தளிர் ஹைக்கூ கவிதைகள் 20

விரிசல்
உலர்ந்து போனது
ஈரம்!


பூக்களை பறித்தார்கள்!
அழவில்லை!
செடி!

திரை விரித்தது வானம்
இருண்டது பூமி!
அமாவாசை!


பிடித்துக் கொண்டது
நகர முடியவில்லை!
மழை!


ஊசி போட்டதும்
காய்ச்சல் வந்தது!
டெங்கு!


வெட்டினார்கள்!
கூடியது ஊர்!
மின்வெட்டு!

 
பறித்து நடுகிறார்கள்
துளிர்க்கிறது
திருமணம்!


வெளிச்சத்துக்கு வந்தன!
நட்சத்திரங்கள்!
அமாவாசை!

துப்பறிந்ததும் 
விரட்டப்படுகின்றன!
எறும்புகள்!


அழகான பூ
மிதிபட்டது!
மிதியடி!

 
கண்கள் மொய்க்கும்
காட்சி பொருள்
நடிகை!


அதட்டி மிரட்டியதும்
அடங்கி போகிறது மழை!
இடி!


குளிர்ந்ததும் 
குளிர்வித்தது 
மேகம்!

மை பூசியதும்
பொட்டு இட்டுக்கொண்டது வானம்!
நிலா!

தொலைந்த இரவு
தேடிக் கொண்டிருக்கிறது!
நகரம்!


உடன்கட்டை ஏறின
உதிரும் பூக்கள்
கதிரவன் மறைவு!



தொலைந்து போயின
துயரங்கள்
குழந்தையின் சிரிப்பு!

புரியவில்லை
இனித்தது
மழலைமொழி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. ovvontrum rasanai...

    vaazhthukkal...

    ReplyDelete
  2. மிகவும் ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. அருமையான கவிதைகள்
    படித்து மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?