“லவ்லி லுக்”

“லவ்லி லுக்”

அந்த பஸ் ஸ்டாண்டில் வண்ணத்துப்பூச்சியின் பல நிறங்கள் போல பலவிதமான கலர்களில் ஆடைகள் அணிந்து பெண்கள் கூட்டம் நின்றிருக்க தங்களை சூர்யாகவும்,ஆர்யாவாகவும் கற்பனை பண்ணிக்கொண்டு இளவட்டங்கள் லவ்லிலுக் விட்டுக் கொண்டிருந்தனர்.
 “ஹேய் ப்ரியா அதோப் பாரு ஒருத்தன் கூலிங் கிளாஸ் போட்டுகிட்டு உன்னையே ஜொள் விட்டுகிட்டு இருக்கான்!”
  “ஆமாண்டி நானும் கவனிச்சிகிட்டுதான் இருக்கேன் தினமும் அவன் என்னையே பாத்துகிட்டிருக்கான்”
 “அப்படியா விஷயம் அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாளா?” தோழி சீண்ட
இன்னொருத்தி எடுத்துக் கொடுத்தாள். “இல்லடி அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா”
“ச்சீ போடி போயும் போயும் அந்த மூன்சியை”இன்னொருத்தி ப்ரியாவுக்கு சப்போர்ட் செய்தாள்.
“ ஏண்டி அந்தமூஞ்சிக்கு என்ன குறை?”  “அப்ப நீ ஓரம் கட்டு!” “ஏய் ஏய் என்னையே மடக்கற பாத்தியா?” தோழிகள் கூட்டம் கலாய்த்தது.
 “இப்ப பாரு வேடிக்கைய அவன் பணத்த கறந்துடலாம்!”
  இளைஞர்கள் முகாமில், “மச்சி அந்த ஃபிகரு உன்கிட்ட வருதுடா உதை வாங்கி சாகப்போற!”  
“யாரு? நானா இப்ப பாரு வேடிக்கைய!”
“அலோ மிஸ்டர்?” ப்ரியாவின் குரல்
 “யார்?... யார் நீங்க? கைகளால் துழாவினான்.
“ உங்க கண் எதிரே நிக்கறேன் தெரியலையா தூர இருந்து சைட் அடிக்க மட்டும் தெரியுமா? பரவாயில்லை பயப்படாதீங்க வாங்க ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடலாம்!”
‘ மேடம்! நீ.. நீங்க என்ன சொல்றீங்க!”
 “என்ன மேன் நீ! ஐஸ் கிரிம் சாப்பிடலாமுன்னு கூப்பிடறேன் இது புரியலைன்னு சொல்ற?”மதர்ப்பாய் கேட்டாள் ப்ரியா.
 “மேடம் நீங்க என்ன தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்க!”
 “என்னமேன் சைட் மட்டும் அடிப்ப கிளாஸ் போட்டுகிட்டு ஆனா ஐஸ்கிரிம் கூட வாங்கித் தர மாட்டியா?”
  பெண்கள் கூட்டம் ஓவென ஆர்பரித்தது.
“ஐயையோ மேடம் எனக்கு கண்பார்வை கிடையாது அதான் கிளாஸ் போட்டிருக்கேன் மத்தபடி நான் உங்களபாக்கல மேடம் நீங்க தப்பா புரிஞ்சிகிட்டிருக்கீங்க!”
 பிரியாவின் முகத்தில் அசடு வழிந்தது. “ஐயம் சாரி! ஐ டிரபிள் யூ! ஐயம் எக்ஸ்டீரிம்லி சாரி வெரி வெரி சாரி!” நகர்ந்தாள்.
  போயும் போயும் ஒரு குருட்டு பேர்வழியை மிரட்டி விட்டோமே என அவள் வருத்ததுடன் செல்ல தூரத்தில் அவனது நண்பர்கள் கை கொடுத்தனர். “கலக்கிட்டடா மச்சி! சூப்பர் நடிப்பு கமலஹாசன் தோத்தான் போ!”
  “ டேய் அவ என் பணத்த கரைக்க பாத்தா! நான் அவ மனச கரைச்சிட்டேன் அசடு வழிஞ்சிட்டு போனா எப்படி நம்ம நடிப்பு?”
  “ வெல்டன் சார்! ஆனா அழகான பெண்ணோட ஐஸ்கிரிம் சாப்பிட நீங்கதான் கொடுத்து வைக்கல!” ப்ரியாவின் குரல் கேட்டு கூலிங்கிளாஸ் அதிர்ந்தான்.
 கண் தெரியாதவங்க கறுப்பு கண்ணாடிதானே போடுவாங்கண்னு தோணிச்சு திரும்பி வந்தென் உங்க நாடகம் புரிஞ்சிடுச்சு வெல்டன் பை என்று நடந்தால் ப்ரியா!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!