ஹி! ஹி! சிரிப்பு!

ஹி! ஹி! சிரிப்பு!

எப்பக் கேட்டாலும் தலைவர் ரொம்ப பிஸியாக இருக்கார்னு சொல்றீங்களே அப்படி என்ன பண்ணிகிட்டு இருக்கார்.
    திகாருக்கு போகாம இருக்கறதுக்கு என்ன வழின்னு ஆராய்ஞ்சிகிட்டிருக்கார்.

அந்த டாக்டரை சுத்தி ஏன் அவ்வளவு கூட்டம்.?
எம்.பி களுக்கெல்லாம் இவர் தான் ஹெல்த் சர்டிபிகேட் தர்ராறாம்!

பேஷண்டு இவ்வளவு அப்பாவியா இருக்க கூடாது டாக்டர்.
 ஏன் என்னாச்சு?
  ஆபரேஷன் தியேட்டர்ல நமிதா படம் போடுவீங்களான்னு கேக்கறார்!

கோடி வீட்டில் திருடியது குறித்து நீ கூற விரும்புவது என்ன ?
சுத்த மோசம் எசமான் நீங்க ? நான் என்ன கோடி கோடியா கொள்ளை அடிச்சேன்? கோடிவீட்ல தானே கன்னம் வைச்சேன். சுத்தமா இருந்தது எசமான்! வீடு மட்டும்ல வீட்ல எந்த பொருளுமே இல்ல!

நம்ம தலைவருக்கு பொது அறிவு கொஞ்சம் கூட இல்லே!
 ஏன் என்ன பண்ணாரு!
பாபா ராம்தேவை சாயிபாபாவோட வாரிசான்னு கேக்கறாரு!

தலைவர் ஏன் கோபமா இருக்கார்?
போராட்டத்துல கைது பண்ணி திகாருக்கு அனுப்பாம வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்.

அந்த கல்யாணம் ஏன் நின்னு போச்சு!
மாப்பிள்ளை பையன் டி வியில ஷேர் ஓல்டருண்ணு தெரிஞ்சிடுச்சாம்.

அந்த பேச்சாளர் இதுக்கு முன்னாடி இளநீர் வித்துட்டிருந்தவரா?
 ஏன்?
அடிக்கடி தலைய சீவிடுவேன்னு பேசறாறே!

ஏங்க உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?
 அது இருந்தா நான் ஏன் உன்னை கட்டிகிட்டிருக்கேன்!

புது செருப்பு கடிக்குதுன்னியே மாத்திட வேண்டியதுதானே!
இன்னும் இந்த மாசத்துல எந்த கல்யாண அழைப்பும் வரலியே!

அந்த ஜவுளிக் கடையில மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்?
புடவை எடுக்கற வரைக்கும் டி வி சீரியல் போட்டு காட்டறாங்களாம்.

ஏண்டா நாயே எவ்வளவு தைரியமிருந்தா போலிஸ்காரன்கிட்டயே பிக் பாக்கெட் அடிப்ப!
மன்னிச்சுக்கங்க எசமான்! தெரியாம உங்க கலெக்சன்ல கை வச்சிட்டேன்.

அந்த ஸ்கூல் அட்மிசன்ல ஏன் அவ்வளவு கூட்டம்?
முதல்ல வர முப்பது அட்மிசனுக்கு தங்க மோதிரம் தராங்களாம்!

என் மனைவி போட்ட காபியை குடிச்சபிறகு இனி வாழ்க்கையில இந்தமாதிரி காபியை குடிக்கவே முடியாது!
 ஏன் அவ்வளவு நல்லா இருக்குமா?
அவ்வளவு மோசமா இருக்கும்னு சொல்லவந்தேன்!

தையல்காரரை கல்யாணம் பண்ணிகிட்டது தப்பா போச்சு!
ஏன்?
அளந்துஅளந்து பேசறார்!

தலைவர் ஏன் அடிக்கடி ரூம்ல போயி கதவ பூட்டிக்கிறார்?

ஜெயிலுக்கு போக பிராக்டிஸ் பண்றாராம்!

டிஸ்கி: ஜோக்கெல்லாம் மொக்கையா இருந்தாலும் பொண்ணுங்க படத்துக்காவது ஓட்டு போடமாட்டீங்க!

   தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பத்திந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2