அமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது? ஜோக்ஸ்

 அமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது? ஜோக்ஸ்

அந்த டாக்டருக்கு குழந்தை மனசுன்னு எப்படிச் சொல்றே?

ஊசி போடும்போது சாக்லேட்ட வாயில திணிச்சிட்டு தான் போடுவாரு!

நம்ம தலைவருக்கு வரவர மறதி ரொம்ப ஜாஸ்திஆயிடுச்சு!
 எப்படி சொல்ற?
தொகுதி பக்கமெல்லாம் தலை காட்டுறாரே!அமைச்சருக்கு ரொம்ப பிடிச்ச மீன் எது?

‘ஜாமீன்’தான்

அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்ற?

எழுதி கொடுக்கற மருந்துசீட்டுத் தெளிவா இருக்கே!

ஆனாலும் வேலைக்காரிக்கு இந்ததிமிர் இருக்க கூடாது!
ஏன் என்னாச்சு?
நல்லா சமைக்கிற ஆளா பாத்துக் கட்டிக்க கூடாதா ஐயா சமையல எப்படித்தான் திங்கிறியோன்றா!

தலைவர் ரொம்ப ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?
அமலாப் பால் மசோதாவை வரவேற்பதா அறிக்கைவிட்டிருக்கிறாரே!

நம்ம தலைவர் நமிதா ரசிகர்போல !
எப்படி?
கூடியிருக்கும் மச்சான்களே ! ன்னு பேச்ச ஆரம்பிக்கிறாரே!

அந்த கண்டக்டர் மளிகை கடைவச்சிருந்தவர் போல..
எப்படி?
மீதி சில்லறைக்குப் பதிலா சாக்லேட் கொடுக்கிறாரே!
பலபேர்களிடம் பிக்பாக்கெட் அடித்த நீ சொல்ல விரும்புவது என்ன?
காலம் ரொம்ப கெட்டுப்போச்சு எஜமான் ஜனங்க எல்லாம் புத்தி சாலி ஆயிட்டாங்க பாக்கெட்ல பர்ஸே இருக்க மாட்டேங்குது தொழிலே சரியா நடக்க மாட்டேங்குது!

பூந்தி கடக்காரனோட சுத்திகிட்டிருந்தாளே உங்க பொண்ணு அப்புறம் என்ன ஆச்சு?
வாந்தி எடுக்க ஆரம்பிச்சுட்டா!

தலைவர் ஓய்வெடுத்துக்கறேன்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன் என்னாச்சு?
நிறையபேரு படுக்கை தலையாணியெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!


தங்கள் வருகைக்கு நன்றி!. பிடித்திருந்தால் கமெண்டலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே !


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2