ஊழலுக்கு எதிராக ஒர் உரிமைப்போர்!

 ஊழலுக்கு எதிராக ஒர் உரிமைப்போர்!


ஊழல் குறித்த ஒர்விழிப்புணர்வு நாட்டு மக்களிடையே ஏற்பட்டு வருவது வறவேற்க தக்க விஷயமாகும். இந்த விழிப்புணர்வை மக்கலிடையே ஏற்படுத்தியதில் காந்தியவாதி அன்னா ஹசாரே பெரும் பங்கு வகிக்கிறார். லோக்பால் மசோதாவுக்குகாக உண்ணா விரதமிருந்து உலகையே தன் பக்கம் திருப்பியவர் அவர். அவர் வழியில் தற்போது யோகா குரு ராம்தேவ் ஊழலுக்கு எதிராக களத்தில் குதித்து உள்ளார்.
    லோக்பால் மசோதாவில் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் விலக்கு அளிப்பது குறித்து எல்லா மாநில முதலமைச்சர்களிடம் கருத்து கேட்க போவதாக் தற்போதைய காங்கிரஸ் அரசு கூறி வருவது வேடிக்கையான விஷயமாகும். அன்று ஹசாரே உண்ணாவிரதத்தை முடிப்பதற்காக லோக்பால் மசோதாவை கண்டிப்பாக நிறைவேற்றுவதாக கூறிய அரசு இன்று பின் வாங்குகிறது.
       பிரதமரும் அமைச்சர்களும் கடவுள்களா என்ன விதிவிலக்கு அளிப்பதற்கு! இன்று பெரும்பாலான ஊழல் புகார்கள் பிரதமரையும் அமைச்சர்களையுமே சுற்றி வருகின்றன. மடியிலே கனமிருந்தால்தானே வழியிலே பயம் வரும்! தாங்கள் தூய்மையானவர்கள் எனில் இந்த மசோதாவை மறுபேச்சின்றி இத்தனைகாலம் தாழ்த்தாது நிறைவேற்றி இருக்க வேண்டாமா?
   துப்பு கெட்ட நம் அரசு ஊழலிலே திளைத்த அமைச்சர்களைக் கொண்டதால்தான் இந்த மசோதாவை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. மசோதாவைநிறைவேற்றுவதாகக் கூறி அன்னா ஹசாரேவை மட்டுமல்ல கோடிக்கணக்கான இந்தியர்களையும் ஏமாற்றிவிட்டது.
 இந்த நிலையில் தான் ஊழலை ஒழிக்கவும் கறுப்பு பணத்தை மீட்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யோகா குரு ராம்தேவ் நாலைமுதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தார். இதற்கு அவர் நேற்று டில்லி வந்தபோது மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி,கபில்சிபல்,பவன் குமார் பன்சல்,சுபோத்காந்த் சகாய் உள்ளிட்ட நால்வர்குழு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
  இதை குரு ராம்தேவ் மறுத்துவிட்டார். இந்த போராட்டத்திற்கு காந்தியவாதியும் சமூக சேவகருமான அன்னாஹசாரேவும் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனிடையே குரு ராம் தேவை விமான நிலையத்திலேயே சென்று சந்தித்த அமைச்சர்களை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது.
   காங்கிரஸ் மூத்த அமைச்சர்களில் ஒருவரான திக்விஜய் சிங் குரு ராம் தேவ் யோகாசன பயிற்சிக்கு முதல் வரிசயில் அமர்வதற்கு ரூ30000 வாங்குவதாகவும் இப்படியே வரிசைக்கு வரிசை கட்டண விகிதத்தை மாற்றி கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
    என்கருத்து என்னவென்றால் யோகா கற்று கொடுப்பது ராம்தேவின் தொழில் அதற்க்கு கட்டணம் நிர்ண்யிப்பது அவர் உரிமை. உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் பயிற்சிக்கு போகாமல் இருக்கவேண்டியதுதானே உங்கள் மீது எந்த குற்றமும் இல்லையெனில் குரு ராம் தேவை கைது செய்யவேண்டியதுதானே ஏன் விழுந்தடித்துகொண்டு ஓடி விமான நிலையத்தில் சந்தித்து போராட்டத்தை கைவிடச் சொல்கிறிர்கள் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும் எங்கே நாம் செய்த ஊழல்கள் எல்லாம் வெளிவந்துவிட போகிறதே என்று காலில் விழாத குறையாக போராட்டத்தைக் கைவிட வேண்டுகிறிர்களே எங்கே துணிச்சல் இருந்தால் லோக்பால் மசோதாவை நிறைவேற்றி கறுப்பு பணத்தை மீட்டெடுங்கள் பார்க்கலாம்!

இந்திய மக்கள் விழித்தெழுந்து விட்டனர்! இனியும் அவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது! உங்களை பதவியில் அமர்த்தியது உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதற்காக அல்ல! நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்காக எனவே ஒழுங்காக செயலாற்றுங்கள் அமைச்சர்களே!

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!