நடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்! சமையல் கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி!

நடுத்தரமக்கள் தலையில் கை வைத்த காங்கிரஸ்! சமையல் கேஸ் விலை உயர்வால் மக்கள் அதிருப்தி!

சமையல் கேஸ் மற்றும் டீசல் மண்ணெண்ணை விலைகளை அதிரடியாக  ஏற்றி சாதணை படைத்து வருகிறது காங்கிரஸ் அரசு. விலைவாசியை விரைவில் கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கூறிவந்த நிலையில் இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயரக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பணவீக்கமும் கட்டுக்குள் கொண்டு வர முடியாத நிலையில் அதிகரிக்கும் சூழல் உண்டாகும்.
  பாமர மக்களின் தலையில் இந்த விலை உயர்வு பேரிடியாக விழுந்துள்ளது. ரேசன் கடைகளில் விற்கப்படும் மண்ணெண்ணை விலை லிட்டருக்கு ரு 2 கூடுதலாகி விட்ட நிலையில் தனியாரில் விலை மேலும் அதிகரிக்க கூடும் சிலிண்டரின் விலை கேஸ் எஜண்சிகளால் கூடுதலாக வசுலிக்கப்படும் நிலையில் இந்த விலை உயர்வால் நசுக்கப்படுவது பாமர மக்களே!
ஏற்கனவே பெட்ரொல் விலையை தன்னிச்சையாக உயர்த்திக்கொள்ள எண்ணை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து மாதமிருமுறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இந்த விலை உயர்வை பி.ஜே.பி உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்த்து நாடெங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறது.
  இந்தியகம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கூறுகையில் “விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் மக்களே கட்டுப்படுத்துவர். மத்திய அரசை தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். கேரளாவில் டீசல் விலை உயர்வை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் 29ந்தேதி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
   இதே போல் நாடெங்கும் போராட்ட குரல்கள் ஒலித்தாலும் மத்திய அரசு செவி சாய்ப்பதாய் காணோம். தன் முடிவில் உறுதியாக உள்ளது போல் தோன்றுகிறது. இதன் மூலம் நடுத்தர மக்களின் தலையில் கைவைத்து மக்கள் விரோதத்தை சம்பாதித்துக் கொண்டுள்ளது.
டீசல் விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலையை இருமடங்க்காக உயர்த்திவிடும் தமிழகத்தில் ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இந்த விலை உயர்வு பெருமளவில் நடுத்தரகுடும்பத்து மக்களை பாதிக்கும். பில்லில் 352.38 க்கு விற்கப்படும் சிலிண்டர் கிராமங்கலில் ரூ 390 முதல் 400 வரை கொடுத்தால் தான் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் மறைமுகமாக ரூ30 முதல் 40 வரை அதிகமாக தரவேண்டிய நிலையில் இருந்தனர் . இனி இது மேலும் 50 ரூபாய் உயர்வால் ரூ 450 வரை விற்கப்படும்.
  குறைந்தபட்சம் 25 முதல் 30 நாட்கல் எரிபொருள் செலவுக்கு கிராமத்தினர் தன் இரண்டுநாள் கூலியை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் அன்றாட தேவைகளான அரிசி மளிகை, காய்கறி பொருட்களும் விலை ஏறுவதால் அவனது பிழைப்பாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
  மொத்தத்தில் இந்த விலை உயர்வு விலைவாசியை கட்டுப்படுத்துவதற்குப் பதில் விலைவாசியை அதிகபடுத்தி ஊக்குவிக்கும் செயலாக அமைந்துள்ளது. ஆட்சியாளர்கள் கோடிகளை குவித்து கொள்ள மக்களின் தலையில் கை வைத்துள்ளது மத்திய அரசு.
  விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறினாலும் மக்களை காங்கிரஸ் மறந்துவிட்டது. இந்திய மக்களில் பெரும்பாலோர் இன்னும் ஏழைகளே அவர்களுக்கு விரோதமான இந்த விலை வாசி உயர்வு கண்டிப்பாய் அவர்களுக்கு பாதகமாகவே முடியும். இதை ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!