புகைப்பட ஹைக்கூ 52

புகைப்பட ஹைக்கூ 52


தள்ளாமை வந்தும்
விரட்டுகிறது
இல்லாமை!

ஓய்வெடுக்கமறுக்கிறது
உழைத்து பிழைத்த
உடல்!.

கால்நடைகள் மாறி
கால்நடையானது
வண்டி!

தகிக்கும் வெயில்
தளர்வடைய வைத்தது
தள்ளுபவரை!

தள்ளுவதால்
தள்ளுகிறது
குடும்பம்!

இயந்திர உலகில்
மனித
இயந்திரம்!

சுட்டெறிக்கும் சாலை
அணைத்தது
பசி!

பாரம் ஏற்றுகையில்
இறங்குகிறது
குடும்பபாரம்!

தள்ளாடும் வயதானாலும்
தளரவில்லை
நம்பிக்கை!

வலி நிறைந்தாலும்
வழி தவறவில்லை!
முதியவர்!

 முதுமை பிறந்தாலும்
 முடியவில்லை
 உழைப்பு!

சோர்ந்தது உடல்
 சோரவில்லை
மனம்!

 சுமக்கும் கவலைகள்
 இறக்கிவைக்கப்படுகிறது!
 பாரம் தூக்கிகள்!

 வண்டி நிறைந்ததும்
 நிறைகின்றது
 வறுமையின் வயிறு!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!





Comments

  1. தள்ளாமை வந்தும்
    விரட்டுகிறது
    இல்லாமை!

    ஓய்வெடுக்கமறுக்கிறது
    உழைத்து பிழைத்த
    உடல்!...............அருமையான வார்த்தைகள்

    ReplyDelete
  2. சோர்வடைந்த போழ்தும்
    சோர்வடைய வில்லை
    மனசு ....

    ReplyDelete
  3. சோர்வடைந்த போழ்தும்
    சோர்வடைய வில்லை
    மனசு ....

    ReplyDelete
  4. அனைத்தும் அருமை... முக்கியமாக :

    /// வலி நிறைந்தாலும்
    வழி தவறவில்லை... ! ///

    ReplyDelete
  5. பள்ளிக் குழந்தைகளிடம் ஒரு சுவாரஸ்யமான உரையாடல்... பறந்து வாங்க :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

    ReplyDelete
  6. முதுமை பிறந்தாலும்
    முடியவில்லை
    உழைப்பு!//

    வலி நிறைந்த வரிகள்...

    ReplyDelete
  7. //தள்ளாமை வந்தும்
    விரட்டுகிறது
    இல்லாமை!//
    நீங்கள் எழுதியிருக்கும் முதல் ஹைக்கூ மனதை தொட்டது.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  8. மாடாட்டம் உழைக்கலங்க !
    மாடாகியே
    பிழைக்கிறேங்க !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2