சட்டமேலவையும் சடுகுடு ஆட்டமும்.
சட்டமேலவையும் சடுகுடு ஆட்டமும்.
தமிழகத்தில் சட்டமேலவை தேவையில்லை என்று சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் நிறைவேறியுள்ளது.இந்த விஷயத்தில் தி.முகவும் அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு செயலாற்றுவதில் கெட்டிக்காரர்களாக உள்ளது. கடந்த 1986ல் எம்.ஜி,ஆர் ஆட்சிக் காலத்தில் சட்டமேலவை தேவையில்லை என்று முடிவெடுத்து சட்டமேலவை கலைக்கப்பட்டது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சட்டமேலவை அமைக்க முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் அதற்குள் ஆட்சியை இழக்கும். இந்த முறையும் கடந்தாண்டு சட்டமேலவை உருவாக்க தீர்மாணம் போடப்பட்டு அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றி சட்ட மேலவை அமைப்பதில் ஜரூராக முனைந்தது.
சட்டமேலவை என்பதே ஒரு கோமாளிகளின் கூடாரம்தான். ஆளும்கட்சிக்கு வேண்டிய பதவி கிடைக்காத பெரிசுகளை திருப்தி படுத்தவே இந்த மேலவை அமைக்கப்படுகிறது என்பது சாமானியனுக்குக் கூடத்தெரியும். இருப்பினும் பதவி ஆசையில் கூட்டணிக் கட்சிகல் இந்த மேலவையை கடந்த ஆட்சிக் காலத்தில் ஆதரித்தன.இப்போது காட்சி மாறிவிட்டது. சட்டமேலவை வேண்டாம் என அம்மா தீர்மாணம் போட ரத்தத்தின் ரத்தங்கள் அதை ஆதறிக்க உடன்பிறப்புக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டுவிட்டது.
நாட்டிலுள்ள 28 மாநிலங்களில் கர்நாடகா மகாராஷ்டிரா,பீகார்,உத்திரபிரதேசம்,ஆந்திரா,ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் தான் சட்டமேலவை இருக்கிறது. காங்கிரஸ் ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் சட்டமேலவை கிடையாது.இதிலிருந்து சட்டமேலவை வேண்டும் என்ற கருத்து வலுவிழந்து காணப்படுகிறது என்று அறியலாம்.எனக்குத் தெரிந்தவரை மேலவை வேண்டும் என்று நினைக்கும் ஒரே கட்சி தி.மு.க தான். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்து மேலவையை கொண்டுவர வாய்ப்பே இல்லை. அஸ்தமனமானசூரியன்,அஸ்தமணமானதுதான்;இந்தசூரியன் திரும்பவும் உதயமாகாது;உதிக்கவே உதிக்காது என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஆவேசமாக சட்டமேலவை நீக்க தீர்மாணத்திற்கு பதிலளித்து பேசுகையில் கூறியுள்ளார்.
எது எப்படியோ ஒன்னுமே பெறாத விஷயத்திற்கு இரண்டு கட்சிகள் சட்டசபையின் பொன்னான நேரத்தை வீணாக்கி சடுகுடு ஆடுவது என்பது கண்டிக்கத்தக்கவிஷயம் தமிழகத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கையில் மேலவை உண்டாக்கி, கலைத்து விளையாட வேண்டுமா இந்த கட்சிகள்?
இனிவரும் காலத்திலாவது இதுபோன்ற உப்பு பெறாத விஷய்ங்களில் இந்த திராவிடக் கட்சிகள் அக்கறை காட்டுவதை விட்டு மக்கள்நலப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. கடந்த ஆட்சிக்காலத்தில்தான் பல லட்சம் கோடிகள் இந்த மாதிரி விஷயங்களுக்காக விரையம் செய்யப்பட்டுள்ளது அது இந்த ஆட்சியிலும் தொடரவேண்டுமா?
சட்டமேலவையை யாரும் விரும்பாத வண்ணம் அப்படி ஓர் அமைப்பையே இந்தியா முழுமையும் தடை செய்து நீக்கி விட்டால் இந்த சடுகுடு போட்டிகள் நிற்குமா என்றும் தெரிய வில்லை. சட்டசபையின் பொன்னான நேரங்கள் இந்த மாமியார் மருமகள் சண்டையிலிருந்து தப்புமா என்பதும் புரியவில்லை.
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே
Comments
Post a Comment