கவர்ச்சி நடிகைகிட்ட கேட்கக் கூடாத உதவி எது? ஜோக்ஸ்!

ஜோக்ஸ்!


 1. தலைவர் ஒரு அப்பாவின்னு எப்படி சொல்றே?
சில்லறை கட்சிகளை கூட்டணியிலே சேர்த்தா பணத்தட்டுப்பாடு நீங்குமான்னு கேக்கறாரே!
                      பெ.பாண்டியன்.

   2.அரசியல்வாதியோட குழந்தைங்கிறது சரியாத்தான் இருக்கு!
     எப்படி சொல்றே?
    விளையாடறதுக்கு உருவ பொம்மை கேட்குதே!
                                 ஜக்கி.

   3.கட்சி ஆபிசுக்கு எதிரே ஓட்டல் நடத்தறவனுக்கு ரொம்ப கொழுப்பு    தலைவரே!
          ஏன்யா என்னாச்சு?
   ஜெயில் சாப்பாடு கிடைக்கும்னு போர்டு வச்சிருக்கான்!

4.தலைவருக்கு வாஸ்து நம்பிக்கை ரொம்ப ஜாஸ்திப்பா!
           என்ன?
  கன்னத்துல விழுந்த ‘அறை’க்கு வாஸ்து பார்க்க வாஸ்து நிபுணரை கூப்பிட்டு இருக்காரே!
                        பி.ஜி.பி. இசக்கி

5.தலைவர் ரொம்ப அப்பாவின்னு எப்படிச் சொல்றே?
  தேர்தல் தோல்வியில் இருந்து நிறைய பாடம் கத்துக்கிட்டோமே.. அதுக்காக தேர்தல் கமிஷணுக்கு ‘டியுசன்பீஸ்’ ஏதாவது குடுக்கணுமான்னு கேக்கறாரே!
                             தாஜ்மைந்தன்.

6. இந்த பையன் அரசியல்வாதியோட மகன்னு எப்படி சொல்றே?
   இங்கிலீஷ் பரிட்சை கேள்வித் தாளை பார்த்துட்டு எனக்கு இங்கிலீஷ் தெரியாது… தமிழ்ல மொழி பெயர்த்துக் கொடுங்கன்னு கேக்கறானே!
                                  எஸ்.ஜி.ஆனந்த்.

7. தலைவர் போதையில பேசறார்னு எதை வச்சு சொல்றே?
 நாட்கள் எண்ணிக்கை குறைவா இருக்கிற பிப்ரவரி மாதத்தை நலிவுற்ற மாதமா அறிவிக்கணும்னு சொல்றாரே!
                               அ.பேச்சியப்பன்.

8. அவரு ரொம்ப டூபாக்கூரா?
    ஏன்?
குற்றப்பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியரா இருக்கிறதா சொல்றாரு!
                            லெ.நா.சிவக்குமார்.

9.தலைவரை பார்க்கணும் அவருக்கு டாக்டர் பட்டம் கிடைச்சிருக்காமே!
      இந்தாங்க டோக்கன்.. போய் அந்த பெஞ்சுல உக்காருங்க!
                           லெ.நா.சிவக்குமார்.

10. அந்த கவர்ச்சி நடிகை ஏன் குடுகுடுப்பை காரன் மேல ரொம்ப கோபமா இருக்காங்க!
துணி ஏதாச்சும் இருந்தா போடுங்கன்னு கேட்டானாம்!
                             உஷாசாரதி.

11.தலைவர் மேல ஊழல்புகார் வந்ததும் நிருபர்கள் எல்லோருக்கும் வெள்ளைப் பேப்பரை வரிசையா கொடுத்தாரே என்ன விசயம்?
      வெள்ளை அறிக்கை தராராம்!
                          தேனி.முருகேசன்.

12.சோப்பு விளம்பரத்துல நடிக்க ஒரு பொண்ணு வேணும்!
    பொண்ணு அழகா இருக்கணுமா?
    இல்ல அழுக்கா இருக்கணும்!
                      உஷாசாரதி.

13.நம்ம மன்னர் வித்தியாசமானவர்னு எதைவச்சு சொல்றே?
     போர்க்களத்தில் ‘கல்’லைக் கவ்விக்கிட்டு வந்துருக்காரே!
                          சண்முகி.
14.டாக்டர் என் மனைவியை டெஸ்ட் பண்ணாமலே அவளுக்கு சுகர் இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?
 காதுக்குள்ள எறும்பு புகுந்துடுச்சுன்னு சொன்னீங்களே!
                             சி.பி.செந்தில்குமார்.

15. என்ன சிஸ்டர் இது ட்ரிட்மெண்ட் பீஸோட ‘எஜுகேஷன் பீஸ்’ இருநூறு ரூபாய் சேர்த்து போட்டிருக்கீங்க!
  டாக்டர் எம்.பி.பி.எஸ் படிக்கிறார் இல்லையா?
                                 வெ.ராஜாராமன்.

16.எக்ஸ்ரே படத்தை உங்க நாய் தூக்கிட்டு போவுது டாக்டர்!
     எங்கே எலும்பு கிடைச்சாலும் அது விடாது!
                       எஸ்.பி.வளர்மதி.

17.எதற்காக நம்ம தலைவருக்கு வைக்கோல் மாலை போடறாங்க?
    கட்சிக்காக மாடா உழைச்சாராம்!
                         டி.சேகர்.

18 கால் உடைந்த உங்க தாத்தாவை ஏன் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகாம ஜோசியர் கிட்ட அழைச்சிட்டு போறீங்க?
அந்த ஜோசியர்தான் நடக்க போறதை சொல்வாருன்னு சொன்னாங்க!
                           தீபிகாசாரதி.

19. அவர்தான் எனக்கு மெக்கானிக் தொழிலை கத்துக் கொடுத்தவர்டா!
    ஓ! அதனாலதான் அவரை உன்னோட ‘ஸ்குரு நாதர்’னு சொல்றியா?
                          பி.கவிதா.

20. ஏண்டா நண்பா சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கியே பேசாம பீட்டர்ங்கிற உன் பேரை ‘ரிபீட்டர்’னு மாத்திக்க!
                               ஜீவா.

21. அவரு தான் செய்யற பந்தல் தொழிலை உயிருக்குயிரா நேசிக்கிறாரு!
       அப்படியா?
ஆமா! அவருடைய பொண்ணுக்கு ‘ஷாமியானா’ன்னு பேர் வச்சிருக்கார்னா பாரேன்!

22 நான் நாயா இருப்பேன்னு சொன்னது தப்பா போச்சு!
ஏன் தலைவரே!
மக்கள் கல்லெடுத்து அடிக்கிறாங்களே!
                       ஏ. மூர்த்தி.

நன்றி: தினமலர்-வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!Comments

 1. ஹா.... ஹா... நல்லதொரு தொகுப்பு...

  ReplyDelete
 2. ஆனால் இப்பொழுதெல்லாம் இது போன்ற நகைச்சுவைகளின் வடிவங்கள் மாறிவிட்டது தானே? அதற்குப் பதிலாக கீச்சுகள் இணையதள எழுத்தாளர்கள் என்று வடிவம் மாறிவிட்டது.

  ReplyDelete
 3. கவுச்சி நடிகைகள்

  கவிதை எழுத நல்ல தலைப்பு

  ReplyDelete
 4. கிராமத்து மாணவர்களை படிக்க வைக்கும் டியுசன் ஆசிரியன்,

  உங்களை வணங்கத் தோன்றுகின்றது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2