ஆவி அழைக்கிறது! பகுதி 5

ஆவி அழைக்கிறது! பகுதி 5
                       எழுதுபவர்”பிசாசு”

மு.க.சு : ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனது பழுதடைந்த பங்களாவை சீர் படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு அடுத்தடுத்து தடைகள் ஏற்படுகிறது. பணியாளர்களும் இறந்து போகவே அங்கு வாழும் ஒர் ஆவியே இதற்கெல்லாம் காரணம் என்று உணர்ந்து மந்திரவாதி கேசவன் நம்பூதிரியை நாடுகின்றனர்.

இனி: அது ஒரு அமாவாசை இருட்டு தனவேல் முதலியாரின் பங்களா. பெட்ரோ மாக்ஸ் லைட் வெளிச்சத்தில் அங்கு ஒரு ஐந்து உருவங்கள் தென்படுகின்றன. அவர்கள் தனவேல்,நிதிலா,நல்லமுத்து, மந்திரவாதிகேசவன்நம்பூதிரி, அவனது உதவியாள் ஒருவன்.நீர் பயப்படாதேயும் முதலியாரவாள்! இவ்விட உள்ள அந்த துர் ஆவிய நான் விரட்டும் யாரும் அஞ்சவேணாம் யான் உபாசிக்கும் மாகாளி உம்மை ரட்சிக்கும்!அவிட ஆவிய யான் பாட்டிலில் அடைத்து கடலில் வீசிவிடுவேணாக்கும். அப்புறம் உமக்கு எந்த தொந்தரவும் இருக்காது என்று சொல்லிக்கொண்டிருந்தான் நம்பூதிரி.
   கேசவன் நம்பூதிரி ஒரு மலையாள மாந்திரீகன். கேரளாவில் இருந்து குடி பெயர்ந்து தமிழகம் வந்து சேர்ந்தவன்.தமிழ்நாட்டில் பல ஊர்களை சுற்றி கடைசியாக இவ்வூரில் வந்து தங்கிக் கொண்டான். மக்களும் கிராமத்தவர்களாய் இருப்பதால் அவனது பிழைப்பு நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு தேவதை வசியம் தெரிந்து வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவன் அவன். முதலியார் பசையுள்ள பார்ட்டி என்று தெரிந்ததும் ஒட்டிக்கொண்டான். கணிசமாக ஒரு தொகையும் தேத்திக்கொண்டான். பேயை ஓட்டுகிறேன் என்று இப்பொழுது கண்கட்டி வித்தை காட்ட இங்கு வந்துள்ளான்.
   கேசவன் நம்பூதிரி ஒரு மணையில் அமர்ந்தபடி எதிரே ஒரு யாககுண்டம் அமைத்து சிலசுப்புள்களை கொண்டு தீமூட்டிக்கொண்டிருந்தான். எதிரே ஒரு கண்ணாடி சீசா திறந்து வைக்கப்பட்டிருந்தது. மஞ்சளிலும் குங்குமத்திலும் சில கோலங்கள் வரையப்பட்டு அதற்கு பூஜைகள் செய்திருந்தான் நம்பூதிரி.இரண்டு குத்து விளக்குகளில்தீபங்கள் சுடர்விட்டுக்கொண்டிருந்தன.பூசணிக்காய் எலுமிச்சை பழம் மற்றும் சில பொருட்கள் அங்கு நிறைந்து ஒரு தூபகலசத்தில் இருந்து சாம்பிராணிதூபம் மணம் வீசிக்கொண்டிருந்தது
    கேசவன் நம்பூதிரியின் வாயிலிருந்து மந்திர உச்சாடனம் உரக்க வந்து கொண்டிருந்தது ஓம்,ரீம்,சிங்,யங்,மங்,யங்,னங்,லங்,சுவாகா! என்றபடி தணலில் நெய் வார்த்துக் கொண்டிருந்தான் நம்பூதிரி, அவனது கண்கள் எதிரே இருந்த நெருப்பை விட சிவப்பாக இருந்தன.அவன் ஒவ்வொரு முறையும் அம்மந்திரத்தை கூறி நெருப்பில் நெய்யை விடும் சமயம் தணல் வீறுகொண்டு எழுந்து வீசியது.
