சுத்தமா இருக்கியளா ! நகைச்சுவை!


 சுத்தமா இருக்கியளா ! நகைச்சுவை!


சுத்தம் சோறுபோடும் என்பது பழமொழி அதைநாம் இப்ப கடைபிடிப்பதே இல்லை என்பது எல்லோருக்குமே தெரியும். சென்னை மாநகர் தான் நம்ம சுத்தத்த பத்தி பளிச்சுன்னு தெரிவிக்குதே???.நகரம் முழுக்க இலவச கழிப்பிடம் கட்டி வச்சாக்கூட நம்ம ஆள் காம்பவுண்ட் சுவத்து மேலதான் பிஸ் அடிப்பாரு ஏன்னாஅங்கதான் சுகமா இருக்குதான்.பக்கத்துலயே பலாப்பழவண்டிக்காரன் வித்துகிட்டிருப்பான் பத்திருபது பேர் அதை வாங்கி திண்ணுகிட்டிருப்பாங்க. அந்த அளவுக்கு சுத்த பத்தம் தெரிஞ்சவங்க நாம ???
    கண்ட இடத்தில எச்சில்துப்பறதல நம்மாளுங்கள மிஞ்சவே முடியாதுங்கன்னா? அதெப்படி சதா வாயில்லே உமிழ்நீர் சுரக்குமான்னு தெரியல போய்கிட்டே இருப்பாங்க ப்ளிச்சுன்னு துப்பிட்டு தொடர்ந்து போவாங்க பக்கத்துல யாருவராங்க எதிருல யாருன்னு பாக்கவே மாட்டாங்க அவங்க கவல அவங்களுக்கு.இது கூட பரவாயில்லேங்க பஸ்ல போயிகிட்டிருக்கும் போது பஸ் சிக்னல்ல நிக்காங்காட்டியும் பளிச்சுன்னு துப்புவாங்க பாரு பக்கத்துல யாரவது டூவீலர் காரன் இருந்தான்னா அவனுக்கு அபிஷேகம்தான்
 இந்த சுத்த்த எல்லாம் விடுங்க வீட்ட சுத்தமா வச்சிக்க தெரியுமா நம்மாளுக்கு எல்லாம் இறைஞ்சு கிடக்கும் சோபா மேல தப்பித் தவறி வந்த விருந்தாளி உக்காந்தா ஊசி ஒண்ணு குத்தி அப்புறம் அவன் அந்தபக்கம் தலை வச்சே படுக்கமாட்டான்ல!
என்னடா இவன் என்னத்த சொல்ல வரான் சுத்தம் சோறுபோடும்னா அப்ப சுகாதாரம் குழம்பு ஊத்துமா?ன்னு பழய டயலாக்க எடுத்து விடாதீங்க! நலமான்னு கேக்கறோம் இந்த வார்த்தைய கேட்டவுடனே வாயெல்லாம் பல்லாக சவுக்கியந்தான் என்று சொல்கிறோம்ல இந்த நலம் சவுக்கியம் இதெல்லாத்துக்கும் காரணம் சுத்தங்க வீடு சுத்தமா இருந்தா உடம்பு சுத்தமா இருந்தா நமக்கு நோய் ஏங்க வரப்போவுது.
  சுத்தத்துல பலவகை உண்டுங்க அதுல சொல்வாங்க பாருங்க வாக்கு சுத்தம்,தொழில் சுத்தம்னு பலது இருக்கு. இதெல்லாம் கடைபிடிச்சா நீங்க பெரிய ஆளுதான். அட ஒண்ணுமே இல்லங்கறத கூட நம்மாலுங்க சுத்தமா இல்லேன்னுதான் சொல்லுவாங்க தெரியுமா?
  இது மாம்பழ சீசன் கடையில பழத்த வாங்கி அப்படியே நவுத்தறீங்களா அது ரொம்ப தப்புங்க! பழத்துமேல என்னல்லாமோ படிஞ்சிருக்கும் கழுவிட்டுதான் சாப்பிடனும் இது கூட நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சிக்கிரீங்க இல்லையா? ஆனா ஐந்தறிவு உள்ள ஒரு மிருகம் அதுக்கு தெரியுதுங்க சுத்தத்த பத்தி!
இராக்கூன் அப்படின்னு ஒரு மிருகம் இருக்குதாம் அது தன்  உணவை நீரில் கழுவிய பிறகுதான் சாப்பிடுமாம் அந்த அளவுக்கு அது சுத்தமான பிராணியாம் நீங்களும் இனிமே சுத்தமா இருப்பீங்க இல்ல முறைக்காதீங்க அப்புறம் பாக்கலாம் வரேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2