தழுவல் தேவதை!

தழுவல் தேவதை!

இரவானால் அவளின் தழுவல் இல்லாமல் யாருமில்லை! பகலில் கூட பலர் அவளின் தழுவலை விரும்புகிறார்கள்!. இதமானத் தென்றல் வீச அவள் நம்மைத் தழுவும் ஆனந்தமிருக்கிறதே! ஆஹா அந்த இன்பமே தனி ! காற்றில்லாபோது அந்தத் தழுவல் நமக்கு கிட்ட நாழியாகலாம். காற்றோடு வரும் அந்த தேவதையின் துணையின்றி யாரும் இல்லை!
 சிலர் விரைவிலேயே அவளைத் தழுவி விடுவர், சிலருக்கு அவள் மேல் என்ன கோபமோ தழுவாமல் முரண்டு பிடிப்பர். பலபேர் அவள் நம்மைத் தழுவ வில்லையே என்றூ தவம் கிடந்து தழுவிய நபரை பொறாமையோடு பார்ப்பர்.


   பகல் பொழுதில் புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும்போதோ தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதோ நம்மை அறியாமல் அவள் நம்மைத் தழுவி இன்பத்தில் ஆழ்த்துவது இருக்கிறதே அந்த சுகமே தனிதான் போங்கள்!. பலசமயம் இசைகேட்டுக்கொண்டிருக்கும் இனிய இராப்பொழுதில் அவள் நம்மைத்தழுவி கிறங்கடிக்கலாம்.
அதிகாலை வேளையில் அவளின் தழுவலலிருந்து மீள்வது கடினம் என்னதான் விலக்கி விலக்கித் தள்ளினாலும் நம் மீது அவளின் அபிமானமே தனி சுலபத்தில் அவள் நம்மை விட்டாலில்லை!.
    பலபேருடன் பயணிக்கு பேருந்தில் கூட ஜன்னலோரம் இதமாய் குளிர்காற்று வருட இனிமையாய் நம்மைத் தழுவிடுவாள் அவள்! அத்தகையோளுக்கு புது இடமென்றால் சற்றே நாணமே! அன்று அவள் வருகைக்கு நாம் தவியாய் தவிக்க எப்பொழுது வந்தாலோ என அறியாமல் இதமாய் தழுவியிருப்பாள்!
 அத்தகையவளை இரு நாளாய் மறந்திருக்க இன்று காலையிலே வந்திட்டாள் இனிதாய் தழுவியே இருந்திட்டாள் மாலைவரை! சுகமான நித்திராதேவியைதான் நான் இதுவரை இயம்பியது!.
   கடந்த ஞாயிரன்று இரவு வேலுருக்கு சென்றது முதல் நல்ல உறக்கம் இல்லை! இன்று காலை வந்தவுடன் உறக்கம் என்னை அழைக்க தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே என நல்ல உறக்கம். மின்சாரம் தடைபட்டிருந்த போதும் நித்திரை என்னைத் தழுவி சுகப்படுத்தியது. ஆரோக்கியமான உடல் நலத்திற்கு தினமும் எட்டு மணிநேர நல்ல உறக்கம் தேவை என்று மருத்துவம் சொல்கிறது.
 பலர் இன்று டென்சன் காரணமாக உறக்கமின்றி தவிப்பதை நாமெல்லோரும் அறிவோம். நல்ல உடல் நலம் பேண நன்கு உறங்கி எழுவோம்!. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு டிவி கம்ப்யூட்டர் பார்ப்பதை தவிருங்கள் நன்றாக உறக்கம் வரும்.


டிஸ்கி: இதே மாதிரி கல்கி எழுதியுள்ளார். கல்கியின் நகைச்சுவை என்ற புத்தகத்தில் படித்தேன். அந்த மேட்டரை என் நடையில் என்னுடைய விஷயமும் கலந்து எழுதியுள்ளேன்!
  
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை இடலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2