     ஒமரிகாளி!ஒடிகாளி!சூலகபாலகாளி!பூமிகாளி பேயை ஒட்டு! பேயை ஒட்டு! மாகாளி என்று கத்தியபடி ஒரு பொடியை எடுத்து யாகத்தீயில்வீசினான் நம்பூதிரி. மறுகணம் அங்கு பலத்த காற்று வீசியது! சுடர்விட்டுக்கொண்டிருந்த விளக்குகள் அணைந்தன. சாம்பிராணி வாசம் நின்று ஒருவித பிணவாடை வீசியது! ஐவரும் திக்பிரமை பிடித்து நிற்க நம்பூதிரி சுதாரித்து,மீண்டும் மந்திர உச்சாடணம் செய்து மாகாளி இவிடமுள்ள ஆவியை பிடித்துக் கட்டு!கட்டு ! ஜெய் மாகாளி என்று மீண்டும் சிறிது பொடியை எடுத்து மந்திரம் ஓதி குண்டத்தில் போட்டான்.
   அடுத்த கணத்தில் “டமால்” என்ற ஓசையுடன் அந்த யாககுண்டமே வெடித்து சிதறியது.அச்சிதறல்கள் அங்கு நின்றிருந்த ஐவர்மீதும் சிதறியது. ஆ ஐயோ! என்று ஐவரும் கதறினார்கள் அவர்கள் உடலெல்லாம் தீப்புண்கள். நிதிலா மயக்கமடைந்தாள். ஐவரில் கேசவன் நம்பூதிரிக்கே அதிக காயங்கள் அவன் அணிந்திருந்த மேல் வஸ்திரம் முழுதும் தீயில் கருகிவிட்டது. உடல் முழுதும் ஆங்காங்கே சூட்டுக் கொப்பளங்கள். ஆயினும் முதலில் சுதாரித்து எழுந்தவன் அவனே!
   உடல் தளர்ந்து நாவரண்டு தட்டுத் தடுமாறி எழுந்த அவன் மற்ற மூவரையும் குரல் கொடுத்து எழுப்பினான். முதலியார் முதலியார் ! எழுந்திரும் என்ற அவன் குரல் கேட்டு தனவேலும் நல்ல முத்துவும் எழுந்து நிதிலா அம்மா நிதிலா என்று நிதிலாவின் முகத்தில் சிறிது தண்ணிரைத் தெளித்து எழுப்பினர்.
    முதலியார்வாள்! நீங்க ஒண்டும் பயப்படவேண்டாம் இது வல்லிய பேயாக்கும்போல் உள்ளது. இதை கட்டும் விதம் யாம் அறிவோம் எண்ட மாகாளி உம்மை ரட்சிக்கும்! மனச தளர விடாதேயும்! வரும் பௌர்ணமியில் யான் இப்பேயை சம்கரிக்கிறான். பயப்படாதேயும் துர்ஆவிகள் இப்படித்தான் செய்யும்.நீர் ஒண்டும் அஞ்ச வேணாம் யான் உம்மை ரட்சிக்கும் எண்ட தெய்வம் மாகாளி உம்மை ரட்சிக்கும் என்று கூறினான் நம்பூதிரி.
  ஆனால் அவனது பேச்சில் அங்கு யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. தனவேலின் கண்களில் மிரட்சி தெரிந்தது.நல்லமுத்து வாயே திறக்கவில்லை. நிதிலாவோ அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீள வில்லை. மாந்திரீகரே இதை விரட்ட முடியும்னு எனக்கு தோணல விட்டுடுவோம் இதுக்காக ஆபத்த விலைகொடுத்து வாங்க நான் தயாரா இல்ல! ஏற்கனவே இரண்டு உசுற அந்த ஆவி பலி வாங்கிடுச்சு வேணாம் விட்டுடுவோம் என்றார் தனவேல் மிரட்சியோடு.
    கேசவன் கண்களில் கோபம் தெரிந்தது. முதலியார்! யான் சொல்கிறேன் இவ்வாவியை யான் சம்கரிக்கும் எண்ட மாகாளி உம்மை ரட்சிக்கும் வரும் பௌர்ணமியில் இதை யான் செஞ்சு முடிக்கும் பயப்படாதேயும் என்றான்
  அப்போது ஹா ஹா ஹா! என்ற கேலிச் சிரிபொலி அம்மாளிகை அதிர எழும்பியது. அதே சமயம் நம்பூதிரியின் கழுத்தை ஒரு துணி இருக்க முழி பிதுங்கினான் நம்பூதிரி. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
                           அழைக்கும்! (5)



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!


Comments

  1. Rohajet said...

    background colour கொஞசம் lightஅ போடுபா, கண் வலிகிது
    June 7, 2011 9:15 AM



    ஏலே தம்பி சவுக்கியமா? அவனா..... நீ..???

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!