ஆவி அழைக்கிறது! பகுதி 7
ஆவி அழைக்கிறது!
பகுதி 7
எழுதுபவர். “பிசாசு”
மு.க.சு: ஆழ்வார் குறிச்சியில் உள்ள தனது பங்களாவை சீர்படுத்த முயலும் தனவேல் முதலியாருக்கு தடங்கல்கள் ஏற்பட மந்திரவாதி கேசவன் நம்பூதிரியை அணுகினார். அவன் பூஜை செய்து வெற்றிலையில் மை போட்டு காட்ட அதில் தெரியும் பெண் உருவத்தை கண்டு தனவேல் அதிர்ச்சி அடைகிறார்.
வெற்றிலையில் கண்ட அந்த உருவத்தை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் அவர் சுதாரித்துக் கொண்டார். நிதிலாவுக்குஅந்த உருவம் தான் வயதானால் இருப்பது போல தோண்றியது.அவள் குழம்பினாள். என்னப்பா இது என்னோட வயசான தோற்றத்தை காட்டுது என்று வாய் விட்டே கேட்டுவிட்டாள்.தனவேலால் பதில் சொல்ல முடியவில்லை.
நம்பூதிரி என்ன முதலியார் யாருன்னு தெரியுதா என்று கேட்ட போது தனவேலால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இது இது பொன்னம்மா ஆனா அவ ...
என்னப்பா சொல்றீங்க இவங்கள உங்களுக்குத் தெரியுமா? நிதிலா கேட்க தனவேல் விழித்தார். அது அது வந்தும்மா.. என்று தயங்கினார்.
இவ நம்ம வீட்டுல வேலைக்காரியா இருந்தவம்மா ஒரு விபத்துல செத்துப்போயிட்டா ஆனா அவ எதுக்கு என்னை பழி வாங்கணும்னு தான் புரியல என்றார் ஒரு வாறு சமாளித்தபடி!
முத்லியார் நீங்க எதுக்கும் கவலைப்படாதேள் யான் உம்மை காத்து ரட்சிக்கும் பயபடாதேயும் ஒரு வாரம் கழிச்சி மீண்டும் பூசை ஆரம்பிக்கலாம் என்றான் நம்பூதிரி.
அவனிடம் விடைப்பெற்று காரில் ஏறிய தன வேலுக்கு பழைய நினைவுகள் வர ஆரம்பித்தது. நிதிலா காரை டிரைவ் செய்வதாக கூறவே பின் இருக்கையில் அமர்ந்து தன் இளமைக்கால நினைவுகளில் மூழ்கினார் தனவேல். அப்பொழுது தனவேலுக்கு வயது இருபத்திரண்டு இருக்கக்கூடும் முகத்தில் மீசை அப்போதுதான் அரும்பி இருந்தது. ஆனால் நல்ல திடகாத்திரமான உடல். வாலிப முறுக்குடன் தன் தந்தை முத்து வேலுடன் ஆழ்வார் குறிச்சிக்கு வந்திருந்தான்.
ஆழ்வார் குறிச்சி அப்பொழுது இன்னும் பின் தங்கியிருந்த ஒரு கிராமம். பட்டிகாடாக இருந்த அவ்வூரில் ஆண்கள் எல்லோரும் முதலாளி என பவ்யம் காட்ட பெண்கள் தன வேலை கண்டதும் வெட்கத்தோடு தலி குனிந்த படி ஏதோ முணுமுணுத்தபடி சென்றனர்.
அந்த பெண்களில் தனவேலைக் கண்டதும் கவர்ந்தவள் பொன்னம்மா. பொன்னம்மா ஒன்றும் பிரமாதமான அழகி அல்ல. சுமாரான நிறம் தாயில்லாத பெண். தந்தையோ கிழவன், கண்தெரியாத குருடன். சொந்தபராமரிப்பில் வளர்பவள்.எப்போதும் முத்து வேல் குடும்பத்திலேயே எடுபிடி வேலைகள் செய்து கொண்டு பழியாய் கிடப்பாள்.
பட்டணத்து அழகிகளையே கண்டு அலுத்துப் போன தனவேலின் கண்களுக்கு பொன்னம்மா பேரழகியாகத் தெரிந்தாள். அடக்கமான குணம், அறிவில் முதிர்ச்சி, ஆணைக்கண்டாலே தலை நிமிராத பொன்னம்மாவுக்கும் தனவேலின் மீது கொள்ளை ஆசை. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் சேர பற்றிக்கொண்டுவிட்டது.
