எதிர் வீட்டு பொண்ணை பார்த்து ஏன் படிக்க கூடாது? ஜோக்ஸ்!

எஸ்.எம். எஸ் ஜோக்ஸ்!1.      உங்களுக்கு எம்.எஸ் ஆபீஸ் தெரியுமா?
அட்ரஸ் கொடுத்தா போயிட்டு வரேன் !
வராதே அப்படியே போய்டு!

2.      கரும்பிலிருந்துதான் சர்க்கரை எடுக்கறாங்க!
இதை எதுக்கு டாக்டர் சொல்றீங்க?
நீங்கதானே சுகர் எப்படி வருதுன்னு கேட்டீங்க!

3.      காதுக்குள்ள பல்லி போகற வரைக்கும் என்ன பண்ணிகிட்டு இருந்தீங்க?
   காதுக்குள்ள ஒரு ஈ போச்சு! அதை பிடிக்கத்தான்     பல்லி போகுதுன்னு சும்மாயிருந்துட்டேன்!

4.      தேங்காய் கடையில நடந்த திருட்டை எப்படி சார் அவ்வளவு சீக்கிரமா கண்டுபிடிச்சீங்க!
துருவி துருவித்தான்!

5.      இந்த உலகத்துல அதிகமா டிகிரி வாங்கினது யாருன்னு தெரியுமா?
வேற யாரு? சூரியன் தான் நேத்து மட்டும் 108 டிகிரி!6.      மேனேஜர் உடனே எங்க ரூமூக்கு வாங்க. என் மனைவி ஜன்னல்வழியா குதிச்சு தற்கொலை பண்ணிக்க போறா!
அதுக்கு நான் என்ன பண்ண முடியும்!
யோவ்! ஜன்னல் திறக்க மாட்டேங்குது! வந்து சீக்கிரம் திறந்து விடுய்யா!

7.      டாக்டர் எனக்கு சவுண்டு மட்டும்தான் கேக்குது முகம் தெரியவே இல்லை!
இது மாதிரி எப்போ நடக்குது!
போன்ல பேசும்போதுதான் டாக்டர்!

8.      சார் எறும்பு பவுடர் வேணுமா?
 வேணாம்பா..! இன்னிக்கு எறும்புக்கு பவுடர்   வாங்கிட்டு போனா நாளைக்கு கொசு லிப்ஸ்டிக் கேக்கும்!

9.      ஏன் டாக்டர் வயித்துல ஆபரேசன் பண்ணிட்டு தண்ணி குடிக்க சொல்றீங்க?
ஏங்காவது லீக் ஆகுதான்னு பார்க்கத்தான்!

10.  எதிர்வீட்டு பொண்ணு எவ்ளோ நல்ல மார்க் வாங்கியிருக்கா? அவளை பார்த்தாவது நல்லாப் படி!
ஐயோ! அப்பா! அவளைப் பார்த்துதான் நான் படிக்காமலேயே போயிட்டேன்!

11.  ஹாஸ்பிடலுக்கு எப்படிப் போகணும் சார்?
வியாதியோட போகணும்!

12.  ஏண்டா லேட்?
பைக் பஞ்சர் சார்!
பஸ்ல வரலாம்ல!
சொன்னா உங்க பொண்ணு கேக்க மாட்டேங்குது!
13.  ஏன் கமலா முறுக்கு கசக்குது!
நாசமாப் போச்சு! அது கொசுவர்த்திச்சுருள் ரூம்ல வையுங்க!

14.  மன்னா! போருக்குத் தயாராகச் சொல்லி பக்கத்து நாட்டு அரசன் எஸ்.எம்.எஸ் அனுப்பி இருக்கிறான்!
 மேஸேஜ் செண்டிங் பெயில்டு என்று திருப்பி அனுப்பிவிடு!

15.  ஏம்பா காலையில வர்ற பேப்பரை எல்லாம் சாயங்காலம் வாங்கறே!
சூடான செய்திகள்னு போட்டிருந்தான் அதான் ஆறட்டுமேன்னு!

16.  மாப்ளே! நான் எது செஞ்சாலும் என் வீட்டுக்காரி குறுக்கே நிக்கறாடா!
    கார் ஓட்டிப் பாரேன் மச்சி!

17.  உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தம் கேட்குதே எப்படி?
என் மனைவி பாத்திரத்தை தூக்கி மேல அடிப்பாள். என் மேல பட்டா அவ சிரிப்பா! படலைன்னா நான் சிரிப்பேன்!

18.  யாருடா தமிழாசிரியர் காலை பிடிச்சு வாரியது?
 நேத்து ஸ்கூல் விட்டதும் அவர்தான் சார் ‘நாளை காலை வாருங்க’ன்னு சொன்னாரு!

19.  என்னதான் வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா
திருப்பி அடிக்க முடியாது!

20.  பிஸ்கெட் மீது மோகம் கொண்டவனின் காதல் கடிதம்.
டியர்,Marie,நேற்று எனக்கு good day, நாம மீட் செய்தது truly nice, நம்ம காதல் “50 – 50” அளவுதான் வெற்றிபெற்றிருக்கு. அதுக்கு காரணம் உங்கப்பா  tiger மாதிரி இருக்கிறதாலேதான். உன்னோட ‘little heart’ எனக்குத் தருவியா.. அல்லது போடா ‘krack jacck’ என்று ஒதுக்கிவிடுவாயா?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

  1. ஹா ஹா செம கலக்கிடீங்க ......

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2