ஆவி அழைக்கிறது! பகுதி 8

ஆவி அழைக்கிறது!
       பகுதி 8
                     எழுதுபவர் "பிசாசு"

முன்கதை சுருக்கம்: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தன் பரம்பரை பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு அடுக்கடுக்காய் சிக்கல்கள் இரண்டு வேலையாட்கள் பலியாகிவிட மந்திரவாதி கேசவன் நம்பூதிரியை நாடுகிறார். அவரையும் பயமுறுத்தும் அந்த ஆவி தனவேலின் பழைய காதலி பொன்னம்மா என்று தெரியவருகிறது. இனி:

நிதிலா அந்த பாழடைந்த பங்களாவை மீண்டும் ஒருமுறைப் பார்த்தாள். நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டாள்.ம்ம்..! இந்த குட்டிச்சுவரால் எவ்வளவு பிரச்சனை. இரு உயிர்களை வேறு குடித்துவிட்டது. இன்னு எத்தனை உயிர்களை பலிவாங்குமோ? பேசாமல் இதை சரிப்படுத்துவதை விட்டுவிட்டு சென்னைக்கே திரும்ப சென்று விடலாம்! வீணாய் எதற்கு ஆபத்தை விலை கொடுத்து வாங்கவேண்டும். இங்கே வந்ததிலிருந்து எதுவுமே சரியில்லை. மந்திரவாதி மையில் காட்டிய முகம் என் முகம் போலிருந்ததே அந்த பெண்ணை அப்பா வேலைக்காரி என்கிறாரே! அப்படியானால் நான்? இவ்வாறு அவள் மனம் சஞ்சலப்பட்டுகிடந்தது.
   பங்களாவின் வாயிலில் சறுகுகள் சிதறிக்கிடந்தன. சில கறுகிக் கிடந்தன. வௌவால்களும் துரிஞ்சல்களும் பறந்தன. எதொ ஓர் துர் வாடை அந்த இடத்தில் வீசியது. மந்திரவாதி இரண்டு நாட்களுக்கு முன் பூஜை செய்து விட்டுப்போன பொருட்கள் சிதறிக்கிடந்தன. குங்குமமும் மஞ்சளும் கோலப்பொடியும் கலந்து அங்கு ஒரு புது வித கோலத்தை உருவாக்கியிருந்தன.
     காட்டுக்குயிலின் ஒசையோடு ஆந்தைகளின் அலறல்களும் சேர்ந்து அந்த இடத்தை பயங்கரமாக்கி காட்டின. ஆனால் இது எதற்கும் அஞ்சாமல் நிதிலா பங்களாவினுள் நுழைந்தாள் திடீரென அங்கு ‘சலசல’ வென ஓசைக்கேட்க நிதிலா சற்றே அதிர்ந்து நின்றாள். அணில் ஒன்று சறுகுகளிடையே ஒடியது கண்டு பெருமூச்சு விட்டாள்.
   இந்த வீட்டை சரி பண்ணியே ஆகவேண்டுமா? நமக்கிருக்கும் பணத்திற்கு இதை விட அழகாக வேறு ஒரு பங்களாவையே கட்டிக்கொள்ளலாமே! அதை விடுத்து இந்த பங்களாவை சரி பண்ண அப்பா முயல்வது ஏன்? யோசித்தவாறே உள்ளே நுழைந்தாள் நிதிலா. அவள் மனதில் வெற்றிலையில் கண்ட அந்த முகம் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை சஞ்சலப்படுத்திக்கொண்டிருந்தது. ம்! நன்றாக இந்த பங்களாவை சுற்றி பார்த்துக் கொள் இனி இந்த பங்களாவிற்கு நீ வரப்போவதில்லை என்று உள்ளுணர்வு ஒன்று அவளுக்கு உணர்த்தியது.
   அந்தபங்களாவை இருள் சூழ்ந்து கொண்டது. நிதிலா கையில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்தாள் . அதன் மங்களான ஒளியில் முன்னேறினாள் ஆங்காங்கே சிலந்திக் கூடுகள் தடைசெய்த வழியை விலக்கிக் கொண்டு முன்னேறினாள். இந்த 19 வயதில் இதுவரை ஒருமுறைக் கூட இந்த ஊருக்கோ பங்களாவிற்கோ தனவேல் அவளை அழைத்து வந்ததில்லை. அது ஏன் என்று அவளுக்குப் புரியவில்லை.
   சிலந்திக் கூடுகளோடு சில செங்குளவிகளும் அவளை வறவேற்றன. அவற்றில் ஒன்று அவள் முகத்தில் கொட்டிவிட வலியால் துடித்தாள் நிதிலா. திரும்பி விடலாமா என்று நினைக்கையில் அவளுக்கு அந்த பங்களாவில் யாரோ இருப்பது போல தோன்றியது. சரி இன்னும் கொஞ்சம் முன்னேறிப் பார்ப்போம் என்று உள்ளே இருந்த மாடிப் படிகளில் ஏற ஆரம்பித்தாள் நிதிலா.
