புகைப்பட ஹைக்கூ 56

புகைப்பட ஹைக்கூ 56


1.சிலருக்கு குப்பை
சிலருக்கு நிறையுது
தொப்பை!

2.இருப்போருக்கு குப்பை
இல்லாதாருக்கு
இதுவாகும் அகப்பை!

3.வீசி எறியும் முன்
யோசித்தால் வறியோர்க்கு
தீரும் ஒருவேளை பசி!

4.உணவுத் தேடலில்
தொலைந்தது
சுகாதாரம்!

5.அமுதசுரபிகளாய்
அவதாரமெடுத்தது
குப்பைத்தொட்டிகள்!

6.எச்சிலுக்கும்
இடம்கொடுத்தது
பசி!

7.தீராத துயரம்
தெருவோர அவலம்
உயராத சமூகம்!

8.வளர்ச்சி வந்தது
தொட்டிக்குள் உணவு
ஏழ்மை!

9.எறிந்த உணவு
அணைத்தது
ஏழையின் பசி!

10.தேடிக்கொண்டே
 தொலைக்கிறார்கள்
 நலவாழ்வு!

11, வளர்ந்து கொண்டே
   போகிறது
   வறுமைக் கோடு!

12. குப்பையில் சோறு
   பாதையில் படுக்கை!
   விளிம்புநிலை மனிதர்கள்!

13. விளைநிலமானது
   வீணானவை நிறைக்கும்
   குப்பைத் தொட்டி!

14.          தேடி சலித்ததில்
தேறியது
    உணவு.

15.          இறைத்தவை
இறைவனானது
    இல்லாதவனுக்கு!

 16. பசி அழைக்க
     பந்திபறிமாறியது
     குப்பைத்தொட்டி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. // தீராத துயரம் - தெருவோர அவலம் - உயராத சமூகம்... //

  பல வரிகள் உண்மை...

  ReplyDelete
 2. // பசி அழைக்க
  பந்திபறிமாறியது
  குப்பைத்தொட்டி!//

  அருமை. . .அருமை

  ReplyDelete
 3. இப்படியாகத்தானே நம் சமூகம்

  ReplyDelete
 4. ஒட்டு மொத்தமாக வறியோரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டிய
  முத்து முத்தான கைக்கூக் கவிதை வரிகள் அருமை சகோதரா !! வாழ்த்துக்கள் சிறப்பான முயற்சி இவைகள் தொடரட்டும் மென்மேலும் .

  ReplyDelete
 5. அமுதசுரபிகளாய்
  அவதாரமெடுத்தது
  குப்பைத்தொட்டிகள்!
  ............................................அருமையான வரிகள்

  ReplyDelete
 6. ஒரு புகைப்படத்துக்கு இத்தனை கவிதைகளா?

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2