கருணாநிதியின் எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து!

சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் எம்.எல்.ஏ. பதவியை கருணாநிதி வீனாக்குவதால் அவர் அந்த பதவியில் இருந்து விலகிக் கொள்வதே அவருக்கு அழகு என அதிமுக முன்னாள் எம்.பி முத்துமணி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாநிலங்களவை முன்னாள் எம்.பி. எஸ். முத்துமணி ஒரு கட்டுரையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் அதன் அமர்வு காலங்களில் பங்கேற்பது குறித்து விதிமுறைகள் உள்ளது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாத கருணாநிதி சட்டமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார்.
எப்படியென்றால், சட்டமன்றத்திற்கு வந்து நுழைவு இடத்தில் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டாலே சட்டமன்றத்தில் கலந்துகொண்டதாக எடுத்துக் கொள்ளப்படும் என கருணாநிதி போன்றவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் உண்மையான அந்த விதிமுறை என்ன என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 190(4) கூறுகிறது. அதாவது தொடர்ந்தாற்போல் ஒரு மாநில சட்டமன்ற கூட்டங்களுக்கு அனுமதியின்றி 60 நாட்களுக்கு மேல் ஒரு உறுப்பினர் வருகை தராமல் இருந்தால் அவருடைய இடம் காலியாக இருக்கிறது என அறிவிக்கப்படலாம்.
அந்த 60 நாட்களைக் கணக்கெடுக்கும் போது, தொடர்ந்தாற் போல் நான்கு நாட்களுக்கு மேல் சபையின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு இருந்தாலும் அல்லது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் அத்தகைய நடவடிக்கைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டால் மட்டும் போதாது. சட்டமன்ற அமர்வுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்குபெற வேண்டும் என்பதே தெளிவாகின்றது. இதைப் புரிந்து கொள்ளாமல் கருணாநதி மக்களாட்சி மரபுகளை புறக்கணிக்கின்றார். இது அரசமைப்புச் சட்ட விதியையே அவமானப்படுத்துவது ஆகும்.
எனவே, இவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சட்டப்படி நீக்கப்படுவதற்கான முகாந்திரங்களை உருவாக்குகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 20(1)ன்படி பேரவைக் கூட்டங்களுக்கு வராமல் இருப்பதற்கான அனுமதியை உறுப்பினர்களுக்கு அளிக்கலாம். அதற்கான விவாதம் ஏதுமின்றி அந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
உள்பிரிவு (2) ன்படி பேரவையின் அனுமதியைப் பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு எல்லாக் கூட்டங்களுக்கும் எந்த உறுப்பினராவது வராமல் இருந்துவிட்டால் அவருடைய பதவி காலியானதாக அறிவிக்கப்படும்.
அதற்குரிய தீர்மானத்தைப் பேரவை உறுப்பினர் எவரேனும் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் திருத்தம் எதுவுமின்றி பேரவையின் வாக்கெடுப்புக்கு விடப்படும்.
அரசமைப்புச் சட்டத்தின் 190 ஆவது பிரிவின் 4 வது உட்பிரிவின்படி கணக்கிடப்பெற்ற 60 நாட்களுக்குத் தொடர்ந்து எல்லாக் கூட்டங்களுக்கும் வராதவராக அந்த உறுப்பினர் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளின்படி பேரவையின் கூட்டங்களுக்கு 60 நாட்களுக்கு தொடர்ந்து ஒருவர் வராமல் இருந்தால் அவர் தன்னுடைய உறுப்பினர் பதவியையே இழந்துவிட நேரிடும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, கடந்த கால விதி மீறல்களுக்கு விடை கொடுத்து விட்டு அரசமைப்புச் சட்டத்தின்படி, பேரவை விதிமுறைகளின்படியும் அவையை நடத்திச் செல்வது என்று உறுதி பூண்டுள்ளது.
சட்டப் பேரவையின் முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமலே சென்றுவிடுவதை அனுமதிக்க முடியாது.
வருகைப் பதிவேடு என்பது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டுவிட்டு உள்ளே வருவதற்காகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அவைக்கு வராமல் சென்றுவிட்டால் அது வராமைப் பதிவேடாக மாறிவிடும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் வருகைக்கான அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள்.
ஆனால் அட்டையை பஞ்ச் செய்துவிட்டு உள்ளே செல்லாமல் வெளியே சென்றுவிட்டால் அவர் பணிக்கு வந்ததாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதே போன்று தான் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாக கூறி வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்ட உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு வராமலே சென்றுவிட்டால் அவர் அன்றைய கூட்டத்திற்கு வரவில்லை என்றுதான் கணக்கிடப்படும்.
கருணாநிதியைப் பொறுத்தவரை புறக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வருகைப் பதிவேட்டில் மட்டும் கையொப்பம் இட்டுவிட்டு கூட்டத்திற்கு வராமல் சென்றுவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.
இம்முறை தன் மகன் ஸ்டாலினை தி.மு.க. சட்டமன்ற குழுவுக்கு தலைவராக ஆக்கிவிட்டு அவர் மட்டும் வெளியிலேயே தங்கிவிட்டார்.
தொடர்ந்து 60 நாட்களுக்கு அவர் சட்டமன்றக் கூட்டத்திற்கு வராமல் இருந்துவிட்டால், அவருடை பதவி காலியாகிவிட்டதாக அறிவிக்கும் தீர்மானம் ஒன்றை பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறது.
இந்நிலையில் சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத கருணாநிதி தன்னுடைய உறுப்பினர் பதவியை விட்டு விலகிக் கொள்வது நல்லது என்று முத்துமணி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது எம்.எல்.ஏ.வாக இருந்தபோது கருணாநிதி அவைக் கூட்டங்களில் பங்கேற்றதில்லை. மாறாக கையெழுத்துப் போட்டு விட்டுச் சென்று விடுவார். அதேசமயம், கடந்த திமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா அதுபோல இல்லாமல், அவ்வப்போது கூட்டங்களில் பங்கேற்றார், பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் விமரிசனங்களைப் பதியலாமே! பதிவு பிடித்திருந்தால் கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment