சறுக்கினால் சந்தோஷப்படு!

சறுக்கினால் சந்தோஷப்படு!

ஓ இளைஞனே!
சறுக்கி விழுந்தால்
சந்தோஷப்படு!
சறுக்கள்களே
சரியான பாதையை
அமைத்து தரும்!
வாழ்க்கை ஓர் சறுக்குமரம்!
அதில் முன்னேறத் துடிப்பவன்
முதலில் சறுக்கித்தான்
ஆகவேண்டும்.
சறுக்க சறுக்க
உச்சியை அடைய
வெறி பிறக்கும்!
வெற்றி கிடைக்கும்!இன்று
வெற்றி பெற்ற பலரும்
நேற்று சறுக்கி விழுந்தவர்களே!
சறுக்கியவர்களில் வீழ்ந்துகிடாமல்
வீறு கொண்டவர்கள்
விண்ணைப் பிளந்தார்கள்!
வீழ்ந்து விட்டோமே என்று
சோர்ந்து போனவர்கள்
மறைந்து போனார்கள்!
கிட்டே கிடைப்பதெல்லாம்
வெற்றி அல்ல! முட்டி மோதி
பெறுவதுதானே வெற்றி!
எனவே சறுக்கி விழுந்தால் சந்தோஷப்படு!
சரித்திரம் உன் பெயர் சொல்லும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பதிந்து செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2