தத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா!
தத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா!
தோழர் CP செந்தில் குமார் போல ஒரு பதிவிட முயன்று மொக்கைப் பதிவாகி விட்டது. தயவு செய்து இந்த மொக்கையை பொறுத்தருள்க!
எந்த ஃபிகரையும் பின்னாலிருந்து பார்க்கும்போது அழகாய்தான் தெரியும் முன்னால் சென்றால் தான் தெரியும் அது பெண்ணா பேயா என்று ! பின்னால் பார்த்து பின்னால் நொந்தவர்கள் கருத்து #ஃபிகராலாஜி!
அழகான ஃபிகரோடு சென்றுக் கொண்டிருந்தாலும் அட்டு ஃபிகர் ஒன்று கிராஸ் செய்கையில் அலையும் ஆண்களின் கண்கள் #ஜெண்ட்ஸாலஜி
பஸ்ஸில் செல்கையில் இருவர் இருக்கையில் நம் பக்கத்தில் எந்த குண்டு நபரும் அமர கூடாது என்று வேண்டும் மனம் .# லைஃபாலாஜி
எல்லா ஆண்களும் பெண்களும் பொதுவாக மற்றவர்களிடம் “பெரிசா”கத்தான் எதிர்பார்க்கிறார்கள் ஆனால் கிடைப்பதென்னவோ அவர்கள் விரும்பிய அளவு அல்ல! #லைஃபாலஜி
பள்ளிக்கு செல்லும் எல்லா பிள்ளைகளும் பெரும்பாலும் இன்று கணக்கு வாத்தியார் வரக்கூடாது என்று பிரார்த்திக்கிறார்கள். ஆனால் பாவம் கடவுள்தான் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை #ஸ்டூடண்டாலஜி
காலியாக வரும் பேருந்தில் ஏறும் இளம்பெண்ணின் ஃபெர்ம்யூம் வாசம் பஸ்ஸை நிறைக்கிறது. ஆனால் ரசிக்கத்தான் அங்கு யாருமில்லை! #சைட்டாலஜி
முன் சீட்டில் பயணிக்கும் பெண்ணின் கூந்தல் வாசம் மூக்கைத் துளைக்கையில் பக்கத்து இருக்கை ஆசாமியின் அக்குள் வாசம் மறைந்து போகிறது! # பஸ்ஸாலஜி
காலேஜ் ரோட்டில் செல்லுகையில் காத்திருக்கும் ஒரு ஃபிகராவது நம்மைத் திரும்பிப் பார்க்காதா என்று நினைக்கிறது ஆணின் மனசு.திரும்பி பார்த்தாலோ அன்று முழுக்க சிவராத்திரிதான் # ஜெண்ட்ஸாலஜி
அலுவலகத்தில்புதிதாக சேர்ந்த பெண் நம்மிடம் உதவிக்கு வருவாளா என்று ஏங்கும் வேளையில் அடுத்த சீட் ஆசாமியிடம் செல்லும் போது நமக்கு உண்டாவதுதான் பொறாமை # ஆபீஸாலஜி
நம்மை ஏற்றாமல் சென்ற பஸ்ஸை வேறோர் பஸ்ஸீல் சென்று டிராபிகில் பிடிக்கும் போது உண்டாகும் சந்தோஷத்திற்கு நிகர் வேறொன்றுமில்லை! #மனசாலஜி
எப்போதும் நம்மை பார்த்து புன்னகைக்கும் பெண், பக்கத்து வீட்டு வாலிபனோடு தியேட்டரில் ஐஸ்கிரிம் சாப்பிடுகையில்,பார்க்கையில் நமக்கு ஏற்படுவது என்ன? கோபமா? வருத்தமா? இனம்புரியாத உணர்வா? #ஜெண்ட்ஸாலஜி
நமக்குப் பிடித்த நடிகைக்கு கல்யாணம் என்ற செய்தி கேட்கும்போது என்னமோ நமது காதலியை பறிகொடுத்த நினைப்புல டாஸ்மார்க்கை தேடுது மனசு # ஜெண்ட்ஸாலஜி
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை பதியலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
அத்தனையும் அருமை கலக்கிட்டிங்க நீங்களும்
ReplyDelete