ஆவி அழைக்கிறது! பகுதி 6

ஆவி அழைக்கிறது! பகுதி 6
              எழுதுபவர் உங்கள் பிரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியிலிலுள்ள தன் பரம்பரைபங்களாவை சீர்படுத்தி கட்ட முயல்கிறார் தனவேல் முதலியார்.ஆனால் வேலைக்கு வரும் இரண்டு நபர்கள் அடுத்தடுத்து இறந்துபோகவே பங்களாவில் ஆவி அடித்துவிட்டதாக யாரும் வேலைக்கு வரவில்லை. ஆவியை விரட்ட மந்திரவாதி கேசவன் நம்பூதிரியை நாடுகின்றனர். அவன் செய்யும் பூஜையில் தீ விபத்து ஏற்பட்டு அனைவரும் காயமடைகின்றனர். எனினும் தான் ஆவியை விரட்டித் தருவதாக நம்பூதிரி கூறும் சமயம் அவனது கழுத்து துணியால் இறுக்கப் படுகிறது.

இனி:   மந்திரவாதியின் கழுத்து இறுக்கப்படுவதை பார்த்து ஏதும் செய்வதறியாது அனைவரும் தவிக்க முதலில் அதிலிருந்து மீண்ட நல்லமுத்து சாமி! சாமி! என்ன ஆச்சு சாமி என்று கழுத்துத் துணியை அகற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. அதே சமயம் மந்திரவாதியின் வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருக்க சில நிமிடங்களில் அந்த துணியின் இறுக்கம் தளர்ந்து மந்திரவாதி விடுபட்டான்.
   “ஹா ஹா ஹா” என்ற சிரிப்பொலி மீண்டும் எழுந்தது. அத்துடன் ஏய் மந்திரவாதி என்னிடம் உன் மந்திரம் பலிக்காது வீணாக முயற்சித்து உன் உயிரை விடாதே ஏதோ போனால் போகட்டும் என்று உன்னை இந்த மட்டில் விடுகிறேன். தனவேலை விடமாட்டேன். ம்.. ஓடிபோ என்று ஒரு கரகரத்த குரல் சொன்னது.
   அத்துடன் அந்த கேலிச்சிரிபொலியும் மெல்ல மெல்ல அடங்கிப்போனது. சற்று நேரத்தில் அந்த இடமே மயான அமைதி நிலவியது.முதலியார் மிகவும் பயந்து போயிருந்தார். நிதிலாவுக்கு ஒன்றுமே புரியவில்லை எல்லாம் மாயாஜால படத்தில் வருவதுபோல இருந்தது. தீக்காயங்கள் வேறு அவள் உடலை வருத்திக்கொண்டிருக்க மிகவும் சோர்வாக காணப்பட்டாள்.
   நம்பூதிரி முதலில் வாயைத் திறந்தான். முதலியார் கவலைப்படாதேயும் துஷ்ட ஆவிகள் இப்படித்தான் பயமுறுத்தும்.சேஷ்டைகள் செய்யும் முதலில் இது யாருண்ட ஆவி என யான் நோக்க வேணும். அது நோக்கி அறிஞ்ச பிறகு இதை கட்டும் வழி கிடைக்கும். நாளை கழிச்சு எம்மோட குடிலுக்கு நீர் வரணும் வந்தேங்கில் யான் மை போட்டு யார் என்று காட்டுவேன் அத்துடன் உம்ம குடும்பத்தையும் ரட்சிப்பேன் மனசிலாயாயிட்டுள்ளா? அப்ப நான் வரட்டா இக்காயங்களுக்கு பச்சிலை மருந்து வச்சு கட்டனும் இல்லங்கில் சீழ் பிடிக்கும் என்று யாருடைய பதிலையும் எதிர்பாராது அவ்விடத்தை விட்டு அகன்றான்.
  காலைச் சூரியன் உதிக்க ஆரம்பிக்க மற்ற மூவரும் அந்த மாளிகையை விட்டு வெளியே வந்தனர். தனவேல் கவலையாய் நிதிலாவைப் பார்த்தார். நிறைய காயம் பட்டுடாச்சாம்மா? என்றார் தலையை வருடியபடி. இல்லப்பா எனக்கு லேசாத்தான் பட்டிருக்கு இட்ஸ் ஓகே ஐம் ஆல்ரைட் நீங்க ஒண்ணும் பயப்பட வேண்டாம் என்றாள் நிதிலா.
ஆனாலும் தனவேலுக்கு மனசு கேட்க வில்லை. வாம்மா டாக்டர் கிட்ட போகலாம் என்று நிதிலாவை வற்புறுத்தி டாக்டரிடம் அழைத்துச் சென்றார். அந்த டாக்டர் ஒகே எப்படி இந்த புண் ஏற்பட்டுச்சு என்று கேட்க நிதிலா என்ன சொல்வதென்று முழித்தாள்.தனவேல் அது.. அதுவந்து.. என்று இழுத்தார்.
 என்ன அதுவந்து தயங்காம சொல்லுங்க அப்பதான் காயத்துக்கு தகுந்த சிகிச்சை தர முடியும் என்றுசொல்ல தனவேல் நடந்த அனைத்தையும் விவரித்தார்.
   அதைக் கேட்டு அந்த டாக்டர் சிரி சிரியேன சிரித்தார். வாட் எ பிட்டி இந்த் இருபதாம் நூற்றாண்டில் கூடவா இந்த பேய் பிசாசு ஆவியெல்லாம்  சுத்த முட்டாள் தனம். ஏம்மா நீ கூடவா இதை நம்பற என்று நிதிலாவிடம் கேட்டார். முதல்ல எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாமத்தான் இருந்தது டாக்டர். ஆனா இப்ப எங்க வீட்லயே இப்படி நடக்கும் போதுநம்பாம இருக்க முடியல என்றாள்.டாக்டர் தோளை குலுக்கிக் கொண்டார்.
  சரி அதெல்லாம் உங்க மனசு சம்பந்த பட்டவிஷயம். எப்படியோ போகட்டும் இந்த காயம் ஏதாவது வெடிப்பொருட்களால ஏற்பட்டிருக்கலாம்னு தோணுது . என்றவர். சில மருந்துகளையும் ஆயின்மெண்ட்டையும் தந்தார்.