எதேச்சையாக இருவரும் சந்திக்க பின் சந்திப்புகள் வாடிக்கையாகிப் போனது. பழக்கம் நெருக்கமாகி அந்த நெருக்கம் பொன்னம்மாளின் வயிற்றில் சிசுவாக உருவாகிப்போனது. அந்த சமயத்தில் தான் தனவேலின் முப்பது நாள் மோகம் முடிவுக்கு வந்தது. பொன்னம்மாளை பார்ப்பதை தவிர்த்தார். விலகிப்போன தனவேலுவை பொன்னம்மாளால் கட்ட முடியவில்லை.
தந்தைக்கு பயந்த தனவேல் சொந்தக்காரப் பெண்ணொருத்திக்கு தாலி கட்டினார். விஷயம் அறிந்த பொன்னம்மா தகப்பனோடு வந்து முறையிட தனவேல் பாராமுகமாய் விரட்டினார். பணக்காரன் ஆசையாய் கூப்பிட்டால் முந்தி விரித்தாய்! இதே போல் எத்தனைபேரோ என்று எகத்தாளமாய் கேட்டார். காதைப்பொத்திக்கொண்டு வாய் திறவாமல் திரும்பிப் போனாள் பொன்னம்மா.
ஊராரின் ஏளனப்பேச்சுக்கு ஆளாகி பலவாறு துன்புற்ற பொன்னம்மா ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த கையோடு மனமொடிந்து இறந்து போனதாக தனவேல் அப்புறம் கேள்விப் பட்டார் . ஆனாலும் அவர் அதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.அதை மறந்தும் விட்டார். அந்த பொன்னம்மாள் தான் வெற்றிலையில் சிரித்துக்கொண்டிருந்தாள்.
இந்த பங்களாவில் அவள்தான் சுற்றி வருகிறாளா? அவளுக்கு நான் செய்த துரோகத்திற்கு பழி வாங்குகிறாளா ? ஐயோ என்ன கஷ்டகாலம் இது. இந்த விஷயம் நிதிலாவுக்குத் தெரிந்தால் என்ன ஆவது? தனவேல் மிகவும் குழம்பிப் போனார்.
அப்பா என்ன யோசனைப்பா! வீடு வந்துடுச்சு என்ற நிதிலாவின் குரல் கேட்கவும் நினைவுகளிலிருந்து மீண்டார் தனவேல். காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே நுழையவும் நல்ல முத்து வரவும் சரியாக இருந்தது.
என்ன தனவேலு போன காரியம் என்ன ஆச்சு?
தனவேலின் முகத்தில் வியர்வை அரும்பியது நா குழறியது. ந..நல்ல முத்து அ.. அந்த பொ... பொன்னம்மா தான் இந்த பங்களாவில ஆவியா இருக்காடா!
என்னது பொன்னம்மாவா?
அவ செத்து என்னா ஒரு இருபது வருஷம் இருக்காது!
அங்கிள் யாரு இந்த பொன்னம்மா வெத்தலைல அந்த முகத்த பார்த்ததிலிருந்து அப்பாவே சரியில்ல ஆளே ரொம்ப மிரண்டு போயிருக்கார் என்ன விஷயம்னு கேளுங்களேன் நிதிலா கேட்க நல்ல முத்து என்ன சொல்வதென்று தெரியாமல் திருதிருவென விழித்தார்.
சரி உங்களுக்கும் தெரியாதா? அப்ப விட்டுடுங்க நான் நம்ம பங்களா வரைக்கு போயிட்டு வரேன்.
பங்களாவிற்கா?
ஏன் போகக் கூடாதா?
இல்லே அங்க பேய்...
இருக்கட்டும் நானா அதுவா பார்த்திடலாம்.என்று பதில் கேளாமல் பங்களாவை நோக்கி கிளம்பினாள் நிதிலா.
அந்த பாழடைந்த பங்களாவில் அவளுக்கு நிறைய அதிர்ச்சிகள் காத்திருப்பது அறியாமல் உள்ளே நுழைந்தாள் நிதிலா.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment