என்று திருந்தும் இந்த ஜன்மங்கள்!

என்று திருந்தும் இந்த ஜன்மங்கள்!


நேற்று பஜாருக்குச் செண்றிருந்தேன். ஒரு குளிர்பானக் கடையில் குளிர்பானம் அருந்தியபடி இருந்தபோது அருகில் சிகரெட் நாற்றம். சற்று தள்ளி நின்றாலும் சிகரெட் புகை நம்மை துரத்தியது. புகை நமக்கு எப்பொழுதும் பகை எனவே கடைக்காரரை நோக்கினேன். அவரும் சங்கடப்பட்டவாரே மூக்கருகே விரலை வீசிக்கொண்டிருந்தார். அவரால் ஏதும் பிரயோசனமில்லை நாமே களத்தில் குதிக்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தேன்.
   புகைக்கு காரணம் அந்த குளிர்பான கடையில் நின்றிருந்த ஆசாமிதான் ஹாயாக புகை விட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமியிடம் ஹலோ சிகரெட் வாங்கினா இங்கேயே பிடிக்கணுமா கொஞ்சம் தள்ளிப்போயி பிடிக்க கூடாதா? எங்களுக்கு டிஸ்டர்பா இருக்கு என்றேன்.
அந்த ஆசாமி அசருவதாக இல்லை டிஸ்டர்பா இருக்குன்னா வெளிய வந்தா எல்லாம் டிஸ்டர்ப்தான் அதுக்கு நீ வெளிய வந்தே இருக்க கூடாது இது என்ன உன் இடமா கடைதான இங்க பிடிச்சா என்ன தப்பு என்று முறைத்தார்.
  மிஸ்டர் பொது இடத்தில புகைக்க கூடாது தெரியுமில்ல என்றேன். யோவ் அப்புறம் எங்கதான் நாங்க பிடிக்கிறதாம்சொல்லவந்துட்டாரு சட்டம் இது கடை பொது இடமில்ல
என்று பேசிக்கொண்டே போக கடைக்காரர் அட விடுங்க சார் இவங்கள்லாம் சொன்னா கேக்கமாட்டாங்க என்று மெல்லியகுரலில் கூறினார்.
   எனக்கு கடுமையான ஆத்திரமாக வந்தது. இதுபோல பலமுறை நான் ஆட்சேபித்த போதெல்லாம் புகைப்பவர்கள் விலகிச் சென்றுள்ளனர்அல்லது சிகரெட்டை அணைத்துள்ளனர். ஆனால் இவரோ! கடைக்காரர் வேறு நம் வாயை அடைக்கிறாரே? என்ன செய்வது அவர் வியாபாரம் அவருக்கு.
   அறிவுள்ளவனாக இருந்தால் சொன்னது புரியும் முட்டாள்களிடம் பேசிப் பயனில்லை என்று அவன் காதுபடக் கூறியும் அவன் சட்டைசெய்யவில்லை.தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தான். இது போன்ற ஜென்மங்களை யார் திருத்துவது? நமது அரசாங்கமோ பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை என்று ஒப்புக்கு ஒரு சட்டத்தை போட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.
 சட்டத்தை காக்க வேண்டிய போலிஸாரே பொது இடத்தில்புகைப்பதை நான் கண்டிருக்கிறேன். இத்தகைய கொடுமை நம் நாட்டில் தவிர வேறெங்கும் நடக்காது. சினிமா தியேட்டர்கலிலும் டீக்கடை வாசல்கலிலும் பஸ் ஸ்டாண்ட்கலிலும் இப்படி ஒரு கூட்டமே அலைகிறது இவர்களை யாரும் தட்டிகேட்பதே இல்லை.
  தமிழ்நாட்டில் பொது இடத்தில் புகைபிடிக்க தடை செய்யும் சட்டம் செயல் படுகிறதா என்ற சந்தேகமே எனக்கு வந்து விட்டது இந்த மாதிரி ஆசாமிகளால் அவர்களை விட அவர்கள் அருகிலிருப்போர்தான் அதிகம் பாதிக்க படுகிறார்கள் என்று யார் போய் சொல்வது. இந்த பாக்கு போடுபவர்களாலும் பெரும் தொல்லைதான். பஸ்களின் ஜன்னலோர சீட்டுக்களில் அமர்ந்துகொண்டு அடுத்த சீட்டுக் காரர்களுக்கு இவர்கள் பன்னீர் தூவி உபசரிக்கும் பாங்கே தனி அழகுதான்!
திருடனே பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அதுபோல இவர்களாக திருந்தா விட்டால் ஒழிய இந்த பழக்கத்தை ஒழிக்க முடியாது போல தோன்றுகிறது. நம் அரசாங்கமோ வருமானத்திற்கு இந்த புகையிலை சார்ந்த பொருட்களைத் தான் நம்பிக்கொண்டுள்ளது போல அதுமட்டுமில்லாமல் இந்த தொழிலில் உள்ள பெரும் முதலைகள் நம் அரசியல்வாதிகளை கவனித்துகொள்வதால் இந்த தொழிலில் அமோகமாக எந்த குற்ற உணர்வுமில்லாமல் சம்பாதித்துக்கொண்டுள்ளன.
  இளைய சமுதாயமோ இந்த புகையிலை பொருட்களால் சீரழிந்து வருகிறது. 15வயதிற்குள்ளேயே பீடி சிகரெட்,பாக்கு என்று போட்டுக்கொண்டும் புகைத்துக்கொண்டும் தான் கெடுவதோடு மட்டுமில்லாமல் மற்றவர்களையும் கெடுத்து வருகின்றது. இவர்களை கட்டுப்படுத்த போதுமான அளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இல்லை. இனியாவது அரசு விழித்துக் கொண்டு போதுமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும்.பொது இடத்தில் புகைப்பதை முழுமூச்சில் தடுக்கவேண்டும் அப்படி புகைப்பவர்களை பற்றி தகவல் தர பொது தொலைபேசி எண்கள் தரவேண்டும்.

