நான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை!

நான் “பிகரை மெயிண்டெய்ன்” பண்ணிண கதை!

அப்ப நான் பிளஸ்டூ முடிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்த நேரம். கரஸ்ல பி.காம் அப்ளை பண்ணிட்டு பசங்களோட கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன். வேலை வெட்டி இல்லாம சும்மா சுத்தி வரானேன்னுதான் இந்த பிகர் மெயிண்டெய்ன் பண்ற வேலையை அப்பா வாங்கித் தந்தாரு!
    என்னது நல்ல அப்பா நல்ல குடும்பம்னு பேசறது காதுல விழுது! அவசரப்படாம முழுசா படிச்சுட்டு அப்புறமா உங்க கமெண்ட சொல்லுங்க! வடிவேலு மாதிரி அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு அப்புறமா வருத்தப்படாதீங்க! நம்ம வீட்டு பக்கத்துல ஒரு கோயில்.திருவாலீஸ்வரர் கோயில்னு பேரு!  ஆகா கோயிலுக்கு வர்ற பிகரை கரெக்ட் பண்ணிட்டியா தம்பின்னு பேசாதீங்க  இப்பதானே சொன்னேன் முழுசா படிங்கன்னு!
    எங்க விட்டேன்! ஆங்! திருவாலீஸ்வரர் கோயிலை பரம்பரையா நாங்க தான் பூஜை செய்துகிட்டு வந்தோம். அறநிலையத்துறையை சேர்ந்த கோயில் அது. பெருசா வருமானம் ஏதும் கிடையாது. குத்தகை தாரர்கள் நிலத்தை பயிரிட்டு சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க! சாமிக்கு பசிக்குதாங்கறதை பத்தி அவங்களுக்கு கவலை இல்லை! அப்ப நம்ம அம்மா ஆட்சி முத முதலா அமைச்சி அறநிலையத்துறை சார்பா தர்மகர்த்தாக்களை நியமிச்சாங்க!
    எங்க கோயிலுக்கும் ஒரு டிரஸ்டி வந்தார். அதுல என்ன விசயம்னா! ஒரு கோயிலுக்கு மூன்று அறங்காவலர்கள் அதுல ஒருத்தர் தலைவர்னும் மத்த ரெண்டு பேரும் அவருக்கு உறுதுணையா இருக்கனும்னு ஏற்பாடு. அதுல ஒருத்தர் ஆதிதிராவிடரா இருக்கணும்.
       எங்க ஊருல பலராமன்னு ஒருத்தரும் துரைன்னு ஒருத்தரும் மனு செஞ்சு போஸ்ட் வாங்கிட்டாங்க! ஆதிதிராவிடர் யாரும் அப்ளை செய்யலை! அதனால இவங்களை நியமிக்க அறநிலையத்துறை முன் வரலை! அப்புறமா இவங்களா நாகன்னு ஒருத்தரை அப்ளிகேசன் போட வைச்சு  மூணு பேரா போயி தர்மகர்த்தா போஸ்ட் வாங்கிட்டாங்க.
    இதுல நாகனுக்கு ஒண்ணும் தெரியாது! அப்பாவி! யார் சொன்னாலும் தலையாட்டக்கூடியவர். துரை டீக்கடை வைச்சிருந்தவர்! ஊரைவிட்டு வெளியூருக்கு கடன் தொல்லையால கிளம்பி போனவரு! பலராமன் இவரும் படிக்காத ஆளுதான். இவர் ரொம்ப நல்லவன் போல காட்டிகிட்டு அறங்காவலர் குழுத் தலைவரா போஸ்டிங் வாங்கிட்டாரு.
    அப்ப இ.ஓ ஆபிஸ் ஆண்டார்குப்பம் முருகன் கோயில்ல இருந்தது. சதாசிவம்கிறவர்தான் இ. ஓ. இவர் ஒரு தொலுரிச்சி பழம் முழுங்கி! பாக்க பக்திப்பழமா தெரிவார். ஆனா இவர் மேல துறை ரீதியா நடவடிக்கை கூட எடுத்திருக்காங்க. இவர் கொஞ்சத்துல கோயில் கணக்கு வழக்கை பலராமன் டிரஸ்டிகிட்ட கொடுக்கவே இல்லை.
  பலராமன் நடையா நடந்து ஒரு ஆறு மாசத்துக்கு அப்புறமா கணக்கு கட்டுங்களை வாங்கி வந்தார். கணக்குதான் வந்துதே தவிர கையில நயா பைசா இருப்பு தரலை! கணக்கு புத்தக இருப்பு ஒரு ரூபாய் ஐம்பது காசு மட்டுமே காட்டியது.