மறுநாள் அதிகாலையிலேயே விழித்துவிட்ட நிதிலா தந்தையின் அறைக்கு காபியுடன் நுழைந்தாள். அப்பா எழுந்திருங்க நம்பூதிரி வீட்டுக்கு  போக வேண்டாமா? என்று எழுப்பினாள். எழுந்த தனவேல் கண்டிப்பா போய்தான் ஆகணுமா நிதிலா? என்றார்.ஏம்பா இப்படி கேக்கறீங்க?இல்லே இவ்வளவு நடந்தப்புறமும் நாம இந்த பங்களாவ புதுப்பிக்கணுமா இன்னும்பல உயிர்களை பலி கொடுக்கணுமான்னு தோணுது.
   என்னப்பா நீங்க அதான் அந்த நம்பூதிரி வாக்கு கொடுத்திருக்கார் இல்லையா அந்த ஆவிய ஓட்டறதா அப்புறம் எதுக்கு பயப்படனும்.இன்னிக்கு போய் பார்த்திடுவோம் சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புங்கப்பா என்றாள் நிதிலா தனவேல் அரை குறையாய் தலையாட்டினார்.
   நம்பூதிரியின் குடிலுக்கு அவர்கள் சென்றபோது அவன் திண்ணையில் அமர்ந்து வெற்றிலைப் போட்டுக் கொண்டிருந்தான். முந்தைய நாள் புண்கள் உடலில் ஆங்காங்கே தென்பட்டுக் கொண்டிருந்தது. வாரும் முதலியார் வாரும் என்றவாரே காவிப்பல்தெரிய சிரித்தவாறே வறவேற்றான். சித்த உக்காரும் யான் இப்ப வரும் என்று திண்ணையைக் காட்டினான்.பிறகு எழுந்து சென்று வெற்றிலையை துப்பிவிட்டு கை கால் முகம் கழுவி திருநீரணிந்து வந்தான் .
  முதலியார் நீர் ஒன்னும் அஞ்சவேணாம் யான் அந்த ஆவிய பார்த்துக்கரேன்.வாரும் பூஜை அறைக்கு போலாம் என்று அழைத்துச் சென்றான் அந்த அறையில் ஒருவித நறுமணம் வீசிக்கொண்டிருந்தது. ஒரு காளிதேவியின் பிரம்மாண்ட படம் முன்னே குத்துவிளக்கொன்று சுடர் விட்டுக்கொண்டிருந்தது. எதிரே இருந்த மனையில் அமர்ந்த நம்பூதிரி அவர்களையும் அமருமாறு சைகை காட்டினான்.
  பின்னர் ஒரு வெற்றிலையை எடுத்து சில மந்திர உச்சாடனங்களை கூறி கருப்பு மையைக் கொண்டு அவ்வெற்றிலை முழுக்கப் பூசினான். பின் சில மந்திர உச்சாடனங்களை கூறினான்.சிலநிமிடங்கள் இவ்வாறு கழிந்தது.பின் ஜெய் மாகாளி வா வா வந்து காட்டு தனவேலின் வீட்டில் வசிக்கும் ஆவியைக் காட்டு என்று வெற்றிலையை உற்று நோக்கினான் அவன் முகம் மலர்ந்தது.
  தனவேலை அருகில் அழைத்து வெற்றிலையைக் காட்டினான் அதில் தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் முதலியார். நிதிலாவும் அந்த உருவத்தைப் பார்த்தாள் அந்த உருவம் அவள் மனதில் எதையோ சொன்னது.
   அழைக்கும்(6)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2