பெண்பார்க்க வராங்க!

பெண்பார்க்க வராங்க!

ஆபீஸில் பார்த்துக்கொண்டிருந்த லெட்ஜறை மூடி விட்டு எழுந்தேன் மணி சரியாக மூன்று. மானேஜர் அறைக்குள் நுழைந்தேன் இன்று பெண்பார்க்க பிள்ளை வீட்டார் வருகிறார்களாம் ஒருமணி நேரம் பர்மிஷன் எடுக்கவேண்டும். காலையிலே வீட்டில் ஆர்டர் போட்டாயிற்று.ஆனால் மானேஜர் என்ன சொல்வாரோ? சற்று உதறலாய்தான் இருந்தது.
    தயங்கித் தயங்கி விஷயத்தை கூறியதும் எரிந்து விழுந்தார். இதோட இது மாதிரி 11தடவை பர்மிஷன் எடுத்தாச்சு என்றார் கேலியாக என்னைப் பார்த்து.சார் இந்த ஒரு தடவை... சரி சரி எடுத்துக்கோ என்றார். அலுப்பாக.
   என் கஷ்டம் அவருக்கு என்னத் தெரியப்போகிறது. அவருக்கு மூன்றும் பிள்ளைகள். பெண் இருந்தால் அல்ல்வா கஷ்டம் தெரியும்?எல்லாம் அவர் ராசி இதை அவரிடம் சொல்ல முடியுமா? ஆபிஸை விட்டு வெளியே வந்தேன்.பஸ்ஸில் ஏறி அமர்ந்தபிறகும் பிள்ளைவீட்டார் நினைவே சுற்றி சுற்றி வந்தது.
   இந்த வரனாவது படிய வேண்டுமே வயது வேறு கூடிக்கொண்டே பொகிறது. வரத்ட்சணை எவ்வளவுகேட்பார்களோ காலம் கூடகூட மாப்பிள்ளை ரேட்டும் அள்ளவா கூடிப் போகிறது. மாப்பிள்ளை ரொம்ப அழகாம். நல்ல உத்தியோகம் வேறு எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.
 எனக்குப் பிடித்தால் ஆச்சா அந்த வீட்டார்க்கு என்னை பிடிக்கவேண்டுமே பஸ் ஸ்டாப் வரவே இறங்கி நடந்தேன். வீட்டினுள் நுழைந்தேன். என்னுள் ஒரு பரபரப்பு சூழ்ந்துகொண்டது. சர்ட் பேண்ட் கழற்றி வேட்டி துண்டு அணிந்த படி ஏய் கமலா பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் ரெடியா வேணீய அலங்காரம் பண்ணிட்டியா? பிள்ளை விட்டுக் காரங்க வர்ர நேரமாயிடுச்சு என்று சமையலறைக்குள் நுழைந்தார் பெண்ணின் திருமணம் பற்றிய கவலையுடன் வேணியின் தந்தை கனக சபை.தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !


Comments

  1. இந்த காலத்து பெண்களின் வாழ்வியலை சற்று சிறிய கதையினுடே வெளிப்படுத்தியுள்ளீர்கள் நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!