 இந்த சமயத்துலதான் கணக்கு யாரு எழுதறதுன்னு கேட்டப்போ இவன் சும்மாத்தான் இருக்கான். தினமுமா எழுதப் போறான். மாசத்துக்கு ஒருநாள் நீ செஞ்ச செலவை சொன்னா எழுதிடறான் என்று என்னை கை காட்டினார் அப்பா. நானும் தலை ஆட்டினேன். அதற்கு நாற்பது ரூபாய் சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டது. விதி அப்போதுதான் விளையாடியது என்னோடு!
    அந்த கணக்குபுத்தகத்தை புரட்டினால் பெரும்பாலும் பொய்க் கணக்குகள்! அடடா இப்படி பொய் எழுதி வைத்திருக்கிறார்களே என்று வருந்திய நானே அவ்வாறு எழுத நேர்ந்தது. பலராமனும் பொய் சொல்ல ஆரம்பித்தார். ஒருநாள் கணக்கு பார்த்து இருப்பு சொல்வேன். சரி என்று செல்பவர் இரண்டு நாட்களில் திரும்பவும் இருப்பு எவ்வளவு என்பார். அதே இருப்பை சொன்னால் அவ்வளவு இல்லையே! சரியா பாரு நான் சொன்னதை நீ சரியா எழுதலை மறந்திருப்பே என்பார்.
   எனக்கு அவர் செய்யும் தில்லு முல்லு புரிந்து விட்டது. ஒரு நாள் கோபத்தில் படிச்சவன் கிட்டே வேலை செய்யலாம்! உன்னை மாதிரி ஆளுங்க கிட்ட செய்ய முடியாது என்று நோட்டை தூக்கி எறிந்தேன். அவரும் கோபத்தில் திட்டிவிட்டு போய்விட்டார். பின்னர் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வந்து எழுதச் சொன்னார்.வீட்டில் உள்ளோர் வற்புறுத்தலில் எழுதினேன்.
   இறுதியில் அவரது பதவிக் காலம் முடியும் போது அந்த ஈ. ஓ வைத்த மாதிரி இல்லாமல் சில நூறுகளை இருப்பாக காண்பித்து கணக்கை முடித்துக் கொடுத்தேன். நான் சிவன் சொத்தை சாப்பிடா விட்டாலும் சாப்பிடுபவனுக்கு உடந்தையாக இருந்தோமே என்ற குற்ற உணர்வு என்னுள். கடைசி சில மாதங்களுக்கு சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை!
   இறுதியில் அவர் பொறுப்பை ஒப்படைத்த பின் தெய்வம் அவரை தண்டித்தது! ஒரு ஆக்ஸிடெண்டில் சிக்கி இறக்கும் அளவிற்கு சென்று திரும்பி வந்தார். இருந்தும் இன்னும் அவர் திருந்தவில்லை!
    இப்படியும் சிலர்! இதுதான் நான் பிகர் மெயிண்டெய்ன் பண்ணுண கதை! நீங்க வேற எதையாவது நினைச்சு உள்ள வந்திருந்தா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

  1. சும்மாவா சொல்லியிருக்காங்க பெரியவங்க பிகரை மெயின்டைன் பண்ணுறது அவ்வளவு சுலபமல்ல, இப்போவாவது புரிந்ததே.

    ReplyDelete
  2. ஹா ஹா ஹா ஹா !செம செம நான் என்னவோ நினைத்துக்கொண்டுதான் வந்தேன் வந்து பார்த்தால் நீங்க எழுதிய விதம் சூப்பர்.

    நிறைய நல்ல நல்ல பதிவுகள் படிக்க இருக்கிறது உங்க வலையில், சரி உங்களை பின்தொடர்கிறேன்.வந்து படிக்கிறேன்,

    உங்களுக்கும் நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
    http://semmalai.blogspot.com/

    ReplyDelete
  3. அடடா! என்னவோ நினைச்சு படிக்க வந்தா, என்னமோ ஆயிடுத்தே. சூப்பர். நல்ல நகைச்சுவையோட எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    அப்படியே நேரம் கிடைக்கும் போது எங்க வீட்டுக்கும் வந்துட்டுப் போங்க.
    விலாசம்: http://manammanamviisum.blogspot.in/

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!