நாசூக்கு!



நாசூக்கு!

நம்மில் பலருக்கு அடுத்தவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரிவது இல்லை. அடுத்தவருடைய சொந்த விஷய்ங்களில் மூக்கை நுழைத்து வீணாக அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவது நம்மில் பலருக்கு கைவந்த கலை!
ஒரு பொது இடத்தில் ஒருவரை ஒருமையில் அழைப்பது! பந்தியில் பலரோடு சாப்பிடுகையில் நாக்கை வழித்து சர் புர்ரென்று இழுப்பது அடுத்தவர் பேசும் போது இடையில் குறுக்கிடுவது என்று இவ்வாறு தொல்லை தருவோர் ஏராளம்!
    நாசூக்கு என்றால் என்ன? வீணாக அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நாசூக்கு!ஒருவரை பிடிக்க வில்லையா யோவ் இங்கே வராதே என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்லாமல் அவர் வரும் சமயமெல்லாம் ஒதுங்கி செல்வது நாசூக்கு! வைகோவிற்கு சீட் தர விருப்பமில்லாது ஏழுதான் தர முடியும் என்று அம்மா ஒதுக்கியது அரசியல் நாசூக்கு!
     திமுக கூட  காங்கிரஸ் 63 சீட் கேட்டு போராடியது கூடநாங்கள் உங்கள் அணியில் இருக்கவில்லை என்று சொல்லாமல் சொல்லியது நாசூக்காய்! ஆனால் கலைஞர்தான் விடாப் பிடியாய் காங்கிரஸை கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டார். கலைஞர் கட்டிய சட்டசபையில் அமரபிடிக்காமல் ஜார்ஜ் கோட்டையில் பதவியேற்ற அம்மா புதிய சட்டசபை பணிகள் முடிவுறவில்லை.அதனால்தான் ஜார்ஜ்கோட்டையில் சட்டசபை நடைபெறும் என்று சொன்னதும் ஒரு நாசூக்குதான்!
  ஆனால் பலருக்கு இந்த நாசுக்காய் ஒதுங்குவது தெரியாத கலையாய் உள்ளது. அடுத்தவர் செல்போனில் பேசும்போது அருகில் நின்று ஒட்டுக் கேட்பது, பஸ்ஸில் பக்கத்துசீட் ஆசாமி படிக்கும் பேப்பரில் தலையை நுழைத்து படிப்பது,பொது இடத்தில் உரக்க கத்துவது என்று இவர்கள் தரும் இம்சைகள் ஏராளம்.
    அடுத்தவர் விவகாரங்களில் வீணாக தலையிடுவது,அடுத்தவருடைய செல்போனில் மெசேஜ்களைப் படித்துப் பார்ப்பது ஒருவருடய பெட்ரூமில் நுழைவது இதெல்லாம் இவர்களின் திருவிளையாடல்கள்.இப்பொழுது கொரியா மொபைல்கள் வந்த்ததுமேலும் ஒரு இம்சையாகப் போய் விட்டது.ஓடும் பஸ்ஸில் சத்தமாக எம்.பி திரி பிளேயரை ஆன் பண்ணி பாட்டு கேட்டுவரும் கல்லூரி மாணவர்களின் ரவுசு தாளமுடியவில்லை! இவர்கள் நாசூக்கு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகம்.
   இது கூடப் பரவாயில்லை! யாராவது நண்பர் வீட்டுக்குச் செல்லும் சமயம் அவர்கள் காபி அல்லது குளிர்பானம் தரும் சமயம் நாம் நாசூக்காய் ஐயையோ வேணாங்க! இப்பதான் சாப்பிட்டு வந்தேன் என்று மறுத்தாலும் விடாப்பிடியாக அப்ப மோர் சாப்பிடுங்க வெயிலுக்கு நல்லது என்று நம் தலையில் கட்டி விடுவார்கள்! சிலரோ இப்படி மறுப்பதே நாசுக்கு என்று அறியாமல் அப்படியா அப்ப சரி! என்று நம் வயிற்றை காய விட்டுவிடுவார்கள்
     வயிறு காயும் போது நாசூக்காவது மண்ணாங்கட்டியாவது! உள்ளே நுழையும்போதே இன்னிக்கு என்ன டிபன் வயிறு கபகபங்குது என்று நுழைந்தால் நண்பர் நினைத்துக்கொள்வார் சே இந்த மனுசனுக்கு கொஞ்சம் கூட நாசூக்கே இல்லையே என்று!
  ஆக இந்த நாசூக்கு என்ற விஷயத்தில் நாமும் சற்று நாசூக்காய் நடந்து கொள்ள வேண்டும். அப்போதான் நம்மள நாலு பேரு அந்தாளு நாசூக்கான மனுசன்யா என்று புகழ்வார்கள்!
 ரொம்பதான் அறுத்துட்டனோ அடிக்கிற வெயில்ல மேட்டர் கிடைக்காம ஏதேதோ உளறிட்டோனோ பிடிக்காதவங்க நாசூக்கா வேறு தளத்துக்கு மாறிடுங்க சட்டுன்னு!
தங்கள் வருகைக்கு நன்றி!பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்கிடலாமே! தங்கள் கருத்துக்களை பகிரலாமே! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!