மரியாதையாக் கொடுத்திடு! பாப்பா மலர்!
மரியாதையாக் கொடுத்திடு!
சந்துருவும் முரளியும் விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு வந்திருந்தனர். சின்னப் பிள்ளைகளான அவர்களில் சந்துரு மூத்தவன்.முரளி இளையவன்.
“டேய் மாமா கொடுத்த சாக்லேட் எனக்குத்தான் மரியாதையா கொடுத்திடு” மிரட்டினான் சந்துரு. “கொடுக்காவிட்டால் என்ன செய்வே?” எதிர்ப்பதற்கு தயாராக முரளி நின்றான்.காலையிலேயே இருவரும் சாக்லேட்டிற்காக சண்டைபோட்டுக் கொண்டிருக்க, பேப்பர் படித்துக் கொண்டிருந்த மாமா தலை நிமிர்ந்தார்.
“சந்துரு, முரளி இங்க வாங்க”என்றழைத்தார். இருவரும் வந்து என்ன ‘அங்கிள்’? என்றனர்.
“எதுக்காக இப்படி சண்டைபோடறீங்க?”
“அது வந்து...வந்துஅங்கிள் நீங்க எனக்கு கொடுத்த சாக்லேட்டை முரளி எடுத்துகிட்டான், அதான் அங்கிள் சத்தம் போட்டேன்” என்றான் சந்துரு.
“அப்படியா சந்துரு?இப்பநான் ஒரு கேள்வி கேட்பேன்.அதற்கு நீங்கள் பதில் சொல்லனும் சரியா?”என்றார் மாமா. இருவரும் தலை ஆட்டினர்.
“சந்துரு,முரளி! நீங்க நாயைப் போல வாழனும்னு ஆசைப்படறீங்களா?காகத்தைப்போல வாழனும்னுஆசைப்படறீங்களா?”
“ஒண்ணுமே புரியலையே அங்கிள்” என்றான் சந்துரு.
“சந்துரு நாயை எல்லோரும் நன்றியுள்ள பிராணின்னு சொல்வாங்க.ஆனா அதுக்கு கூடி வாழத் தெரியாது.எப்பஎச்சில் இலை போட்டாலும்,கூட வர நாயை துரத்தி சண்டைபோட்டு இலையை கிழிச்சி தானும் சாப்பிடாம பிறநாயையும் சாப்பிட விடாம பண்ணும்.
ஆனா காகம் எப்ப எங்க சிறு உணவு கிடைச்சாலும் தன் இனத்தை கூவி அழைத்து,உணவை பகிர்ந்து உண்ணும்!” என்று கூறிய மாமா, “இப்பசொல்லுங்க! நீங்க யாரைப்போல வாழப்போறிங்க?” என்றார்.
“காகம்போல!” என்று நொடியில் கூறினான் சந்துரு.
“ஆனா,நீங்க சின்ன சாக்லேட்டுக்கே சண்டைபோட்டுக் கொள்கிறீர்களே?” வசமாய் மடக்கினார் மாமா.
மறுநிமிடம் தன் கையில் இருந்த சாக்லேட்டில் பாதியை சந்துருவிடம் தந்த முரலி, “இப்ப சரியா அங்கிள்!” என்றான்.
மாமா சந்தோஷமாகப் பேப்பர் படிக்க ஆரம்பித்தார்.
கோகுலம் சிறுவர் மாத இதழ் ஜூலை 93ல் பிரசுரமான எனது கதை இது.
நன்றி கோகுலம்.
டிஸ்கி} இது பாப்பாமலரில் ஏற்கனவே வந்த கதைதான்! இன்று நேரம் இல்லாதமையால் மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்!
டிஸ்கி} இது பாப்பாமலரில் ஏற்கனவே வந்த கதைதான்! இன்று நேரம் இல்லாதமையால் மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்!
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment