“சயின்ஸ்”ல வீக்கா இருக்க பெண்ணை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்புவது ஏன்? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


1.      எடுத்துகிட்டு இருக்கற படத்துக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஒரே குழப்பமா இருந்துச்சு!
       அப்புறம்?
     ஒரே குழப்பமா இருக்குன்னு பேர் வைச்சிட்டோம்!
                         -யாக்கோப்
   2. மாப்பிள்ளை ரொம்ப பெரிய இடமாம்..!
      ஆமா… வெங்காய வியாபாரியா இருக்காராம்!
                          நா.கி.பிரசாத்.

 3. நடிகை ரூபஸ்ரீ இருக்காங்களான்னு கேட்டதுக்கு எதுக்கு    அந்தம்மா கோவிச்சுட்டு போறாங்க?
அவங்கதான் நடிகை ரூபஸ்ரீ மேக்கப் இல்லாம இருந்திருக்காங்க!
                 கி.ரவிக்குமார்.
4.      தலைவர் எப்படி கிரானைட் ஊழலிலே மாட்டினார்?
கிரானைட் உடைக்கிற உளியின் ஓசையை ரிங்டோனா வச்சிருந்தாராம்!
                      திரிபுரசுந்தரி.
5.      யாருக்குமே பயிர்க்கடன் தராத மேனேஜர் எப்படி அண்ணா உனக்கு தந்தார்?
நான் கடன் கேட்டது வெங்காயம் பயிர் செய்ய
                         சுரேஷ்.
6.      தங்களுடைய வாள் தூக்க முடியாத அளவுக்கு மிக கனமாக இருக்குமாமே மன்னா?
அட தங்களுக்கு யார் சொன்னது அமைச்சரே!
பேரிச்சம்பழ கடைக்காரன் தான் மன்னா!
                  கே. ஆனந்தன்.

7.ஏம்மா கைக்குழந்தையை தூக்கிகிட்டு ஆபிசுக்கு வந்திருக்கே?
  வீட்டுல தூங்க மாட்டேங்குது சார்!
   இப்பவேவா!
                   கி.ரவிக்குமார்.
8.நான் ஆபிசுக்கு பூ வைச்சிகிட்டு போனா மேனேஜர் திட்டுவாரு!
  அநியாயமா இருக்கே!
 அப்புறம் அவர் வாங்கி வந்த பூவை எங்கே வைப்பாரு?
                 வி.சாரதிடேச்சு.
9.ஏண்டி கமலா குக்கர் ரிப்பேர்னு சொன்னியே விசில் சத்தம் வருதே!
  சும்மா இருக்கற வீட்டுக்காரர் கிட்டே விசிலை கொடுத்து மூணுநிமிஷத்துக்கு ஒருமுறை விசில் அடிக்க சொன்னேண்டி!
                 அ. கிருஷ்ண சாமி

 10. இவர் மன்னருக்கு வைத்தியம் பார்ப்பவர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்?
  போரில் காயம் பட்டுவிட்டது என்று சொன்னதும் முதுகை பார்க்கிறாரே!
                         கே. ஆனந்தன்.
11. மாப்பிள்ளை என் பொண்ணை கண்கலங்காம பார்த்துக்கங்க!
  வெங்காயம் வாங்கற அளவுக்கு எனக்கு வசதி கிடையாது மாமா!
               வி. சகிதா முருகன்

12. ஓலை கொண்டுவந்த புறாவிடமே பதில் ஓலை கொடுக்காமல் பறவைகாய்ச்சல் உள்ள நம் புறாவிடம் பதில் ஓலை கொடுத்து அனுப்புகிறீர்களே ஏன் மன்னா?
  காரணமாகத்தான் தளபதியாரே! புறாக்கறி என்றால் அவன் ருசித்து சாப்பிடுவான்; அத்தோடு அவன் அழியட்டும்!
                     சீர்காழி வி. ரேவதி.

13. பதுங்கு குழியில் உள்ள மன்னருக்கு டிபன் போகுது!
   குழிப்பணியாரம்தானே!
               இ.கோவலன்.


