நாடு முழுவதும் விளைச்சல் அதிகரிப்பு... விலையை குறைக்க மறுக்கும் 'சில்லரைகள்'!
சென்னை: இந்தியா முழுவதும் விளைச்சல் அதிகரிப்பால், அனைத்து வகை மளிகைப் பொருள்களின் கொள்முதல் விலையும் குறைந்துள்ளது. ஆனால் உள்ளூரில் சில்லறை வியாபாரிகள் கொஞ்சம் கூட விலையைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அனைத்து மளிகை பொருட்களின் கொள்முதல் விலையும் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சில்லறை வர்த்தகர்கள் ஒரு சதவீதம் கூட விலையைக் குறைக்காமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பருவமழை விவசாயத்திற்கு ஏற்றப்படி நன்றாக பெய்துள்ளது. இதனால் துவரம்பருப்பு, கரும்பு, மல்லி, உளுந்து, மஞ்சள், பூண்டு உள்பட அனைத்து பொருட்களின் விளைச்சலும் அதிகரித்து உள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ குண்டு மிளகாய்வத்தல் ரூ.220-க்கு விற்பனையானது. நீள மிளகாய் கிலோ ரூ 130 வரை விற்பனையானது. பூண்டு ரூ 140 வரை விற்பனையானது. இப்போது எக்கச்சக்க விளைச்சல் இருந்த போதும், எந்தப் பொருளின் விலையும் குறையவில்லை. மிளகாய், பூண்டு போன்றவை இப்போதும் கிட்டத்தட்ட இதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. கரும்பு விளைச்சல் பெருகி, சர்க்கரை உற்பத்தி அதிகரித்த...