நீயே நான்! நானே நீ! காளிதாசன் கதை! பாப்பாமலர்!

நீயே நான்! நானே நீ! காளிதாசன் கதை! பாப்பாமலர்!


உஜ்ஜையினி நகரில் சிறுவன் ஒருவன் சூழ்நிலை காரணமாக ஆடு மேய்க்கும் நிலைக்கு ஆளானான். அவனது ஊரில் ஒரு இளவரசி வசித்து வந்தாள். அவள் ஆணவத்தால் ஆசிரியர்களை மதிக்காமல் அவமதித்து வந்தாள். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர் இளவரசிக்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்தார்.
   ஆடு மேய்க்கும் இளைஞனை மெத்தப் படித்த மேதாவி போல வேடமிட்டு அழைத்துச் சென்று சூழ்சிக்கள் செய்து இளவரசிக்கு திருமணம் செய்து வைத்து விட்டார். மணம் முடித்த பின் தான் இளவரசிக்கு தெரியும் தன்னுடைய கணவன் படிக்காதவன். ஒன்றும் அறியாதவன் என்று.
   இளவரசி சிறந்த காளி பக்தை! தன் கணவனை அறிவாளி ஆக்கியே தீருவது என்று காளி மந்திரத்தை கணவனுக்கு கற்றுக் கொடுத்து விரதம் இருந்தாள். சதா சர்வகாலம் காளி நாமம் உச்சரித்த இளைஞன் முன் காளி தோன்றி அவனை உலகம் போற்றும் புலவர் ஆக்கினாள். காளியின் கருணை பெற்ற அந்த கவிஞர்தான் கவி காளிதாசன்.
   இவர் காளியையே ஒரு முறை திட்டிவிட்டார். காளியின் அருளால் மிகப்பெரும் கவிஞரான இவர் போஜராஜனின் அரண்மனையில் அரசவைக் கவிஞராக இருந்தார். அந்த அவையில் கவிஞர் தண்டி, பவ பூபதி போன்ற புலவர்களும் இருந்தனர். மூவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை! விடாக் கண்டன் கொடாக்கண்டனாக கவித்துவம் பெற்றவர்கள்.
  ஒருசமயம் இந்த மூவருக்குள் யாருடைய புலமை உயர்ந்தது? என்ற சர்ச்சை எழுந்தது. காளியிடமே தெய்வ சந்நிதியில் தீர்ப்பு கேட்பது என்று முடிவானது. மூவரும் காளி கோயிலில் வந்து பாடல்கள் பாடினர். தண்டியின் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூபதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் அசரிரீ ஒலித்தது.
    காளிதாசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை! காளிதாசருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டுவிட்டது. அப்படியானால் என் திறமை என்னடி? என்று ஒருமையில் காளியை திட்டிவிட்டார். அவசர கோலத்தில் திட்டிவிட்ட பின் தான் தன்னுடைய தவறை உணர்ந்தார் காளிதாசர். உண்மையில் காளி பதில் தருவதற்குள் அவர் அவசரப்பட்டு விட்டார்.
  மகனே! காளிதாசா! அவசர குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன்! உன்னைப் பற்றி சொல்வதற்குள் அப்படி என்ன அவசரம்? ‘த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய’ என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்னை திட்டிவிட்டாயே என்றதும் காளிதாசர் அழுது விட்டார்.
    ஆம்! அந்த ஸ்லோகத்தின் பொருள் ’நீதானே நான்! நீதானே நான்! நீதானே நான்’ என்பதாகும். அதாவது காளிதாசனும் காளியும் ஒன்று. நீயும் நானும் ஒன்றானபிறகு உனக்கு மிஞ்சிய புலவனேது? என்றாள் காளி.
   என்னே காளியின் கருணை!

ஒன்றின் மேல் நம்பிக்கை வைத்தால் பூரணமாக அந்த நம்பிக்கை இருக்க வேண்டும். கருணை வடிவான அன்னையின் பதிலை பெறுவதற்குள் அவசரப்பட்டார் காளிதாசர். ஆனால் அன்னையின் பதிலை கேட்டு நெகிழ்ந்து விட்டார்.

 நாமும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி நன்னாளில் அன்னையை துதித்து அருள் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. ஆம். அவருக்குப் புலமை வந்தது சுவாரஸ்யமான கதை அல்லவா.
    நம் போன்ற வலைப்பதிவர்களுக்கு அவள் அருள் அவசியமே.

    ReplyDelete
  2. நாமும் சரஸ்வதி பூஜை, விஜயதசமி நன்னாளில் அன்னையை துதித்து அருள் பெறுவோம்!

    ReplyDelete
  3. காளியின் அருள் பெற்ற அவளது தாசனைப் பற்றிய கதை வெகு அருமை!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2