மசாலா டைரக்டர் ஏன் மசாலா படம் எடுப்பதில்லை? ஜோக்ஸ்
1. என்னப்பா சொல்றே? நம்ம
தலைவர் கூட தெருவிளக்குல படிச்சி முன்னேறினவரா? ஆச்சர்யமா இருக்கே?
ஆமா
நைட் லேம்ப் போஸ்ட்ல ஏறி பல்பை கழட்டி வித்துட்டு அந்த ரூபாயில்
புக் வாங்கி படிச்சாரு!
புதுவண்டி ரவீந்திரன்.
2.தாம்பூலப் பை இவ்ளோ பெரிசா இருக்கே/
மாப்பிள்ளைக்கு தர்பூசணி தோட்டம் நிறைய இருக்காம்!
கோவி.கோவன்.
3.நாவலுடன் இஞ்சிமராப்பா இலவசமா?
கதையை
படிச்சி ஜீரணிக்கறதுக்காக தராங்கலாம்!
வாசுதேவன்.
4. தரகரே பெண் பார்க்க வர்ற பிள்ளை
வீட்டுக்காரங்க எல்லோரும் கையோட ஆளுக்கொரு பேப்பர் நாப்கின்
கொண்டுவந்திருக்காங்களே ஏன்?
பெண்
முடிவாகாம அவங்க இந்த அஞ்சு வருசமா எங்கேயும் கையை நனைச்சதே இல்லையாம்!
வெ.சீதாராமன்.
5.நம்ம தலைவருக்கு ’மாலைக்கண்’
அப்படியா எப்போதிலிருந்து?
அவர் தலைவர் ஆனதிலிருந்துதான் தனக்கு யார் யார்
எவ்வளவு பெரிய மாலை போடறாங்கன்றதுலே ‘கண்’ணா இருக்காரே!
வெ.சீதாராமன்.
6. சாயங்காலம் கூவற மாதிரி எங்கேயாவது சேவல்
ஒண்ணு கிடைக்குமா?
எதுக்கு?
எங்க ஆபிஸுக்குதான்!
வி.சாரதிடேச்சு.
7.அடுத்து என்ன சார் கொண்டுவரட்டும்?
ஒருபடி
அரிசி, அரைப்படி உளுந்து கொண்டு வாங்க மாவாட்ட!
வி.சாரதிடேச்சு.
8. உங்களுக்குத்தானே பசின்னு சொல்லி ஓட்டலுக்கு
சாப்பிட போனீங்க எனக்கு எதுக்கு பஜ்ஜி பார்சல் வாங்கிட்டு வந்தீங்க?
கணவனோட
கஷ்டத்துல மனைவி பங்கெடுத்துக்கணும்னு நீதானே அடிக்கடி சொல்லுவே சாப்பிடு!
9.பொண்ணு என்ன சொல்றா?
நீங்கதான் பொண்ணை பிடிச்சுபோச்சுன்னு சொல்லிட்டீங்களே அதனாலே இப்பவே
மாமியாரோட மாதிரிச்சண்டை போட்டு பார்க்கலாமான்னு கேட்கிறா!
வி.சாரதிடேச்சு.
10. ஏன் உங்க டைரக்டர் இப்ப மசாலா படம்
எடுக்கிறதில்லை?
வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்!
வெ.சீதாராமன்.
11.தலைவலி, காய்ச்சல், வாந்தி,பேதி, தலைச்சுற்றல்
இருமல்,சளி எல்லாம் இருக்கு டாக்டர்!
அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் எனக்கு கொடுக்கவேண்டிய பீஸ் இருக்கா?
கிணத்துகடவு ரவி.
12.டேய் உங்க அப்பா எங்கே?
ஹோம்
ஒர்க் பண்ணிட்டிருக்காரு!
என்னது
உன் வீட்டுப்பாடத்தை அவர் எழுதறாரா?
இல்லே! காய்கறி நறுக்கிகிட்டு இருக்காருன்னு
சொன்னேன்!
வி.சாரதிடேச்சு.
