுதிக்குள் வந்து பந்துவீசுகிறார் என பிரவீண்குமாருக்கு பந்துவீசவும் தடைவிதித்தார் என அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ஐசிசியின் தரவரிசையில் மிக மோசமான நடுவர்களில் ஒருவராக இடம்பெற்றிருக்கும் டரெல் ஹார்பெர், நீண்டகாலமாகவே இந்திய அணியினருக்கு விருப்பமில்லாத ஒரு தெரிவாக இருந்து வருகிறார்.

1999-2000
ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் ஒரு போட்டியில் மெக்ராத்தின் பந்துவீசின் போது சச்சின் எந்தவித ஆட்டமும் எடுக்காது ஆட்டமிழந்திருப்பார். சச்சின் தோளில் பட்ட பந்தை எல்.பி.டபிள்யூ என டரெல் ஹார்பெர் தவறாக தீர்ப்பளித்ததால் இந்த ஆட்டமிழப்பு செய்யப்பட்டது.

'
நான் வழங்கிய தீர்ப்புக்களில் ரசிகர்கள் மறக்கவேண்டிய ஒன்று இது' என ஹார்பெர் பின்னர் இதற்கு மன்னிப்பும் கோரினார்.

கடந்த 2009ம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் UDRS எனப்படும் நடுவர்களின் தீர்ப்பினை மறு பரீசிலனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இது நாள் வரை இந்த மறுபரிசீலனை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தற்போது டரெல் ஹார்ப்பரின் முறையற்ற தீர்ப்புக்களால் மேலும் நொந்து போயிருக்கிறது.

நன்றி தமிழ்ஸ்டார்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களைப் பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!