பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!

பிரிக்க முடியாதது என்னவோ? ஊழலும் லஞ்சமும்!

இந்தியாவில் லஞ்சத்திற்கெதிராக போராட்டங்களும் விழிப்புணர்வு பேரணிகளும் தினமும் நடந்து கொண்டிருந்தாலும். கனிமொழிக்களும் ஆ.ராசாக்களும் திகாரில் கம்பி எண்ணிக்கொண்டிருந்தாலும் இன்னும் லஞ்சம் வாங்குவது குறையவில்லை.
   செய்தித்தாள்களில் தினமும் ஒருவர் லஞ்சம் வாங்கி பிடிபட்டார் என செய்தி வந்துகொண்டுதான் உள்ளது. ஜாதி சான்றிதழ் வாங்க லஞ்சம், மின் இணைப்புக்கு லஞ்சம், வீட்டுமணைப் பட்டாவிற்கு லஞ்சம், ஓட்டுனர் உரிமத்திற்கு லஞ்சம், ஓய்வூதியத்திற்கு லஞ்சம் என லஞ்சம் பல்கி பெருகி விட்டது.
  லஞ்சத்தை ஒழிக்க ஏதாவது வழி ஒன்று உண்டெனில் அதை லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்குவதுதான் என்று முன்பு யாரோ ஒருவர் எழுதியதை படித்த ஞாபகம்! அப்படி லஞ்சத்தினை ஒழித்தால் கூட ஊழல் ஒழியுமா என்பது சந்தேகம் தான். அதற்கு சமிபத்திய சிறந்த உதாரணம் லோக்பால் மசோதா! இதில் யார் யாரை சேர்க்கலாம்? யார் யாரை சேர்க்க கூடாது என்று சர்ச்சை! பிரதமரை இந்த மசோதா வரம்பில் கொண்டு வரக்கூடாதாம்! ஏன்? மந்திரிகள் செய்த ஊழலில் பங்கு வாங்க மாட்டாரா பிரதமர். அல்லது உத்தமராகவே இருந்தாலும் ஊழலை தட்டி கேட்காமல் மவுனம் சாதித்தாலும் அதுவும் ஒரு ஊழல்தானே! காந்தி பிறந்த மண்ணில் ஊழலை ஒழிக்க ஒரு மசோதாவை கொண்டு வருவதில் அந்த காந்தி வளர்த்த காங்கிரஸே  தடையாக நிற்பதுதான் வேடிக்கை.
   கேடு கெட்ட அரசியல் வாதிகள் சுயநலமாய் இருக்கும் வரையில் இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியாவில் பிரிக்க முடியாத ஒன்றுதான். என் அன்னை ஒர் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர். சமீபத்தில் நிலுவைதொகை வாங்க அலுவலகத்திற்கு சென்றபோது நிலுவைத்தொகை பெற 300 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். என்னிடம் சொன்னபோது விஜிலென்சுக்கு போன் செய்யவா என்று கேட்டேன். வேணாம்பா இன்னும் நிறைய பணம் வரவேண்டியிருக்கு அப்புறம் பிரச்சனையாகிவிடும் என்று மறுத்துவிட்டார். இதுபோல மக்களின் மனோபாவமும் வேலை முடிந்தால் சரி என்று ஆன நிலையில் லஞ்சத்தினை சட்டப்பூர்வமாகவே ஆக்கிவிட்டால் தான் என்ன என்றுதோன்றுகிறது!
  அப்போதும் அரசு அறிவித்த தொகைக்கு மேல் கேட்பார்கள் நம்மவர்கள் என்று என் மனசாட்சி சிரித்தது. அதுவும் சரிதான் ஆட்டோக்காரர்கள் போல மீட்டருக்கு மேல இவ்வளவு தந்தால்தான் ஆச்சு என்று கேட்டால் என்ன செய்ய முடியும்?
    இதையெல்லாம் யோசிக்கும் போது இந்த போராட்டங்கள் பேரணிகள் எல்லாம் சுத்தவேஸ்ட் என்று எண்ணத்தோன்றினாலும் மக்களிடையே விழிப்புணர்வு சற்று அதிகரித்துள்ளதையும் அறிகிறோம் இல்லாவிடில் தினமும் யாராவது லஞ்சம் வாங்கி பிடிபட்டு பேப்பரில் போஸ் கொடுப்பார்களா?
  எப்படியோ பிரிக்க முடியாத இந்த லஞ்சமும் ஊழலும் இந்தியாவை விட்டு ஒழியும் நாள் எந்நாளோ அந்நாள் இந்தியாவின் பொன்னாள் என்று கூறலாம். அந்த நாள் விரைவில் வர மக்கள் மனோபாவம் மாற வேண்டியது அவசியம். லஞ்சத்தை எதிர்த்து ஒரு அன்னாஹசாரே போராடினால் போதாது ஊருக்கு பத்து ஹசாரேக்கள் உருவாகினால் இந்த லஞ்ச ஊழல் வெளியேறும் .
அத்தகைய ஹசாரேக்கள் வருங்காலத் தூண்களான இளைஞர் பட்டாளம் தான். சினிமாக்களிலும் விளையாட்டிலும் செலுத்தும் கவனத்தினை இனி இந்தியாவின் வளர்ச்சியிலும் காட்ட்டுங்கள் இளைஞர்களே! வளமான இந்தியா உருவாக வழி செய்வோம்.
 
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! பதிவு பிடித்திருந்தால் நிரலிகளில் வாக்களித்துச்செல்லலாமே!

Comments

  1. நல்ல கருத்து .ஊருக்கு பத்து ஹசாரேக்கள் கண்டிப்பாக உருவாக வேண்டும் ....

    ReplyDelete
  2. ந்ன்றி நண்பரே! தொடர்ந்து க்மெண்ட் பண்ணுவதற்கு!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2