புகைப்பட ஹைக்கூ 53

புகைப்பட ஹைக்கூ 53


1.வீசி எறிந்தவை
ஆற்றியது
பசி!

2.இளமை இருந்தும்
வலிமை இருந்தும்
ஏன் இந்த இழிமை?

3.சிலருக்கு குப்பை
சிலருக்கு உணவு
பசி!

4.தடம் மாறியவர்களிடமும்
கருணைகாட்டுவதில்லை
பசி!

5.பற்றி எரிந்தால்
சுற்றுப்புறம் மறக்கிறது
பசி!

6.மலிவுவிலை உணவகங்கள்
பெருகியும் நலியவில்லை
ஏழையின் பசி!

7.வீதிக்குவீதி உணவகங்கள்
விடைசொல்லவில்லை
ஏழையின் பசி!

8.எச்சம் ஆனவனுக்கு
கிடைப்பது
எச்சில்சோறு!

9.உணவுபாதுகாப்பு
உறுதியளித்தது
எச்சில்சோறு!

10.எறிந்தவை கூட
அணைக்கிறது
ஏழையின் பசி!

11.புசிப்பவனின்
தன்மானம்
விரட்டுகிறதுபசி!

12.உழைப்பை மறந்தவனுக்கு
பிழைப்பாகிறது
எச்சில்சோறு!

13. வளரும் இந்தியாவில்
   தொடரும்
   ஏழ்மை!

14. காய்ந்தவயிறு
   சாய்ந்தது
   மானம்!

15. மாறும் ஆட்சிகள்
   மாறாத காட்சிகள்
   மாநிலத்தின் வறட்சிகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. // மாறும் ஆட்சிகள்... மாறாத காட்சிகள்... //

    உண்மை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!