இன்று இரவு முழு சந்திர கிரகணம்

சென்னை: இன்று இரவு முழு சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்த ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து ஜூலை முதல் தேதிக்குள் மொத்தம் மூன்று கிரகணங்கள் ஏற்படுகின்றன. ஜூன் முதல் தேதி அன்று, பகுதி சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்போது, ஜூன் 15ம் நாள் 2011ம் ஆண்டின் முதல் முழு சந்திர கிரகணம் எற்படுகிறது. இந்த முழு சந்திர கிரகணத்தின் போது, முழு நிலா நாளில், நிலவு முழுமையாக நம் கண்களிருந்து மறைக்கப்பட்டு விடும். அது மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் மிகக் கருமையான சந்திரக் கிரகணம் இதுதான் என்றும் சொல்லப்படுகிறது. அடுத்து ஜூலை முதல் தேதி மீண்டும் பகுதி சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக, உலகின் பாதி மக்கள் பார்த்து மகிழலாம். இது ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா முழுமைக்கும் தெரியும். தென்அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இக்கிரகணம், துவங்குகிறது.

மேற்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்சில், ஜூன் 16ம் நாள் சூரிய உதயத்துக்கு முன் கிரகணம் முடிகிறது.
 இந்த சந்திர கிரகணம் இன்று இரவு 11.52க்கு துவங்கி மறுநாள் வியாழகிழமை 3.32 மணிக்கு முடிகிறது. 
தர்ம சாஸ்திரப்படி மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். கிரகணத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் உட்பட பிரபல கோயில்களில் இன்று மாலையே நடை அடைக்கப்பட்டுள்ளது.
இந்த கிரகணம் இந்த ஆண்டில் நிகழும் மிகப்பெரிய கிரகணமாகும் இது 107 நிமிடங்கள் வரை நீடிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த அரிய நிகழ்வை காண உலகம் முழுதும் ஆர்வலர்கள் குவிந்துள்ளனர். நாமும் கண்டு களிப்போமே!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2