13.உங்களுக்கு திடீர்னு இஞ்சின் டிரைவர் வேலை
போயிருச்சாமே ஏன்?
பனி
சார்! பனி!
ஏன்? பனியால என்ன பிரச்சனை?
பனிமூட்டத்துல வழி தெரியலை தமிழ்நாடு எக்ஸ்பிரஸை
மும்பைக்கு ஓட்டிட்டு போயிட்டேன்!
பாஸ்கி
14. டாக்டர் எங்க வீட்டுல நடக்க கூடாததெல்லாம்
நடக்குது! எனக்கு மனசே சரியில்லை!
என்னம்மா சொல்றே? புரியும்படியா சொல்லு!
என்
மாமியார் நடக்கறாங்க!
ஆர்.ராஜ்குமார்.
15. எங்க ஆபீஸ்ல மத்தியானத்துக்கு மேல அரைநாள் லீவு
யாருக்கும் கொடுக்க மாட்டாங்க!
ஏன்?
இதுக்குன்னு ஒருத்தர் முழிச்சிகிட்டு இருந்து
லீவு எடுத்தவரை எழுப்பி அனுப்பனுமே!
வி.சாரதிடேச்சு.
16. இந்த கண்ணாடி என்ன விலைங்க?
முப்பத்தஞ்சு ரூபாய்
கொஞ்சம் பார்த்து சொல்லுங்க!
சொல்றது மட்டும்தான் என் வேலை பார்க்கிறது
எல்லாம் உங்க வேலைங்க!
ஷீபா ஷண்மதி.
17.உங்க அம்மா முடியாம இருந்தாங்களே! என்ன
பண்ணினே?
ரப்பர் பேண்ட் வாங்கி கொடுத்தேன்!
அருண்
18. எஜுகேஷன் லோன் கொடுத்தோமே உங்க பையன் எப்படி
படிக்கிறான்?
கடனேன்னுதான்!
எஸ்.மோகன்.
19. அவங்க அப்பா சாகும்போது சேர்த்து வச்ச பணத்தை
அந்த ஆள் ஒரே நாள்ல அழிச்சுட்டாரு!
ஒரே
நாள்லயா?
ஆமாம் அவங்க அப்பா சாகும்போது நூறு ரூபாய்தானே
சேர்த்து வச்சிருந்தாரு!
வி. சாரதிடேச்சு.
20 என்ன அந்த டாக்டர் எம்.பி.பி.எஸ்னு மட்டும்
போட்டுகிட்டு இருக்காரு பேரே போடலியே?
நான்
தான் சொன்னேனே அவர் பேர் போன டாக்டர்னு!
வி. சாரதிடேச்சு.
21 ஆளுக்கொரு விலங்கு முகமுடி மாட்டிகிட்டு எங்க
கிளம்பிட்டீங்க?
கோயிலுக்குத்தான் கால்நடையா வர்றதா
வேண்டிகிட்டோம்!
நிலா.
22. உன்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை உன்கிட்ட
தனியா பேசனும்னு கூட்டிக்கிட்டு போனாரே என்ன கேட்டார்?
சமையல்ல
உப்பு முன்ன பின்ன இருந்தா சத்தம் போடாம அட்ஜஸ்ட் பண்ணிப்பியான்னு கேட்டார்.
எஸ்.எஸ் பூங்கதிர்.
நன்றி: ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த
கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
nantri!
ReplyDeletesema sirippu...
ஹா... ஹா... தொகுத்தமைக்கு பாராட்டுக்கள்...
ReplyDeleteஅதானே பார்த்தேன் ,எல்லாம் இப்போ எழுதாத எழுத்தாளர்களா இருக்காங்களேன்னு !
ReplyDeleteஅடிக்கடி இப்படி தொகுத்து கடிங்க சுரேஷ் ,நாங்க அனுபவிக்கிறோம் !
சிரிப்பு மத்தாப்புக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். சிரிக்க வைத்து தாமும் சிரித்து வாழ்வோம். பகிர்வுக்கு நன்றீங்க சகோததரே..
ReplyDeleteசிரிப்பு வெடி... அருமை...
ReplyDelete