ஆட்சி நிலைக்க வேண்டுமா? நவராத்திரி பூஜை பண்ணுங்க!
நவராத்திரியும்
சரஸ்வதி பூஜையும்!
நவராத்திரி
விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. நவம் என்ற சொல்லுக்கு ஒன்பது என்பது
மட்டும் இல்லாமல் புதியது என்ற பொருளும் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக
இந்த விழா கொண்டாடப்பட வேண்டும் என்றே முன்னோர்கள் நவராத்திரி விழா என்று பெயர்
சூட்டியுள்ளனர்.
அன்னை ஆதிபராசக்தியை சரஸ்வதி, லஷ்மி,
துர்க்கையாக மூன்றாக பிரித்து ஒவ்வொரு தேவிக்கும் மூன்றுநாள் வீதம் ஒன்பது நாட்கள்
நவராத்திரி விழா எடுக்கிறோம். தினம் தோறும் மூன்று விதமான ஆடைகள் அணிந்து சரஸ்வதி,
லஷ்மி, துர்காவாக காட்சி தருகிறாள் சோட்டாணிக்கரை பகவதி அம்மன்.
நவராத்திரி
நாயகியர் மூவரின் அம்சமாக அருளுகிறாள் காஞ்சி புரம் காமாட்சி. ‘கா’ என்றால்
மகாலஷ்மியையும், ‘மா’ என்றால் சரஸ்வதியையும் குறிக்கும். உற்சவர் காமாட்சி
அம்பிகையுடன் லஷ்மியும் சரஸ்வதியும் இருக்கின்றனர். இங்கு அம்பிகையின் திருநாமத்தை
ஒரு முறை உச்சரித்தால் கோடி முறை சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால்தான்
காஞ்சிபுரத்திற்கு காமகோடி பீடம் என்ற பெயர் ஏற்பட்டது.
சக்தி பீடங்களில் மணிகர்ணிகா பீடமாக திகழ்வது
காசி. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும் இல்லை என்பது
பழமொழி. காசியில் மரணமடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி
முந்தானையால் வீசி விடுவதாகவும். விஸ்வநாதர் அவர்கள் காதில் ராம நாமம் ஓதி முக்தி
அளிப்பதாகவும் ஐதீகம். விசாலமான கண்களை உடையவளான விசாலாட்சி பக்தர்கள் மீது அருள்
மழை பொழிந்து பாசபந்தங்களை நீக்கி முக்திக்கு வழிகோலுகிறாள்.
நவகிரகங்களின்
சஞ்சாரம் கோள்சாரம் (கோசாரம்) எனப்படும்.
இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில்
புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி கலைகளுக்குரிய அதிபதி.
புத்திகாரகன். அதனால்தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இந்த மாதத்தில்
வழிபடுகிறோம். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சாரதா நவராத்திரி என்கிறோம்.
சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயர் உண்டு.
நான்கு வகையான வசதிகளை பெற விரும்புவர்கள்
நவராத்திரி பூஜை செய்ய வேண்டும். இதை சொல்பவர் வியாச மஹரிஷி. கல்வியில் சிறந்து
விளங்க நினைப்பவர்கள். எந்த செயலிலும் வெற்றி காண விரும்புவர்கள், அரசியலில்
ஆட்சியில் தொடரவிரும்புவர்கள், சுகமான வாழ்வு வேண்டுபவர்கள் நவராத்திரி பூஜை செய்ய
வேண்டும். இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்தை வைத்து
நவராத்திரி ஒன்பது நாட்கள் வழிபாடு செய்து ஏழை எளியோருக்கு தானம் செய்தால்
நினைத்தது நடக்குமாம்.
சரஸ்வதி
பூஜையின் பொருள் தெரியுமா?
பண்டிகைகளில் பூஜை என்ற அடைமொழி
சேர்த்திருப்பது சரஸ்வதி பூஜைக்குத்தான். தீபாவளி, பொங்கல், என்ற பண்டிகைகளுக்கு
கூட அந்த சிறப்பு இல்லை. பூஜை என்ற சொல் பூஜா என்பதில் இருந்து பிறந்தது. பூ
என்றால் பூர்த்தி, ஜா என்றால் உண்டாக்குவது. தான் என்ற அகங்காரம், பொறாமை,
உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணங்கள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. ஆணவம், கன்மம்,
மாயை, இந்த மூன்று மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாக்க செய்வதே பூஜை. சரஸ்வதி
கல்வியாகிய ஞானத்தை தருபவள் ஆதலால் அவளது விழாவிற்கு மட்டும் பூஜை என்ற அடைமொழி
இணைந்தது.
சரஸ்வதிக்கு
வெள்ளை புடவை ஏன்?
சரஸ்வதி ஞான வடிவினள். ஞானம் எங்கிருக்கிறதோ
அங்கு அடக்கம் இருக்கும். என்னதான் கோட் சூட் அணிந்து இருந்தாலும் வெள்ளை வேஷ்டி
சட்டை அணிந்து வருபவர்களுக்கு தனி மரியாதை உண்டு. அப்படி வெள்ளை உடையுடன் வரும்
அறிஞருக்கு சபையே மரியாதை செய்கிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்று
உணர்த்தவும். வெள்ளை மாசு மருவற்றது,ஒருவன் கற்ற கல்வியும் மாசு மருவற்று இருக்க
வேண்டும் என்று எடுத்துக் காட்டவே கலைமகள் வெள்ளை புடவை உடுத்தி இருக்கிறாள்.
(படித்தது
தொகுத்தது)
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
படித்து தொகுத்த தகவல்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteவெள்ளை மாசுமறுவற்றது அதைப் போன்ற கல்வி கற்பவர் மனதும் மாசு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி ய வரிகள் சிறப்புங்க.
ReplyDeleteஅறியாதன பல அறிந்தோம்
ReplyDeleteஅருமையான தொகுப்பு
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
காமாட்சி பெயர் விளக்கம் அறியாதது.
ReplyDeleteபடித்துத் தெளிந்தோம்.
தங்களின் இந்தப்பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_13.html
காலை வணக்கம், வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சகோ. நல்ல தகவல்கள் அடங்கிய பதிவு. தங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்.
ReplyDeletesubbu thatha
www.subbuthatha.blogspot.com
இன்றைய வலைச்சர அறிமுகத்தில் நீங்களும்... வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteவிஜயதசமி நல் வாழ்த்துக்கள்!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பின் சுரேஷ் - இப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2013/10/blog-post_13.html
பதிவை படித்து கருத்தளித்த அனைவருக்கும் எமது நன்றி! இந்த இனிய நாளில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய சகோதரிக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதகவல்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...