புகைப்பட ஹைக்கூ 54

புகைப்பட ஹைக்கூ 54


1.கை போனாலும்
துளிர்த்தது
நம்பிக்கை!

2.நம்பிக்கை
இருக்கையில் எதற்கு
வெறும்கை!

3.தொலைத்தது
வெறும்கை
பிறந்தது நம்பிக்கை!

4.உள்ளம் உறுதியானால்
தள்ளிப் போகும்
ஊன்றுகோல்!

5.இரு கை
இழப்பு அல்ல!
மூலதனமானது நம்பிக்கை!

6.கைவிட்டுப்போனாலும்
கைவிடாது
நம்பிக்கை!

7.இன்னல்கள் சூழுகையில்
கன்னலாய் கைகொடுக்கும்
நம்பிக்கை!

8.உறுதி உரமாயின்
வேர்விடும்
நம்பிக்கை!

9.உலகம் வசமாக
உன்னுள் இருக்க வேண்டும்
நம்பிக்கை!

10.ஊனமானதுஅங்கங்கள்
உறுதிப்பட்டது
நம்பிக்கை!

11.இழப்பில் மூழ்கினால்
வழுக்கும்
நம்பிக்கை!

12.கரம் போனாலும்
சிகரம் தொட்டது
நம்பிக்கை!

13.இருண்ட உலகை
வெளிச்சமாக்கியது
நம்பிக்கை!

14. வலியை
  வலிமையாக்கியது
  நம்பிக்கை!

15. உரமேறியது உள்ளம்!
   வசப்பட்டது உலகம்!
   நம்பிக்கை!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. கைவிட்டுப்போனாலும் கைவிடாது (விடக்கூடாது) நம்பிக்கை... உட்பட அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2