   அதே சமயம் தனவேலிடம் கத்திக் கொண்டிருந்தார் நல்ல முத்து யோவ் என்னய்யா நீ அந்த ஆவி பங்களாவிற்கு தனியா பொண்ண அனுப்பிச்சிட்டு இங்க உக்காந்திருக்கே நீயெல்லாம்... முதல்ல கிளம்புய்யா! ஏதாவது ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகப்போகுது! ஏற்கனவே ரெண்டு உசுர அந்த ஆவி பலி வாங்கிடுச்சு என்று பரபரப்பாக தனவேலை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்.
  தனவேலோ, அமைதியாக நல்ல முத்து உனக்கு ஒன்னும் தெரியாததுஇல்லே! நிதிலாவிற்கு ஒன்னும் ஆகாது. அவ தைரியமானவ! அதோட அங்க இருக்கறது யாரு பொன்னம்மாவோட ஆவிதானே அது நிதிலாவை என்ன செஞ்சுடப் போகுது நானே கவலைப் படலை. நீ ஏன் இப்படி தவிக்கிற? என்று பதட்டமில்லாமல் பேச நல்லமுத்துவுக்கு கோபம் மேலும் எகிறியது.
   மனுசனாய்யா நீர் பெத்த பொண்ணை தனியா பேய் பங்களாவிற்கு அனுப்பிட்டு வியாகியானம் பேசிகிட்டு இருக்கிறிர். யோவ்! நீ அந்த பொன்னம்மாவிற்கு கொஞ்ச நஞ்சமாவா கொடுமை செஞ்சே? அவ உன் பொண்ண எதாவது செஞ்சுடப் போறா? வா முதல்ல போய் காப்பாத்துற வழியை பார்ப்போம்!.
   அப்பக் கூட நாம் எப்படி காப்பாத்த முடியும்? நம்பூதிரியையும் துணைக்கு கூட்டிடுபோவோமா? என்று நல்லமுத்து தனவேலை இழுக்காத குறையாக பிடித்து இழுத்து காரில் ஏற்றினார். கார் வேகமாக கிளம்பியது.
    பங்களாவினுள், நிதிலாவிற்கு ஏதோ பேச்சுக்குரல் கேட்க ஒலி வந்த திசை நோக்கி நடந்தாள்.அந்த குரல் ஒரு அழுகுரலாய் அவளது காதில் வந்து விழுந்தது. மவளே என் ஆசை மவளே என்னை விட்டுட்டு போயிட்டியே தாயி! பாவிப்பயல நம்பாதேனூ சொன்னா கேக்காம நம்பி மோசம் போயிட்டயே! என்று ஒப்பாரி வைத்தார் போல அந்த குரல் அரற்றியது.
  குரல் வந்த திசை நோக்கி நிதிலா நகர இப்போது எதிர் புறத்தே அக்குரலுக்கு பதில் குரல் கேட்டது. நான் எங்கேயும் போகலப்பா இங்கேயேதான் இருக்கேன்! இந்த பங்களாவில தான் குடியிருக்கேன்! என்னை ஏமாத்தனவனை பழி வாங்காம  இந்த
இடத்தை விட்டு போகமாட்டேம்பா! என்று அழுதபடி ஆற்றாமையொடு ஒலித்த குரல் ஓசை கேட்டு திரும்பினாள் நிதிலா.
   அங்கு ஒரு எலும்புக் கூடு அவள் எதிரே நின்றபடி வாயசைத்துக்கொண்டிருந்தது. ‘வீல்’ என அலறியபடி வந்த வழியே திரும்பினாள் அங்கேயும் ஒரு எலும்புக்கூடு ஓடாதே மகளே என் மகளே! என்று அவளை நோக்கி வர ஐயோ ! பேய்! பேய்! என்று அலறியபடி வாயிலை நோக்கி ஒடினாள் நிதிலா அவள் கால்கள் தளர்வடைந்தன.
   முகம் வியர்த்துக் கிடக்க நா வறண்டுபோக காப்பாத்துங்க! யாராவது காப்பாத்துங்க பேய் பேய் என்றபடி கேட்டை திறந்து கொண்டு வெளியில் வரவும் ‘ஏய் பட்டணத்து பொண்ணு ஏன் இப்படி வேர்த்து வெலவெலத்து ஓடியாரே! என்று வழி மறித்தான் ஒரு வாலிபன்.
  பேய் !... பேய்.. துரத்துது என்று அவன் மேல் மயங்கி சரிந்தாள் நிதிலா. தூரத்தே கார் ஓசை கேட்கநிதிலாவை தோள் மீது சுமந்தபடி நடந்தான் அவ்வாலிபன்.
                                            அழைக்கும் (8)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2