14.கோயிலுக்குள்ளே வந்ததும் தலைவர் சுவிட்ச் போர்டு எங்கேன்னு கேட்கிறாரே ஏன்?
  கோவில்ல விளக்கு போட்டா நல்லதுன்னு ஜோஸ்யர் சொன்னாராம்!
                     மீனா முருகேசன்.
15.என்னது சயின்ஸ்ல வீக்கா இருக்க உன் மகளை நயன் தாரா கிட்ட டியுசன் அனுப்ப போறீயா?
  ஆமா அவங்க கிட்டதான் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகுதுன்னு ஆர்யா சொல்லியிருக்காரே!
                  த. கருணைச் சாமி
16.தலைவருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்பா ஏன்?
  அமலாப் பால் சம்பளம் உயர்த்தும் போது ஆவின் பால் விலை மட்டும் ஏற்றக் கூடாதான்னு அறிக்கை விட்டாராம்!
                      வி.எம். செய்யதுபுகாரி.
17.என் மாமியார் கரும்பு மாதிரி!
  அவ்வளவு இனிப்பானவங்களா?
  ஊகும்! உடம்பு பூரா சுகர்!
                  தீ. அசோகன்.
18.இப்போதெல்லாம் தாங்கள் பெண்களுக்கு குறி சொல்வதில்லையே குருவே!
  போலீஸ் என்னை குறிவைத்து கைது செய்ய பொறி வைத்திருக்கிறார்கள் சிஷ்யா!
               சீர்காழி வி.வெங்கட்.

19. பிறந்தநாளும் அதுவுமா தலைவர் வீட்டுல சி.பி.ஐ ரெய்டு நடக்குதே!
  எவனோ ஒருத்தன் ஆறு கோடி மக்களிடம் நூறுகோடி சம்பாதித்த தலைவர் வாழ்கன்னு போஸ்டர் வெச்சானாம்!
                     வி,எம். செய்யது புகாரி.
20 மன்னா! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து நம் ராணியை கடத்திச் செல்கிறான்!
   ராணி சத்தம் போடவில்லையா?
 ‘சீக்கிரம் சீக்கிரம்’ என்று  அலறினார்கள் அரசே!
                      சீர்காழி.வி.ரேவதி.
21 சென்னைக்கு வர்றப்ப பெரிய கனவோட வந்தவன் நான்!
    அப்படியா?
  பஸ்ல ஏறி உக்காந்ததுமே தூங்கிட்டேன்!
                       கே. ஆனந்தன்.
22. வீட்ல செடி நட எதுக்கு தலைவரை கூப்பிடற?
   அவருதான்  கூட இருந்து குழி பழிக்கறவராச்சே!
                          எஸ். சடையப்பன்.

23. என்கிட்ட ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டு திருப்பி தரும்போது 50 ஆயிரம் ரூபாய் தர்றீங்க!
   நம்ம ரூபாயோட மதிப்புத்தான் பாதியா குறைஞ்சிடுச்சே!
                       பி.பாலாஜிகணேஷ்!

நன்றி: குமுதம் வார இதழ்.


Comments

 1. குமுதத்தின் தில்லாலங் 'கடி ' ஜோக்குகள் இரத்தம் வரவழைத்தது ..அருமை !

  ReplyDelete
 2. ஹா... ஹா... நல்ல துணுக்குகள்...

  ReplyDelete
 3. ரசித்து சிரித்தேன். நல்ல தொகுப்பு

  ReplyDelete
 4. இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. சகோதரருக்கு வணக்கம்..
  தங்கள் பதிவைப் படித்துக் கொண்டே ரசிக்கவும் முடிகிறது. ரசித்துக்கொண்டே படிக்கவும் முடிகிறது. அழகான பகிர்வுக்கு நன்றி சகோ..
  தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா .இன்று போல் என்றுமே
  மகிழ்ந்திருக்கத் தீபத் திருநாள் நல்வழி அருளட்டும் ...

  ReplyDelete
 7. \\\\ அதுக்காக பக்கத்து வீட்டுக்காரரை ‘இன்வெர்ட்டரா’ யூஸ் பண்ணிடாதே! //// இந்தத் துணுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் தரமாக இல்லை ....

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான்! இதை தொகுக்கும் போதே சேர்க்கலாமா வேண்டாமா? என்று நினைத்தேன்! குமுதமே வெளியிட்டுவிட்டார்கள் என்று தொகுத்துவிட்டேன்! தங்களது கருத்தை படித்ததும் தவறு சரி செய்யப்பட்டுவிட்டது. ஜோக் நீக்கப்பட்டு வேறு சேர்க்கப்பட்டுவிட்டது. பெயரிலியாக எதிர்மறை கருத்து கூறவேண்டும் என்பது இல்லை! தவறு இருந்தால் தயங்காமல் சுட்டவும்! தவறுகள் திருத்தப்படும் தளிரில் மிக்க நன்றி நண்பரே!

   Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2