சிரிக்க வைத்த சிரிப்புகள்!

சிரிக்க வைத்த சிரிப்புகள்!

தலைவர் சந்தோஷப்படுற மாதிரி எதை வாங்கிக் கொடுக்கலாம்?
ஜாமீன் வாங்கிக் கொடுங்க!
     சிக்ஸ்முகம்


அந்த விஞ்சானிகளுக்கெல்லாம் நெத்தியிலே என்ன காயம்?
பறக்கும் தட்டை பாக்கணும்னு சொன்னாங்க ... அதான் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்!
      ப.ராமகிருஷ்ணன்

கோயில் உண்டியலை ஏன் உடைத்தாய்?
என்ன எசமான் ... தெரியாதமாதிரி கேக்கறீங்க... இதான் உங்க முதல் கேஸா?....
    ஞா.ஞானமுத்து.

ஆனாலும் எதிர் வீட்டு பங்கஜத்துக்கு பணத்திமிர் அதிகம்..
எப்படி சொல்றே?
காஞ்சிபுரம் பட்டுப் புடவை மேலே வடாம் உலர்த்தியிருக்கா!
    எஸ். மஞ்சுளா

தலைவர் ஏன் கோபமா இருக்கார்?
தேர்தல் முடிந்தபின்புதான் அவரை கூட்டணிக்கு கூப்பிட்டாங்களாம்.
      புவனை குணா

ஹலோ டாக்டர் உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரி?
எப்ப வந்தாலும் ஃப்ரி கிடையாது...ஃபீஸ் வாங்குவேன்!
     வி.சாரதி டேச்சு
உன்னை திகாருக்கு அனுப்பிடப் போறேன்...!
இப்ப என்ன பெரிசா சாதிச்சிட்டேன்னு இந்த மரியாதை எசமான்!
        சிவம்.

எங்க ஏரியாவில மின்சாரமே வர்றது இல்லே!
  அதுக்காக கரண்ட் கம்பியிலே பாவாடை ஜாக்கெட்டை எல்லாம் துவைச்சு காயப்போடுறதா?
       சிவம்

தலைவரோட வீடு பூட்டியிருக்கே குடும்பத்தோட கோயிலுக்கு போயிருக்காரா?
குடும்பத்தோட ஜெயிலுக்கு போயிருக்காரு!
      பா.ஜெயக்குமார்

தலைவர் ரொம்ப ஜொள்ளுன்னு எப்படி சொல்றே?
அமலாக்கப்பிரிவு வந்து விசாரிக்கும்னு சொன்னா அமலாபால் வந்து விசாரிப்பாங்களான்னு கேட்கிறாரு.
    பா.ஜெயக்குமார்.

நன்றி : விகடன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை எழுதலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!

Comments

  1. அட இது நல்லா இருக்கே

    ReplyDelete
  2. "என் ராஜபாட்டை"- ராஜா said...

    வலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
    நன்றி ராஜா! வலைப்பூ வருகைக்கும் விமரிசனத்திற்கும் பலருக்கு வலைச்சரம் வாயிலாக அறிமுகம் செய்ததற்கும் நன்றி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2