கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு என்ன ப்ராக்டீஸ் பண்ணும்? ஜோக்ஸ்!

சிரிச்சுட்டு போங்க!


1.      தலைவரை கட்சியிலே எதோ பேருக்குத்தான் வச்சிருக்காங்க போலிருக்கு!
இருக்கட்டும் அதுக்காக கட்சியின் பேர் வாளேன்னா வருக வருக! ஃப்ளக்ஸ் வக்கிறது நல்லா இல்லே!
                        வி. சகிதா முருகன்.
2.      பி.எம் செல்லில் இருந்து பேசுறோம்!
கதை விடாதீங்க! பி. எம். மே பேசமாட்டாரு!

                                      கி.ரவிக்குமார்.

3.      இப்ப எல்லாம் தரகர் தன்னோட கேரக்டரையே மாத்திகிட்டாரு!
எப்படி?
புரோக்கருன்னு சொல்லக் கூடாதாம்! “புரோ”ன்னுதான் கூப்பிடனுமாம்.
                        ஃபீனிக்ஸ் பழனி
4
4.      நாங்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டதை குத்திக்காட்டும் வகையில் எங்களுக்கு பொக்லைன் சின்னத்தை வழங்கிய தேர்தல் கமிஷனை வண்மையாக கண்டிக்கிறோம்!
                       ரியாஸ்.
5.நம்ம தலைவர் கேட்காமலேயே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து விட்டாரே நீதிபதி!
  சரக்கு கப்பு தாங்க முடியலையாம்! அதான்!
                      ஆர்.நாகராஜன்.

6.அடுத்தவாரம் திரைக்கு வரவிருக்கும் மன்னா படம் அரசியல் படம் அல்ல! குடும்ப படமும் அல்ல! ஏன்? அது ஒருபடமே அல்ல! எனவே விஷமிகள் பரப்பும் பொய்த் தகவல்களை நம்பாது அனைவரும் அலைகடலென தியேட்டருக்கு வாருங்கள்!
                        கிணத்துக் கடவு ரவி.

7.தலைவர் சிங்கம் 2 பார்க்கப்போறதா சொல்லிட்டு போறாரே! சினிமா எல்லாம் பார்ப்பாரா?
  நீ வேற சின்ன வீட்டுக்கு போறதைதான் அப்படி சொல்லிட்டு போறாரு!
                     கிணத்துக்கடவு ரவி
8. உங்க படத்துல வில்லனே கிடையாதுன்னு சொல்றீங்க! அப்புறம் ஹீரோ யாருகிட்ட சண்டை போடுவாரு?
 அதான் ரீலிஸ் சமயத்துல வெளியில இருந்து நிறைய பேரு வந்துடறாங்களே!
                        ஜேவி
9 தலைவருக்கு ஆஸ்துமா, டயபடீஸ், கிட்னி பெயிலியர்னு ஏகப்பட்ட வியாதி இருக்கு!
  அதுக்காக 2016ல் ஆட்சிக்கட்டிலில் படுத்தே தீருவேன்னு பேசறதா?
                    பர்வீன் யூனூஸ்
10. மன்னர் இரண்டாம் உலகத்துக்கு போறேன்னு சொல்றாரே! படத்துக்கா?
 ம்ஹூம்! பதுங்கு குழிக்கு போறதைத் தான் அப்படி சொல்றாரு!
                     ரியாஸ்.
11. சிங்கத்தை சிறுநரியால் வெல்ல முடியுமா மந்திரி?
   நிச்சயம் உங்களால் எதிரியை வெல்ல முடியாது மன்னா?
                   வி.சகிதா முருகன்.
12. மன்னா எதிரிக்கு கப்பம் கட்டுவதற்கு பதில்
   என்ன செய்யனுமாம்?
   லைஃப் பூரா அவனது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு லைக் பண்ணனுமாம்!
                         பர்வீன்யூனூஸ்
13 ரத்தக்கறை படிந்த கரங்களுடன் விடை பெறுகிறேன்!
  பீட்ரூட் நறுக்கியதற்கு ரொம்ப நன்றி அரசே!
                           சிக்ஸ் முகம்.

14. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம்!
   ஆமாம் வெங்காய வியாபாரியா இருக்காராம்!
                   நா.கி பிரசாத்.
 15, சார் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்! ஆனா சீரியல் முடியறவரைக்கும் குழந்தை பெத்துக்க மாட்டேன்!
   சீரியல் முடிய பத்து இருபது வருசம் ஆகும் பரவாயில்லையா!
                 வி.சாரதி டேச்சு.
16. ஆபரேசனுக்கு பிறகு நான் ”எப்படி இருப்பேன் டாக்டர்”?
 ஆபரேசனுக்கு பிறகு நீங்க எப்படி ”இருப்பீங்க?”
                     எம்.அசொக்ராஜா.
3.      உன் மாமியார் தொல்லை தாங்க முடியலை என்றாயே எப்படி சமாளித்தாய்?
ஊரிலிருந்து ஒரு “கும்கி” மாமியை கொண்டு வந்து சமாளிச்சேன்!
                      ராம்ஜி
19.தங்களின் வாள் தூக்க இயலாத அளவுக்கு மிக கனமாக இருக்குமாமே மன்னா!
   அட! இவ்வளவு சரியாக சொல்கிறீர்களே! உங்களுக்குச் சொன்னது யார்?
 பேரீச்சம்பழ வியாபாரிதான் மன்னா!
                    கே.ஆனந்தன்
20 பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துலதான் குடியிருக்கணும்னு சொல்றது தப்பு விமலா!
  எப்படி சொல்றீங்க!
  நான் மாடி வீட்டுலதானே குடியிருக்கிறேன்!
                       கே.ஆனந்தன்

21 உன் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சா?
  எப்படி கண்டுபிடிச்சே?
பூரிக்கட்டையை எறிஞ்சு பிராக்டீஸ் பண்றாளே!
                            நிர்மலா.
 22.எதுக்காக அந்த ரெண்டு பிச்சைக் காரங்களும் திருவோட்டை மாத்திக்கிறாங்க!
    சம்பந்தி ஆகப் போறாங்களாம்!
                       க.ஜெயகவிதா.

நன்றி: ஆனந்தவிகடன், குமுதம், வாரமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


 

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2