கனிமொழியின் அரசியல் எதிர்காலம் காங்கிரஸ் கையில்?

  திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் அரசியல் எதிர்காலம், குறிப்பாக டெல்லி அரசியல் வாழ்க்கையின் அடுத்த கட்டம் காங்கிரஸ் கையில் இருப்பதாக அரசியல் அரங்கில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் அன்பு மகள் கனிமொழி தற்போது திமுக ராஜ்யசபா உறுப்பினராக உள்ளார். கனிமொழி கடந்த 2007 ம் வருடம் ஜூன் மாதம் ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றார். இவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2013 ம் வருடம்) ஜூன் மாதம் முடிவுக்கு வருகின்றது.

கனிமொழி மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக வேண்டும் என்றால் அதற்குரிய சட்ட மன்ற உறுப்பினர்கள் திமுக வசம் இல்லை. இதனால் அவர் மீண்டும் ராஜ்யசபா உறுப்பினர் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியாவையே உலுக்கிய 2ஜி வழக்கில் கனிமொழி சிக்கிய சமயத்தில் அவரை பாதுகாத்தது எம்.பி. பதவி தான் என்ற வாதம் அரசில்வாதிகள் மத்தியில் உள்ளது. இதனால் அவர் மீண்டும் எம்.பி. ஆனால் தான் 2 ஜி வழக்கில் அவருக்கு போதிய பாதுகாப்பு கிடைக்கும் என திமுக தரப்பு கணக்கு போடுகின்றது. இதனால் கனிமொழியின் ராஜ்யசபா உறுப்பினர் பதவி முக்கியத்துவம் பெறுகின்றது.

ஆனால் தற்போது தமிழகத்தில் போதிய எம்.எல்.ஏக்கள் பலம் திமுகவிடம் இல்லை. இந்த நிலையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் திமுகவுக்கு ஒரு சின்ன சான்ஸ் கிடைத்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்தேயாக வேண்டும் என்ற நிலையில் தி்முக உள்ளது. அப்படிச் செய்தால், கனிமொழியை மீண்டும் ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் கை கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு திமுகவிடம் உள்ளது. இதனால் காங்கிரஸ் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அதை திமுக ஆதரிக்கும் என்று கருதப்படுகிறது.

இப்படிச் செய்வதன் மூலம் கனிமொழியை ராஜ்யசபாவுக்கு அனுப்ப காங்கிரஸ் உதவலாம். தமிழகத்திலிருந்து முடியாவிட்டால் காங்கிரஸ் நல்ல பலத்துடன் உள்ள வேறு எந்த மாநிலத்திலிருந்தாவது அவரை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம், காங்கிரஸை மட்டும் நம்பியிராமல் தமிழகத்திலேயே பிற அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறவும் திமுக ரகசியமாக செயல்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாக விஜயகாந்த் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றின் ஆதரவைப் பெறவும் திமுக ரகசியமாக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்போது தெரிகிறதா, புதுக்கோட்டையில் ஏன் திமுக போட்டியிடவில்லை என்று....!

டிஸ்கி!  குடும்ப பாசம் எந்த அளவுக்கு  நாட்ட கெடுக்குது பாத்தீங்களா?!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!