ஆண்டார்குப்பம் அழகு முருகன். பக்திமலர்!
ஆண்டார்குப்பம் அழகு முருகன்.
ஆறுமுகனின் அருட்தலங்கள் ஆயிரமாயிரம் உண்டு அவணியிலே! அவற்றுள்ளே தொண்டை மண்டலத்தே அமைந்த திருத்தலங்கள் பழமைவாய்ந்ததோடு மட்டுமல்லாது மகிமையும் வாய்ந்தவை அழகு முருகன் அருள் பாலிக்கும் ஆண்டார்குப்பம் என்னும் திருத்தலமும் அத்தகைய பெருமையும் புகழும் வாய்ந்தது.
இருப்பிடம்: சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையிலிருந்து பொன்னேரி செல்லும் வழியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம் எனும் அழகியதலம் வயல் வெளிகள் சூழ்ந்த அழகியகிராமத்தே ஆலயத்தில் குடிபுகுந்து அருள் பாலிக்கிறார் பாலசுப்ரமணியர்.
தல வரலாறு. ஓம் எனும் பிரணவப் பொருள் தெரியாத பிரம்மனை சிறையில் அடைத்த இடமே ஆண்டார்குப்பம் இங்கே முருகணுக்கு நேர் எதிரே பிரம்மன் காட்சி அளிக்கிறார். ப்ரம்ம சாஸ்தாவாக பிரம்மணின் படைக்கும் தொழிலை ஏற்றதால் இரு கைகளை இடுப்பில் ஏந்தி ஆஜானு பாகுவாக அழகு முருகன் காட்சி தருகிறார். அருணகிரி நாதரால் தச்சூர் வடக்காகு அமைந்த பெருமானே என்று திருப்புகழ் பாடப்பட்ட தலம் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.
திருவிழாக்கள்: ஒவ்வொரு கிருத்திகையும் ஒரு திருவிழாவே சித்திரை கிருத்திகை பிரம்மோற்சவ வழிபாடு நடைபெறும் கார்திகை மாதத்தில் குமாரசஷ்டி இலட்சார்ச்சணை ஆறு நாட்கள் நடைபெறும். மேலும் வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை,தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படும்.
பக்தர்களின் துயர் தீர்த்து அருள் பாலிக்கும் முருகன் இங்கு காலையில் பாலகனாகவும் மதியத்தில் இளைஞனாகவும் இரவில் வயோதிகனாகவும் காட்சி தருவது எங்கும் காணா சிறப்பு உடையது.
ஆண்டார்குப்பம் செல்வோம் அழகு முருகன் அருள் பெறுவோம்.
அட்சரபிரம்மம்
க்ஷரம் என்றால் அழியக்கூடியது என்று பொருள்.அக்ஷரம் என்றால் அழியாதது ,ஒலிகளுக்கெல்லாம் தாயாக விளங்கும் ஓம் எனும் பிரணவ மந்திரம் அக்ஷரபிரம்மமாகும்.ஒலி வடிவில் உள்ள பரம்பொருள் என்க.
அங்கார சதுர்த்தி
மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தி செவ்வாய்கிழமை வந்தால் அங்காரக சதுர்த்தி எனப்படும் அன்றுதான் அங்காரகன் விநாயகரை வழிபட்டு அருள் பெற்றநாள்.
லட்சுமி
மாவிலை,வாழை, வெற்றிலை, மஞ்சள்,குங்குமம்,திருமண்,ஸ்ரீசூர்ணம்,துளசி, பசுவின் பின் பாகம், யானையின் முன்பாகம்,மணியின் நாக்கு, பெண்மார்பு, அன்னம்,உப்பு,நெய், வில்வம் இவையாவும் மகாலட்சுமி அம்சமாகும்.
பிரதட்சணம்.
சுபகாரியங்களில் பிரதட்சணம் செய்யும் போது பெரியோர்கள் முன்பும் சிறியோர்கள் பின்பும் ஆடவர்கள் முன்பும் பெண்கள் பின்பும் செல்லவேண்டும் பெண்கள் முன் செல்வது சுபகாரியத்திற்கு கூடாது.
நன்றி: தெரிந்து கொள்வோம்!
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை எழுதலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
Comments
Post a Comment