இதெல்லாவற்றையும் விட புகை பிடிப்பவர்கள் திருந்தவேண்டும்! என்று திருந்தும் இந்த ஜென்மங்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே பதிவு பற்றிய தங்களின் கருத்தை இடலாமே! நன்றி!

Comments

 1. உன்மையிலேய அரசாங்கத்திற்கு மக்கள் மேல அக்கறை இருந்தால் புகையிலை சம்பதமானவற்றை விற்பதையே தடை செய்ய வேண்டும்,///////////////அப்படி இருந்தால் தான் இன்று புகைபவர்களை திட்டும் நீங்களும் தப்பிக்க முடியும்.................அவர்களை இவ்வளவு அக்கறையுடன் திட்டும் நீங்கள் இதை சிந்திக்க தவறி விடீர்கள் என்று நினைக்கும் பொது உங்க சுயநலம் தெரிகிறது.

  ReplyDelete
 2. நண்பர் அபு சானாவுக்கு பதிவை நன்கு படித்துப்பார்க்கவும். புகையிலை பொருட்களை தடைசெய்யவேண்டும் அது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வேண்டும் என்றே எழுதியுள்ளேன்.இதில் எனக்குத் துளியும் சுயநலமில்லை! ஏனெனில் நான் புகையிலை வியாபாரியுமில்லை.அரசியல் வாதியுமில்லை! நன்றி!

  ReplyDelete
 3. நீங்கள் சொல்லவதும் சரிதான், நான் தான் சரியாக வாசிக்காமல் விட்டுட்டேன்...........எனது கருத்தில் தவறிருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
 4. நண்பர் அபு சானா!
  தங்கள் வருகைக்கு நன்றி இதில் மன்னிக்க ஏதுமில்லை தங்கள் கருத்துக்களைத் தயங்காது எடுத்துரைக்கலாம். நன்றி!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2